நிலாவரை .கொம்

siruppiddy

வெள்ளி, 29 ஜனவரி, 2016

கனடா வில் ஐகோர்ட்டு நீதிபதியாக தமிழ் பெண் நியமனம்!!!

கனடா நாட்டில் ஐகோர்ட்டு நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள தமிழகத்தை சேர்ந்த வள்ளியம்மை, தமிழர்களுக்கு பெருமை சேர்த்துள்ளார். இவர் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணனின் நெருங்கிய உறவினர் ஆவார்.
ஐகோர்ட்டு நீதிபதி
கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தின் ஐகோர்ட்டு நீதிபதியாக தமிழகத்தை சேர்ந்த வள்ளியம்மை நியமிக்கப்பட்டுள்ளார். இவர் காரைக்குடி முன்னாள் தலைவர் அருணாச்சலம் செட்டியார்-சிகப்பி ஆச்சி ஆகியோரின் மகன் காந்தி அருணாச்சலம் செட்டியாரை மணந்து கனடாவின் வான்கூவர் நகரில் குடியேறினார்.
வான்கூவரில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் 1992-ம் ஆண்டு சட்டக்கல்வியை வள்ளியம்மை முடித்தார். 1995-ம் ஆண்டு முதல் வக்கீல் தொழிலை தொடங்கினார். பல்வேறு வழக்குகளை திறம்பட கையாண்டு வெற்றி பெற்றார்.
வர்த்தக உறவு
தேசிய கெனடியன் பார் அசோசியேசன் மற்றும் அதனுடைய பிரிட்டிஷ் கொலம்பியா கிளையின் பல்வேறு செயற்குழுக்களில் வள்ளியம்மை பணியாற்றி உள்ளார். மேலும் இந்தியா-கனடா வியாபார அமைப்பின் தலைவராகவும், தேசிய அமைப்பின் இயக்குனராகவும் பணியாற்றி இரு நாடுகளின் வர்த்தக உறவை மேம்பட 
செய்தார்.
வக்கீல் தொழிலுடன் பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகம், சைமன் பிரேசர் பல்கலைக்கழகம், வான்கூவர் கம்யூனிட்டி கல்லூரி உள்ளிட்ட பல கல்வி நிறுவனங்களில் சட்டக்கல்வியை வள்ளியம்மை 
பயிற்றுவித்தார். 
வானொலி, தொலைக்காட்சிகளில் பலதரப்பட்ட சமுதாய கலாசாரங்களை பற்றி தொடர் நிகழ்ச்சிகளை வழங்கி உள்ளார். இவருடைய சேவையை பாராட்டி பல்வேறு நிறுவனங்கள் விருதுகளை வழங்கி இருக்கின்றன.
தமிழர்களுக்கு பெருமை
பிரிட்டிஷ் கொலம்பியா மாநில ஐகோர்ட்டு நீதிபதியாக வள்ளியம்மை நியமிக்கப்பட்டதன் மூலம் தமிழர்களுக்கு பெருமை சேர்த்துள்ளார். இவர் சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணனின் நெருங்கிய உறவினர் ஆவார். 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

படகு மூழ்கி 10 குழந்தைகள் உட்பட 24 அகதிகள் பலி

கிரீஸ் கடற்பகுதியில் படகு கவிழ்ந்த விபத்தில் 10 குழந்தைகள் உட்பட 24 அகதிகள் இறந்தனர். மேலும் சுமார் 11 பேரை காணவில்லை.ஏஜியன் கடற்பகுதியிலிருந்து 10 அகதிகள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளனர். மீதமுள்ளோரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

உள்நாட்டுப் போர் காரணமாக சிரியா, இராக் உள்ளிட்ட மேற்காசிய நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் அடைக்கலம் தேடி ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்கின்றனர். ஆபத்தான கடல்பயணத்தில் இவர்களின் படகு விபத்துக்குள்ளாகும் சம்பவம் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் துருக்கியில் இருந்து ஏஜியன் கடலில் கிரீஸ் நோக்கி சென்றுகொண்டிருந்த அகதிகள் படகு ஒன்று, கிரீஸ் நாட்டின் சாமோஸ் தீவுக்கு அருகில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 10 குழந்தைகள் உட்பட 24 பேர் 

இறந்ததாகவும் 10 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாகவும் கிரீஸ் கடலோர காவல்படை தெரிவித்தது. மேலும் சுமார் 11 பேரை தேடும் பணி நடைபெறுவதாக கிரீஸ் கூறியுள்ளது.

24 உடல்களையும் கடலோர காவற்படையினர் அடையாளம் கண்டனர்.
கிரீஸ் நாட்டின் கோஸ் தீவு அருகே நேற்று முன்தினம் நிகழ்ந்த படகு விபத்தில் 2 குழந்தைகள் உள்பட7 பேர் இறந்தனர். இந்நிலையில் இவ்விபத்து நிகழ்ந்துள்ளது.

இந்த ஆண்டு இதுவரை 46 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அகதிகள் கிரீஸ் வந்துள்ளதாகவும் சுமார் 200 பேர் கடலில் மூழ்கி இறந்துள்ளதாகவும் ஐ.நா. கூறுகிறது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

புதன், 27 ஜனவரி, 2016

குடியேறுவோர் எண்ணிக்கை ஒரு இலட்சத்தால் குறையும்!!!

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறும் பட்சத்தில் மொத்த குடியேற்றம் ஒரு இலட்சத்தால் குறைவடையும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய பிரஜைகளுக்கு பிரித்தானிய அரசாங்கம் தொழில் அனுமதிகளை வழங்க வேண்டும் என குடியேற்ற கண்காணிப்பு அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இவ்வாறான நகர்வு மொத்த குடியேற்றத்தை குறைக்கும் என்பதுடன், நாட்டிற்குள் வரும் மற்றும் வெளியேறும் மக்களின் எண்ணிக்கையும் ஒரு இலட்சத்து 80 ஆயிரம் தொடக்கம் 65 ஆயிரம் வரை அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா நீடிக்க வேண்டும் என கருதுவோர் இந்த தகவலை
 நிராகரித்துள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா நீடிக்க வேண்டுமா இல்லையா என்பது தொடர்பில் 2017ஆம் ஆண்டின் இறுதிக்குள் சர்ஜன வாக்கெடுப்பை நடத்த பிரித்தானிய அரசாங்கம் 
திட்டமிட்டுள்ளது
இதேவேளை ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறுவதால் குடியேற்றத்தில் ஏற்படும் தாக்கம் குறித்து எந்தவொருவராலும் உறுதியாக கூறமுடியவில்லை என அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்..
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

செவ்வாய், 26 ஜனவரி, 2016

லண்டன் விமானத்தாக்குதலில் இருந்து எப்படி தப்பியது?

அமெரிக்க வர்த்தக மையம் மீது விமானம் மூலம் தாக்குதல் நடத்தியது போன்று பிரித்தானிய நகரங்களில் தாக்குதல் நடத்த 2 விமானிகள் தீட்டிய சதி திட்டத்தை பிரித்தானிய ராயல் விமானப்படையினர் அதிரடியாக முறியடித்துள்ளனர்.
பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதற்கு ஒரு வாரத்திற்கு பிறகு இந்த சதி திட்டம் பிரித்தானியாவில் தீட்டப்பட்டுள்ளது.
நெதர்லாந்து நாட்டில் உள்ள Schiphol என்ற விமான நிலையத்திலிருந்து 2 பயணிகள் விமானங்கள் புறப்பட்டுள்ளது.
இந்த விமானங்களில் வெளிநாடுகளை சேர்ந்த இருவர் விமானிகளாக செயல்பட்டு வந்துள்ளனர்.
விமானத்தில் ஆபத்து ஏற்பட்டால் பயன்படுத்த கூடிய 121 ரேடியோ வழியாக இரண்டு விமானிகளும் பேசியுள்ளனர்.
இந்த ரேடியோ மூலம் பேசினால், அந்த தகவல்கள் விமான தலைமையகத்திற்கு செல்லாது என தவறாக எண்ணி இருவரும் தாக்குதல் குறித்து பேசியுள்ளனர்.
அரேபிய ரகசிய வார்த்தைகளை பயன்படுத்தி திட்டம் தீட்டியபோது, இவர்களின் உரையாடல் ராயல் விமானப்படையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உடனே இருவரின் உரையாடலையும் அதிகாரிகள் பதிவு செய்த பிரித்தானிய புலனாய்வு துறையான GCHQ-விற்கு அனுப்பி வைத்தனர்.
இருவரின் மீது சந்தேகம் எழுந்தாலும், அவர்களை தொடர்ந்து விமானத்தை இயக்க அதிகாரிகள் அனுமதித்துள்ளனர்.
ரகசிய வார்த்தைகள் மீது சுமார் 7 மணி நேர ஆய்விற்கு பிறகு இரண்டு விமானிகளும் சதி திட்டம் தீட்டுவது உண்மை தான் என நிரூபனமானது.
இதனை தொடர்ந்து புலனாய்வு துறையினர் மற்றும் பொலிசார் Operation Templer என்ற தாக்குதல் தடுப்பு நடவடிக்கையில் தீவிரமாக 
இறங்கினர்.
விமானிகள் பேசியதில் பிரித்தானியாவில் உள்ள London, Bath, Brighton மற்றும் Ipswich ஆகிய 4 நகரங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டது தெரியவந்துள்ளது.
உடனடியாக இந்த நகரங்கள் முழுவதும் கண்காணிப்பு தீவிரமாக்கப்பட்டு சுமார் 10,000 பொலிசார் பாதுகாப்பு பணிகளில்
 ஈடுப்பட்டனர்.
சந்தேகத்திற்குரிய 2 விமானிகளையும் பொலிசார் கைது செய்தனரா அல்லது அவர்கள் பணியை தொடர்ந்து வருகிறார்களா என்ற தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
எனினும், இரண்டு விமானிகள் குறித்து தகவல்களை சேகரித்துள்ள புலனாய்வு அதிகாரிகள் அவர்களை தீவிர கண்காணிப்பில்
 வைத்துள்ளதா
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வெள்ளி, 15 ஜனவரி, 2016

நீதிமன்ற உத்தரவு குரங்கு தானே எடுத்த ‘செல்பி’க்கு பதிப்புரிமை வழங்க முடியாது;

ஒரு குரங்கு தானே எடுத்துக் கொண்ட புகழ்பெற்ற புகைப்படத்துக்கான பதிப்புரிமையை அந்த குரங்குக்கு வழங்க அமெரிக்க நீதிமன்றம் மறுத்து விட்டது.
இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் உள்ள வனப்பகுதியில் ஆய்வாளர்கள் அவ்வப்போது கள ஆய்வு மேற்கொள்வது வழக்கம். அந்த வகையில் அங்கு வசிக்கும் நருடோ என்ற ஆண் குரங்கு பற்றிய விவரங்களையும் அவர்கள் சேகரித்துள்ளனர். இதனால் அவர்களுக்கு நருடோ மிகவும் பரிச்சயமாக விளங்கியது.
இந்நிலையில், 2011 இல் ஆய்வுக்காக வந்திருந்த வனவிலங்குகள் பற்றி ஆய்வு செய்யும் நிறுவனத்தின் புகைப்படக் கலைஞர் டேவிட் ஜே.ஸ்லேடர், தனது கேமராவை அங்கேயே விட்டு விட்டுச் சென்றார். இதையடுத்து, அந்தக் கேமராவை எடுத்துக் கொண்ட நருடோ, வனப்பகுதி, மற்ற குரங்குகள் என பல புகைப் படங்களை எடுத்தது. அத்துடன் தன்னையும் (செல்பி) புகைப்படம் எடுத்துக்கொண்டது.
பின்னர் அந்தக் கேமராவை எடுத்துச் சென்ற ஸ்லேடர், புகைப் படங்களை வெளியிட்டார். அவை உலகம் முழுவதும் பிரபலமானது. இந்நிலையில், இந்த புகைப்படங்களுக்கு உரிமை கொண்டாடிய ஸ்லேடர், அவரது நிறுவனம் மீது விலங்குகள் பாதுகாப்பு அமைப் பான பீட்டா சான்பிரான்சிஸ்கோ நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.
“பதிப்புரிமை சட்டத்தின்படி, தான் எடுத்த செல்பி புகைப்படத்துக்கு பதிப்புரிமை கோர நருடோவுக்கு உரிமை உள்ளது. எனவே, ஸ்லேடருக்கு பதிப்புரிமையை வழங்கக்கூடாது” என அந்த மனுவில் 
கோரியிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், நருடோ எடுத்த புகைப் படத்துக்காக அதற்கு பதிப்புரிமை வழங்க முடியாது என தீர்ப்பளித்தனர். பதிப்புரிமை சட்டம் விலங்குகளுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்படாத நிலையில், அதற்கு பதிப்புரிமை உண்டு என்பதை ஏற்க முடியாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

மக்களின் மனம் கவர்ந்த நடிகை” பிரியங்கா சோப்ராவுக்கு விருது

அமெரிக்காவில் வழங்கப்படும், ‘மக்களின் மனம் கவர்ந்த நடிகை’ என்ற விருதை பிரபல பொலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா வென்றுள்ளார்.
இதன்மூலம், இவ்விருதைப் பெற்ற முதல் இந்திய நடிகை என்ற பெருமை அவருக்குக் கிடைத்துள்ளது.
பிரபல பொலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா (33) தமிழன் என்ற படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர், அமெரிக்காவின், ‘ஏபிசி’ என்ற, ‘டிவி’ சேனலில் ஒளிபரப்பாகும், ‘குவாண்டிகோ’ என்ற தொலைக்காட்சித் தொடரில் நடித்து வருகிறார்.
இதில், பிரியங்கா சோப்ரா, புலனாய்வு நிறுவன அதிகாரியாக நடித்துள்ளார். இந்தத் தொடருக்கு, அமெரிக்காவில் பெரும் வரவேற்புக் கிடைத்துள்ளது.
அமெரிக்காவில், ஒவ்வொரு ஆண்டும், ‘டிவி’ தொடர்களில் நடிப்பவர்களுக்கு, ‘ப்யூப்பிள் சாய்ஸ்’ எனப்படும், மக்களின் மனம் கவர்ந்த நடிகர், நடிகை என்ற விருது வழங்கப்படுவது வழக்கம்.
இந்தாண்டுக்கான விருது வழங்கும் விழா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நேற்று (07) நடைபெற்றது.
இதில், சிறந்த அறிமுக நடிகை விருதுக்கு, பிரியங்கா சோப்ரா தேர்வு செய்யப்பட்டு, அவருக்கு விருது வழங்கப்பட்டது.
எம்மா ராபர்ட்ஸ், ஜெமி லீ குருடிஸ், லியா மிக்கெல் போன்ற நடிகையரின் கடும் போட்டியையும் மிஞ்சி, அதிக வாக்கு வித்தியாசத்தில், பிரியங்கா சோப்ரா வெற்றி பெற்றுள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

திங்கள், 4 ஜனவரி, 2016

விபத்தில் மூன்று பேர்பலி உயிர் தப்பிய ஒரே ஒரு ஐந்து வயது சிறுமி!!!.

கனடா- சஸ்கற்சுவானில் கார் ஒன்று ஜீப்புடன் மோதிய விபத்தில் ஒரே ஒரு ஐந்து வயது சிறுமி மட்டும் உயிர் தப்பியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இச்சிறுமி Hyundai Elantra வாகனம் ஒன்றில் 
ஒரு ஆண் ஒரு பெண் மற்றும்
 இரண்டு வயது சிறுவன் ஆகியோருடன் விபத்து நடந்த சமயம் இருந்ததாக ஆர்சிஎம்பி தெரிவித்துள்ளது. ஞாயிற்று கிழமை அதிகாலை நெடுஞ்சாலை 11ல் இந்த வாகனம் ஒரு றாங்லர் ஜீப்பினால் மோதப்பட்டது. ஜீப் நெடுஞ்சாலையை கடக்க முயன்ற சமயம் இந்த கோர விபத்து நடந்துள்ளது. காரை செலுத்திய 34வயதுடைய மனிதனும் காரில்
 பயணித்த 33வயது
 பெண்ணும் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர். சிறுவர்கள் இருவரும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிறுவன் மரணமடைந்து விட்டான். சிறுமி மட்டும் தப்பி விட்டாள். ஜீப்பில் இருந்த 49-வயதுடைய பெண் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் அங்கிருந்து விடுவிக்கப்பட்டு தற்சமயம் பொலிஸ் காவலில்
 வைக்கப்பட்டுள்ளார். 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>