நிலாவரை .கொம்

siruppiddy

திங்கள், 26 டிசம்பர், 2016

தமிழர் ஒருவர்பாரிஸ் நகரில் கத்திக்குத்து பலி!

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் தமிழர் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். தமிழகம் கும்பகோணத்தை சேர்ந்த 26 வயதான மணிமாறன் என்பவரே இவ்வாறு படுகொலை 
செய்யப்பட்டுள்ளார்.
பிரான்ஸ் ஊடகங்களை மேற்கோள்காட்டி வெளியாகியுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது நண்பரை பார்ப்பதற்காக பாரிஸ் வாகிரார்ட் மெட்ரோ புகையிரத நிலையத்தை வந்தடைந்த மணிமாறனை, இனந்தெரியாத நபர்கள் கொடூரமான முறையில் கத்தியால்
 குத்தியுள்ளனர்.
எனினும், படுகாயமடைந்த மணிமாறன் தனது நண்பர் வீட்டை நோக்கி ஓடியுள்ளார். இந்நிலையில், வீட்டு அழைப்பு மணியை அழுத்திய மணிமாறன் அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், வீட்டு கதவை திறந்து பார்த்த நண்பர், மணிமாறன் உயிரிழந்து கிடப்பதை கண்டு அந்நாட்டு பொலிஸாருக்கு தகவல் 
வழங்கியுள்ளார்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் வழக்கு தாக்கல் செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும்
 தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>திங்கள், 19 டிசம்பர், 2016

அன்பாந்த பிரான்ஸ் வாழும் தமிழ் மக்களுக்கு அவசர வேண்டுகோள்!!!.

அவசரகால நிலை பிரான்சில் மேலும் 7 மாதங்கள் நீடிப்பு,பிரான்சில் நெருக்கடி நிலையை ஜூலை மாதம் 15-ந் தேதி வரை மேலும் 7 மாதங்களுக்கு நீடிக்க வகை செய்து, அந்த நாட்டின் பாராளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப் பட்டுள்ளது . அதன்பேரில் நேற்று ஓட்டெடுப்பு
 நடத்தப்பட்டது.
இந்த ஓட்டெடுப்பில், நெருக்கடி நிலையை மேலும் 7 மாதங்கள் நீட்டிப்பதற்கு 288 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்ததால், தீர்மானம் நிறைவேறியது. எதிராக 32 பேர் மட்டுமே வாக்களித்தனர்.
வரும் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் அந்த நாட்டின் அதிபர் தேர்தலும், பாராளுமன்ற தேர்தலும் நடக்க உள்ள நிலையில், பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தும் அச்சுறுத்துதல்கள் இருப்பதாக பிரான்ஸ் அரசு கருதித்தான், நெருக்கடி நிலையை மேலும் 7 மாதங்கள் நீடிக்க முடிவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அவசரகால நிலை நீடிப்பினால் போலீசார் சந்தேகிக்கும் இடங்களில் உத்தியோகப் பற்றற்ற ஊரடங்கு அமுல் செய்து சுற்றி வளைப்புத் தேடுதல் நடத்தலாம் சந்தேகப்படும் யாரையும் கைது செய்யலாம்,
பிரான்ஸ் நாட்டில் வாழும் ஈழத்தமிழர்கள் இவ்விடயத்தில் முன் ஜாக்கிரதையுடன் நடந்து கொள்ளவும் தேவையற்ற பயணங்களைக் குறைத்துக் கொள்ளுங்கள், ஒரு குறிப்பிட்ட பகுதி பொலிசாரின் தீவிர கண்காணிப்புப் பகுதியாக உள்ளது அதில் பாரிஸ் நகரம் முன்னுரிமை கொடுக்கப் பட்டுள்ளது,
பாரிஸ் நகரத்தின் லாச்சப்பல் பகுய்தி பல நாடுகளைச் சேர்ந்தோர் நடமாடும் பகுதி இந்தப் பகுதியில் பாரிய குற்றச் செயல்கள் பதிவாகி உள்ளதுடன் தீவிர கண்காணிப்பிலும் உள்ளனர் அங்கு பரவலாக ஈழத் தமிழ் மக்கள் வாழும் பகுதியாகும்.
அப்பகுதிக்கு தேவையற்ற பயணங்களைக் குறைத்துக் கொள்வதுடன் அனாவசியப் பிரச்சனைகளில் இருந்தும் தமிழ் மக்கள் உங்களைக் காப்பாற்றிக் கொள்ளவும் உங்களுக்கான விசா நடைமுறை நீண்டகாலப் போராட்டத்தில் சட்டபூர்வமாக பெறப்பட்டுள்ளது எனவே தயவுடன் தமிழ் மக்கள் எந்த வித குற்றச் செயலிலும் சம்பந்தப் படாமல் இருக்குமாறு 
வேண்டுகிறோம்,
வரும் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் அந்த நாட்டின் அதிபர் தேர்தலும், பாராளுமன்ற தேர்தலும் நடக்க உள்ள நிலையில்,அதுவரை இந்த அவசரகால நிலை நீடிக்கப் பட்டுள்ளது இந்த காலகட்டத்தில் பெரும்பாலும் நீங்கள் சரிய குற்றத்தில் சம்பந்தப் பட்டாலும் அது உங்களது எதிர் காலத்துக்கு கேள்விக்குறியாக அமைந்துவிடும்.
முடிந்தவரை அனாவசியமாக ஓன்று கூடுதல்,சிறு கலவரங்கள்.சிறு ஆயுதப் பிரயோகம்.அச்சுறுத்தல் கற்பழிப்பு ஆட்கடத்தல்களில் பங்கு கொள்ளல்,மதுபான நிலையங்களில் ஒன்றுக்கு மேற்பட்டோர் குழப்பம் விளைவித்தல் என்பன சாதாரண நேரத்தில் நடப்பதைவிட அவசர கால நிலையில் நடந்தால் 1/3 என்ற வீதத்தில் குற்றவியலில் நீங்களும் உள்ளடக்கப்படுவீர்கள்.
அப்படி உள்ளடக்கப் படும் பொது சில நேரங்களில் உங்களது பிணை மனு கூட நிராகரிக்கப் பட்டு நீண்டகாலம் சிறையில் இருக்க நேரிடும் நாடுகடத்தப் பாடவும் கூடும் விசாவுக்கு விண்ணப்பித்தோர்,அகதியாகப் பதிந்தோர்.பதிய இருப்போர்கள், இவ்விடயத்தை கவனிக்கவும்00:49 19.12.2016
முடித்தவரை உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


புதன், 14 டிசம்பர், 2016

பயணிகளுக்கு தொல்லை கொடுத்த பெண் விமானத்தில்இருந்து வெளியேற்றப்படார்?

அமெரிக்காவில் தனியாருக்கு சொந்தமான விமானம் ஒன்றில் பெண் பயணி ஒருவரை அங்குள்ள பொலிஸ்  இழுத்து வெளியேற்றியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை 
ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் டெட்ராய்ட் பெருநகர விமான நிலையத்தில் குறித்த அதிர்ச்சியளிக்கும் சம்பவம் நடந்துள்ளது. இங்கு புறப்பட தயாராக நின்ற டெல்டா விமானத்தில் பெண்மணி ஒருவர் திடீரென்று புகுந்து தமது இருக்கைக்கு நேர் மேலே இருக்கும் பொருட்கள் வைக்கும் பகுதியில் தனியாக அதிக இடம் வேண்டும் என கேட்டு முதலில் பிரச்னை 
செய்துள்ளார்.
இதனால் அங்கே பரபரப்பு ஏற்பட்டது. குறித்த பெண்மணி விடாப்பிடியாக தமக்கு இடம் ஒதுக்க வேண்டும் என்று வற்புறுத்தியே வந்துள்ளார். இதனிடையே அந்த பெண்மணி உரிய அனுமதி பெறாமல் விமானத்தில் பயணிக்க முயன்றுள்ளதாகவும் அவரது பெட்டி உள்ளிட்ட பொருட்களை சோதனைக்கு உட்படுத்தவில்லை எனவும் 
தெரிய வந்தது.
இதனையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்து குறித்த பெண்மணியுடன் விவதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அவர் அதற்கு ஒப்புக்கொள்ள மறுத்துள்ளார். மேலும் விமானத்தில் இருந்து வெளியேறவும் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனிடையே குறித்த டெல்டா நிறுவனம் பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கவும் அவர்கள் வந்து அந்த பெண்மணியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
ஆனால் அவர் விமானத்தை விட்டு வெளியேற மறுத்து அடம்பிடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து பொலிசார் அவரை வலுக்கட்டாயமாக இழுத்து விமானத்தில் இருந்து வெளியெற்றியுள்ளனர்.
தொடர்ந்து சக பயணிகளுக்கு தொல்லை தந்த குற்றத்திற்காகவும் விமான நிலைய சட்டத்திட்டங்களுக்கு எதிராக செயல்பட்டதாகவும் கூறி கைது செய்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>வெள்ளி, 9 டிசம்பர், 2016

இது மனிதர்களை தின்னும் கொடூர மிருகம்: ஏலியனா ? அச்சத்தில் மக்கள்

கர்நாடகாவில் விலங்குகள் மற்றும் மனிதர்களை தின்னும் கொடூர விலங்கு ஒன்று பிடிபட்டுள்ளதாக கூறி வீடியோ ஒன்று தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக
 பரவி வருகிறது.
கர்நாடகாவின் எல்லைப் பகுதியில் கடந்த 30 ஆம் திகதி விசித்திரமான மிருகம் ஒன்று பிடிபட்டுள்ளது. இதை சமூகவலைத்தளங்களில் இது ஒரு கொடூரமான விலங்கு என்றும் விலங்குகள் மற்றும் மனிதர்களை உண்ணும் ஏலியன் என குறிப்பிட்டுள்ளனர்.
இதனால் கர்நாடகாவின் எல்லைப் பகுதி வழியே செல்பவர்கள் பார்த்து கவனமாக செல்லுங்கள் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோவும் தற்போது இணையத்தில் உலா வரத் தொடங்கியுள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

ஞாயிறு, 4 டிசம்பர், 2016

அகதிகளுக்கு ஆதரவாக பிரித்தானியவில் மாபெரும் ஆர்ப்பாட்டம்!

பிரித்தானியாவிலுள்ள பெட்போர்ட் என்னும் இடத்தில் உள்ள யார்ல் வூட் தடுப்பு முகாமை மூடவேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து இன்று (03/12/16) யார்ல் வூட் தடுப்பு முகாமை சுற்றி மக்கள் மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். Movement for justice என்னும் அமைப்பு ஒழுங்கு செய்திருந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ் சொலிடாரிட்டி, நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் போன்ற தமிழர் அமைப்புகளும் தமது ஆதரவை வழங்கியது.
அகதிகளின் பிரச்சனைகளுக்கு எதிராக, அகதிகள் தொடர்பான பிரித்தானியா அரசின் கடும் போக்குவாதத்திற்கு எதிராக அகதிகளே போராட வேண்டும் என்ற தொனிப் பொருளில் இயங்கும் “அகதிகளுக்கான உரிமைகள் அமைப்பு” இந்த போராட்டத்தை முன்னின்று நடத்தியதை 
காணக்கூடியதாகவிருந்தது.
மேலும் இன,மத,மொழி வேற்றுமை பாராமல் பல்லின மக்களும் இதில் கலந்து கொண்டமை சிறப்பானதொரு
 அம்சமாகும்
தடுப்பு முகாம்களை மூடு, அகதிகளும் மனிதர்களே, அகதிகளை விடுதலை செய், அகதிகளுக்கான உரிமைகளை வழங்கு, அகதிகளை திருப்பி அனுப்புவதை நிறுத்து, இனவெறியை நிறுத்து , நிறவெறியை நிறுத்து போன்ற கோஷங்கள் பிரித்தானிய அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டக்காரர்களால் முன்வைக்கப்பட்டன. கடந்த மாதம் அகதிகளுக்ககான உரிமைகள் அமைப்பு லண்டனில் அகதிகளின் உரிமைகளை வலியுறுத்தி மாபெரும் ஊர்வலம் ஒன்றையும் நடாத்தியது இங்கு 
குறிப்பிடத்தக்கது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>கிராம மக்களுக்கு ராணுவ வீரர் அளித்த பரிசு என்ன தெரியுமா?

ஜேர்மன் நாட்டை சேர்ந்த ராணுவ வீரர் ஒருவரின் உயிரை காப்பாற்றிய கிராம மக்களுக்கு அவரது இறுதி நாளில் செய்துள்ள நன்றிக்கடன் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
இரண்டாம் உலகப்போர் நடைபெற்று வந்த நேரத்தில் ஜேர்மனியை சேர்ந்த Heinrich Steinmeyer(அப்போதைய வயது 19) என்ற ராணுவ வீரர் பிரான்ஸ் நாட்டில் கைது செய்யப்பட்டார்.
பின்னர் ஸ்கோட்லாந்து நாட்டில் உள்ள Comrie என்ற சிறிய கிராமத்தில் கைதியாக அடைக்கப்பட்டார். இக்கிராமத்தில் உள்ள Cultybraggan முகாமில் அடைக்கப்பட்ட வீரர் பல்வேறு இன்னல்களுக்கு
 உள்ளாகியுள்ளார்.
இந்நிலையில், வீரரின் நிலையைக் கண்ட அக்கிராமத்து மக்கள் அவருக்கு பல்வேறு வகையில் உதவி செய்ததுடன் அவருடன் அன்பாக பழகி வந்துள்ளனர்.
கிராமத்து மக்களின் அன்பைக் கண்டு புத்துணர்ச்சி பெற்ற வீரர் தனது துன்பத்திலிருந்து படிப்படியாக முன்னேறியுள்ளார்.
சில ஆண்டுகளுக்கு பின்னர் முகாமில் இருந்து விடுதலை செய்யப்பட்ட வீரர் கிராம மக்களுக்கு நன்றி தெரிவித்துவிட்டு ஜேர்மனிக்கு
 திரும்பியுள்ளார்.
இந்நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தன்னுடைய 90வது வயதில் அவர் உயிரிழந்துள்ளார்.
ஆனால், உயிரிழப்பதற்கு முன்னதாக ஒரு பத்திரம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு உயிரிழந்துள்ளார்.
அதாவது, தனது சொத்துக்களில் பாதியை (சுமார் 8 கோடி இலங்கை ரூபாய்) தன்னுடைய உயிரை காப்பாற்றிய Comrie கிராம மக்களுக்கு வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தன்னுடைய உடலை எரித்த பின்னர் அதன் ஒரு பாதியை அக்கிராமத்தில் புதைக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ராணுவ வீரரின் விருப்பப்படி அத்தொகை கிராமத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. தற்போது இத்தொகை ஒவ்வொரு குடும்பத்தினரின் வளர்ச்சிக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
60 ஆண்டுகளுக்கு முன்னர் செய்த உதவியை தனது வாழ்நாள் முழுவதும் மறக்காமல் நன்றிக்கடனாக முன்னாள் ராணுவ வீரர் செய்துள்ள இச்செயல் கிராம மக்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>