நிலாவரை .கொம்

siruppiddy

வியாழன், 24 மே, 2018

ரொறன்ரோ மாநகர வீதியில் கட்டிப் புரண்டு சண்டை போட்ட இளம் பெண்கள்

கனடா ரொறன்ரோ மாநகர வீதியில் நடு வீதியில் கட்டிப் புரண்டு சண்டை போட்ட இளம் பெண்களை பொலிஸார் வளைத்துப் பிடித்தனர்….. அண்மைக்காலமாக ரொறன்ரோவில் இவ்வாறான வன்முறைச் சம்பவங்கள் 
அதிகரித்து வருகின்றன.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


செவ்வாய், 22 மே, 2018

லண்டனில் இலங்கை தமிழ் இளைஞன் படுகொலை

பிரித்தானிய தலைநகர் லண்டனில் இலங்கை தமிழ் இளைஞர் ஒருவர் மர்ம நபர்களால் தாக்கப்பட்டு கொலையான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
பிரித்தானிய தலைநகர் லண்டனில் இலங்கை தமிழ் இளைஞர் ஒருவர் மர்ம நபர்களால் தாக்கப்பட்டு கொலையான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த துயர சம்பவம் தென் லண்டனில் அமைந்துள்ள Mitcham பகுதியில் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி
 வெளியிட்டுள்ளது.
வாழ்வாதாரம் தேடி பிரித்தானியா சென்ற குறித்த இளைஞரின் குடியிருப்புக்கு அருகாமையிலேயே இந்த சம்பவம் நடந்துள்ளதாக
 தெரியவந்துள்ளது.
அத்துடன், உத்தம வில்லன் என கூறப்படும் இந்த இளைஞர் மிகவும் பணிவானவர் மற்றும் அன்பானவர் என அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


செவ்வாய், 8 மே, 2018

அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முற்பட்ட இலங்கையர்கள் கைது

அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கு சென்ற 131 இலங்கையர்கள் மலேசியா பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.இது குறித்து இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கு, மலேசிய பொலிஸார் அறிவித்துள்ளனர்.சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்டவேளை, மலேசிய தெற்கு கடல் பிரதேசத்தில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் 98 ஆண்கள், 24 பெண்கள் மற்றும் 7 சிறுவர்களும் உள்ளடங்குகின்றனர்.குறித்த இலங்கையர்களை அழைத்துச் சென்ற இந்தோனேஷிய நாட்டவர்கள் 3 பேர் மற்றும் மலேசிய நாட்டவர்கள் 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குடிவரவு குடியகல்வு விதிமுறைகளை மீறியமை, மனித கடத்தல், பொருள் கடத்தல் போன்ற குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் இவர்கள் யொகோ பாரு எனும் தடுப்பு முகாமில் தடுத்து 
வைக்கப்பட்டுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் அகதி முகாமைத்துவ முகவர் நிலையத்தினால் 43 பேருக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு இருந்தமையும், ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.சுமார் ஒரு வருடங்களின் பின்னர் வெளிநாட்டுக்குள் சட்டவிரோதமாக குடியேற முயன்ற பெருந்தொகையினர் கைது செய்யப்பட்டுள்ளனர் என மலேசிய பொலிஸார்
 தெரிவித்துள்ளனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>வியாழன், 3 மே, 2018

அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்படவுள்ள தமிழ் குடும்பம்!

இலங்கை குடும்பம் ஒன்று அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கைக்கு நாடுகடத்தலை எதிர்நோக்கியுள்ளது.
இந்த நிலையில் இந்த இலங்கை தமிழ்க் குடும்பம் தொடர்பில், மெல்போர்ன் நீதிமன்றம் நாளை தீர்மானிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச ஊடகங்கள் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளன.
நடேசலிங்கம், பிரியா என்ற குறித்த இலங்கை தம்பதியினருக்கு, அவுஸ்திரேலியாவில் பிறந்த இரண்டு குழந்தைகள் உள்ளன.
இந்தநிலையில், அவர்களின் நாடு கடத்தலை எதிர்த்து, அகதிகள் சபை நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது.
அவர்களின் நாடு கடத்தலைத் தவிர்க்க சாதகமான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, தமிழ் அகதிகள் சபையின் பேச்சாளர் அரன் மயில்வாகனம் தெரிவித்துள்ளார்..
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>