கிரீஸ் கடற்பகுதியில் படகு கவிழ்ந்த விபத்தில் 10 குழந்தைகள் உட்பட 24 அகதிகள் இறந்தனர். மேலும் சுமார் 11 பேரை காணவில்லை.ஏஜியன் கடற்பகுதியிலிருந்து 10 அகதிகள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளனர். மீதமுள்ளோரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
உள்நாட்டுப் போர் காரணமாக சிரியா, இராக் உள்ளிட்ட மேற்காசிய நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் அடைக்கலம் தேடி ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்கின்றனர். ஆபத்தான கடல்பயணத்தில் இவர்களின் படகு விபத்துக்குள்ளாகும் சம்பவம் தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில் துருக்கியில் இருந்து ஏஜியன் கடலில் கிரீஸ் நோக்கி சென்றுகொண்டிருந்த அகதிகள் படகு ஒன்று, கிரீஸ் நாட்டின் சாமோஸ் தீவுக்கு அருகில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 10 குழந்தைகள் உட்பட 24 பேர்
இறந்ததாகவும் 10 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாகவும் கிரீஸ் கடலோர காவல்படை தெரிவித்தது. மேலும் சுமார் 11 பேரை தேடும் பணி நடைபெறுவதாக கிரீஸ் கூறியுள்ளது.
24 உடல்களையும் கடலோர காவற்படையினர் அடையாளம் கண்டனர்.
கிரீஸ் நாட்டின் கோஸ் தீவு அருகே நேற்று முன்தினம் நிகழ்ந்த படகு விபத்தில் 2 குழந்தைகள் உள்பட7 பேர் இறந்தனர். இந்நிலையில் இவ்விபத்து நிகழ்ந்துள்ளது.
இந்த ஆண்டு இதுவரை 46 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அகதிகள் கிரீஸ் வந்துள்ளதாகவும் சுமார் 200 பேர் கடலில் மூழ்கி இறந்துள்ளதாகவும் ஐ.நா. கூறுகிறது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக