நிலாவரை .கொம்

siruppiddy

வெள்ளி, 15 ஜனவரி, 2016

நீதிமன்ற உத்தரவு குரங்கு தானே எடுத்த ‘செல்பி’க்கு பதிப்புரிமை வழங்க முடியாது;

ஒரு குரங்கு தானே எடுத்துக் கொண்ட புகழ்பெற்ற புகைப்படத்துக்கான பதிப்புரிமையை அந்த குரங்குக்கு வழங்க அமெரிக்க நீதிமன்றம் மறுத்து விட்டது.
இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் உள்ள வனப்பகுதியில் ஆய்வாளர்கள் அவ்வப்போது கள ஆய்வு மேற்கொள்வது வழக்கம். அந்த வகையில் அங்கு வசிக்கும் நருடோ என்ற ஆண் குரங்கு பற்றிய விவரங்களையும் அவர்கள் சேகரித்துள்ளனர். இதனால் அவர்களுக்கு நருடோ மிகவும் பரிச்சயமாக விளங்கியது.
இந்நிலையில், 2011 இல் ஆய்வுக்காக வந்திருந்த வனவிலங்குகள் பற்றி ஆய்வு செய்யும் நிறுவனத்தின் புகைப்படக் கலைஞர் டேவிட் ஜே.ஸ்லேடர், தனது கேமராவை அங்கேயே விட்டு விட்டுச் சென்றார். இதையடுத்து, அந்தக் கேமராவை எடுத்துக் கொண்ட நருடோ, வனப்பகுதி, மற்ற குரங்குகள் என பல புகைப் படங்களை எடுத்தது. அத்துடன் தன்னையும் (செல்பி) புகைப்படம் எடுத்துக்கொண்டது.
பின்னர் அந்தக் கேமராவை எடுத்துச் சென்ற ஸ்லேடர், புகைப் படங்களை வெளியிட்டார். அவை உலகம் முழுவதும் பிரபலமானது. இந்நிலையில், இந்த புகைப்படங்களுக்கு உரிமை கொண்டாடிய ஸ்லேடர், அவரது நிறுவனம் மீது விலங்குகள் பாதுகாப்பு அமைப் பான பீட்டா சான்பிரான்சிஸ்கோ நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.
“பதிப்புரிமை சட்டத்தின்படி, தான் எடுத்த செல்பி புகைப்படத்துக்கு பதிப்புரிமை கோர நருடோவுக்கு உரிமை உள்ளது. எனவே, ஸ்லேடருக்கு பதிப்புரிமையை வழங்கக்கூடாது” என அந்த மனுவில் 
கோரியிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், நருடோ எடுத்த புகைப் படத்துக்காக அதற்கு பதிப்புரிமை வழங்க முடியாது என தீர்ப்பளித்தனர். பதிப்புரிமை சட்டம் விலங்குகளுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்படாத நிலையில், அதற்கு பதிப்புரிமை உண்டு என்பதை ஏற்க முடியாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக