நிலாவரை .கொம்

siruppiddy

வெள்ளி, 27 மே, 2022

குரங்கு அம்மையால் கனடாவில் 16 பேருக்குபாதிப்பு உறுதி

கனடாவில்16 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.பாதிப்புக்குள்ளான 16 பேரும் அங்குள்ள கியூபெக் மாகாணத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிப்புக்குள்ளானவர்கள் அடையாளம் காணப்பட்டு, உள்ளூர் கிளினிக்குகளில் சிகிச்சை பெறுவதாக கனடா பொது சுகாதார துறை 
தெரவித்துள்ளது.
அவர்களிடம் பரிசோதனைக்காக மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. ஒரு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, கியூபெக் மாகாணத்துக்கு பொது சுகாதார துறை சிறிய அளவில் ‘இம்வாமுனே’ தடுப்பூசிகளை அனுப்பி வைத்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
ஐரோப்பாவில் பரவத் தொடங்கியது
குரங்கு அம்மை நோய் முதலில் ஐரோப்பாவில் பரவத் தொடங்கியது. முதலில் பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளில் சிலருக்கு இந்தத் தொற்று உறுதிசெய்யப்பட்டது. பின்னர் அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவரும் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>


ஞாயிறு, 22 மே, 2022

இலங்கை குடும்பத்தினருக்கு அவுஸ்திரேலியாவில் கிடைத்த அனுமதி

தொழிற்கட்சி ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரி வந்த இலங்கை குடும்பம் பல வருடங்களின் பின்னர் குயின்ஸ்லாந்தில் உள்ள Biloela நகரில் குடியேற அனுமதி வழங்கப்படவுள்ளது.
தேர்தலில் வெற்றி பெற்றால், இலங்கை குடும்பத்தினருக்கு Biloela நகரில் குடியேற அனுமதி வழங்கப்படும் என தொழிற்கட்சி, 
முருகப்பன் நடேசலிங்கம்- கோகிலபத்மப்பிரியா மற்றும் அவர்களின் இரண்டு பிள்ளைகளான கோபிகா மற்றும் தர்னிக்கா ஆகியோருக்கு உறுதிமொழி வழங்கியிருந்தது.
தொழிற்கட்சியின் மேற்கு அவுஸ்திரேலியாவின் பிரேன்ட் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகியுள்ள Madeleine King நேற்று மீண்டும் இதனை உறுதிப்படுத்தியிருந்தார்.அவர்களை அவர்களின் சொந்த வீட்டுக்கு அழைத்துச் செல்ல எவ்வளவு காலம் செல்லும் என்பதை கூற முடியாது எனவும் ஆனால், கட்டாயம் தொழிற்கட்சி அரசாங்கம் அதற்கு முன்னுரிமை வழங்கும் எனவும் Madeleine King கூறியுள்ளார்.
முருகப்பன் குடும்பத்தை நேசிக்கும் சமூகம் Biloela நகரில் இருப்பதை தான் உணர்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.அதேவேளை முருகப்பன் குடும்பத்தின் நண்பியும் அவர்களுக்கு ஆதரவான நீண்டகால போராளியுமான Angela Fredericks தொழிற்கட்சியின் அன்டனி ஹெல்பனிஸின் 
வெற்றியை நேற்று மாலை முருகப்பன் குடும்பத்தினருடன் பகிர்ந்துக்கொண்டதாக கூறியுள்ளார்.
மிக நீண்ட, துன்பமான கதை இறுதியில் முடிவுக்கு வரும் என நம்புவதாகவும் Angela Fredericks தெரிவித்துள்ளார்.முருகப்பன் நடேசலிங்கம் குடும்பம் நான்கு ஆண்டுகளுக்கு மேலாக அவர்களின் வீட்டில் இருந்து வெளியில் இருந்தனர். அவர்கள் நேசித்த நகரில் இருந்து எப்போது அவர்களை வெளியில் அழைத்துச் செல்லக் கூடாது எனவும் Angela Fredericks 
கூறியுள்ளார்.
இலங்கையில் நடைபெற்ற போர் காரணமாக படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு சென்ற முருகப்பன் நடேசலிங்கம், கோகிலபத்மப்பிரியா ஆகியோர் அவுஸ்திரேலியாவில் திருமணம் செய்து, Biloela நகரில் வசித்து வந்தனர்.அந்நாட்டு அதிகாரிகள் கடந்த 2018 ஆம் ஆண்டு 
அவர்கள் வசித்து வந்த Biloela நகரில் உள்ள வீட்டில் இருந்து அழைத்துச் சென்று மெல்பேர்னில் உள்ள தடுப்பு முகாமில்
 தங்க வைத்தனர்.
இதனையடுத்து 2019 ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் தீவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சுகவீனம் காரணமாக தர்னிக்கா மற்றும் முருகப்பன் குடும்பத்தினர் பேர்த் நகரில் முகாம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டனர். முருகப்பன் 
குடும்பத்தினருக்கு 
அவுஸ்திரேலியாவில் புகலிடம் வழங்க வேண்டும் என அந்நாட்டில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.இந்த நிலையில் அவுஸ்திரேலியாவில்21-05-2022. நேற்று நடைபெற்ற சமஷ்டி பொதுத் தேர்தலில் தொழிற்கட்சி வெற்றி பெற்றது.
இதனையடுத்து முருகப்பன் குடும்பத்திற்கு Biloela நகரில் சென்று தங்க அனுமதி வழங்கப்படும் என்பதுடன் அவர்களின் புகலிட கோரிக்கை அங்கீகரிக்கப்பட்டு அவுஸ்திரேலியாவில் வசிக்க அனுமதி வழங்கப்படும் 
என நம்பப்படுகிறது

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>


வெள்ளி, 13 மே, 2022

இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மறைத்து வைக்கப்பட்ட சுவிட்சர்லாந்தின் ரேகா (Rega) தனியார் ஏர் அம்புலன்ஸ்

சுவிட்சர்லாந்தின் ரேகா (Rega) எனப்படும் தனியார் ஏர் அம்புலன்ஸ் சேவைக்கு சொந்தமான SAZ52 என்ற தனியார் ஜெட் விமானம் 11-05-2022.அன்று காலை 9.51 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததுடன் 24 மணித்தியாலங்களுக்கு மேலாக விமான நிலைய ஹேங்கரில் மறைத்து வைக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (யுஏஇ) உள்ள பிரபலமான ராஸ் அல் கைமா விமான நிலையத்திலிருந்து விமானம் வந்துள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் உத்தியோகபூர்வ விமானங்களில் தனியார் ஜெட் விமானத்தின் அடுத்த இலக்கு குறிப்பிடப்படாது மற்றும் விமானத்தின் வருகை குறிப்பிடப்படுவதில்லை.
அவசர நோயாளி ஒருவரை சிகிச்சைக்காக வேறு நாட்டுக்கு அழைத்துச் செல்ல விமான ஆம்புலன்ஸ் வந்தால், ஆம்புலன்ஸில் 24 மணி நேரமும் ஏன் மறைத்து வைக்கப்பட்டுள்ளது? அது எங்கு செல்ல உள்ளது என்பதும் 
தெரியாத நிலை உள்ளது.
இந்நிலையில், நாட்டை விட்டு தப்பிச் செல்ல ராஜபக்ஷ அல்லது வேறு முக்கிய நபர்களை தனியார் ஆம்புலன்ஸ் ஜெட் விமானத்தில் கொண்டு செல்ல போகப் போகிறர்களா? என கேள்விகளும் எழுந்த வண்ணம் உள்ளதாக முகநூலில் Jeevan Prasad என்பவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>வியாழன், 5 மே, 2022

பறவைக் காய்ச்சல் பரவலால் பிரான்சில் 16 மில்லியன் பறவைகள் இறப்பு

பிரான்சில் பறவைக் காய்ச்சல் பரவி வரும் நிலையில் வரலாற்றில் இல்லாத அளவில் 16 மில்லியன் பறவைகள் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு வேளாண்மை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டு முதல், பல முறை பிரான்சில் பறவைக்காய்ச்சல் தொற்று ஏற்பட்டிருந்த நிலையில், வாத்துகள் அதிகம் வளர்க்கப்படும் பகுதிதான் அதிகம் பாதிக்கப்பட்டிருந்தது.
எனினும், இந்த ஆண்டு முதன்முறையாக பாதிக்கப்பட்ட பிரான்சின் தெற்குப் பகுதியிலிருந்து காட்டுப்பறவைகள் புலம்பெயர்ந்து வந்துள்ளதைத் தொடர்ந்து, மீண்டும் ஒரு பறவைக்காய்ச்சல் அலை உருவாகி, இப்போதுதான் அது முடிவுக்கு வருகிறது.
இந்நிலையில் பிரான்சில், சுமார் 1,400 இடங்களில் பறவைக்காய்ச்சல் பரவியுள்ளதாக வேளாண்மை அமைச்சகம் 
தெரிவித்துள்ளது.
அதேவேளை , மார்ச் இறுதியில் பறவைக்காய்ச்சல் உச்சம் தொட்ட நிலையில், இப்போது தொற்று பரவும் வேகம் குறைந்து வருவதாக வேளாண்மை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>
புதன், 4 மே, 2022

மூன்று கின்னஸ் சாதனை படைத்த உலகின் உயரமான பெண்

உலகின் உயரமான பெண் என்ற கின்னஸ் சாதனையை ஏற்கனவே பெற்று இருப்பவர் துருக்கியைச் சேர்ந்த ருமேசா கெல்கி (24). இவர் 215.16 செண்டிமீட்டர் ( 7 அடி 7 அங்குலம்) உயரம் உடையவர்.
1997 ஆம் ஆண்டு பிறந்த இவர் வழக்கறிஞர், ஆராய்ச்சியாளர் மற்றும் பொறியாளர் என பன்முக திறமை கொண்டவர். ருமேசா கெல்கி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல், உலகின் மிக உயரமான பெண் என்ற கின்னஸ் சாதனையை இவர் பெற்றார். இந்த நிலையில் இவர் தற்போது மேலும் 3 கின்னஸ் சாதனைகளை படைத்துள்ளார்.
அதாவது உலகின் மிக நீளமான விரல் (11.2 செ.மீ ) கொண்ட பெண் என்ற சாதனையை இவர் படைத்துள்ளார். அதோடு உலகின் மிகப்பெரிய கைகள் உடைய பெண் என்ற சாதனையும் இவர் 
வசமாகியுள்ளது.
அவரது வலது கை 24.93 செமீ (9.81 அங்குலம்) மற்றும் இடது கை அளவு 24.26 செமீ (9.55 அங்குலம்) கொண்டதாக உள்ளது. மேலும் உலகின் நீண்ட முதுகு 59.90 செமீ (23.58 அங்குலம்) உடைய பெண் என்பதற்காகவும் தற்போது இவருக்கு கின்னஸ் சாதனை வழங்கப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>


நாசா சூரியன் தொடர்பில் வெளியிட்ட அதிர்ச்சி புகைப்படம்

எரிமலைக் குழம்புகளில் பந்து செய்ததுபோல் இருக்கும் சூரியனின் அதிர்ச்சியான புகைப்படத்தை நாசா 
வெளியிட்டுள்ளது.
விண்வெளியில் தொடர்ந்து ஆய்வுகளைச் செய்து வரும் நாசா கடந்த சில வாரங்களாக சூரியனிலிருந்து அதிகப்படியாக கதிர்கள் வெளியாவதாகவும் அதில் வெளிப்படும் வெப்பத்தின் அளவும் அதிகரித்திருப்பதாகத் தெரிவித்து சூரியனின் புதிய புகைப்படத்தை 
வெளியிட்டுள்ளது.
அதில் சூரியனிலிருந்து வெளியாகும் நெருப்புப் பிளம்புகளின் அளவு அதிகரித்துக் காணப்படுகிறது.
மேலும், தற்போது இந்தப் பிளம்புகளால் வெளியாகும் அதிகப்படியான கதிர்களால் மனிதர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றும் ஒருவேளை நேரடியாக பூமிக்கு அக்கதிர்கள் வந்தால் ரேடியோ தகவல்தொடர்புகள், சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விண்கலன்கள் மற்றும் விண்வெளி வீரர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என நாசா
 தெரிவித்துள்ளது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>