அமெரிக்காவில் வழங்கப்படும், ‘மக்களின் மனம் கவர்ந்த நடிகை’ என்ற விருதை பிரபல பொலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா வென்றுள்ளார்.
இதன்மூலம், இவ்விருதைப் பெற்ற முதல் இந்திய நடிகை என்ற பெருமை அவருக்குக் கிடைத்துள்ளது.
பிரபல பொலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா (33) தமிழன் என்ற படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர், அமெரிக்காவின், ‘ஏபிசி’ என்ற, ‘டிவி’ சேனலில் ஒளிபரப்பாகும், ‘குவாண்டிகோ’ என்ற தொலைக்காட்சித் தொடரில் நடித்து வருகிறார்.
இதில், பிரியங்கா சோப்ரா, புலனாய்வு நிறுவன அதிகாரியாக நடித்துள்ளார். இந்தத் தொடருக்கு, அமெரிக்காவில் பெரும் வரவேற்புக் கிடைத்துள்ளது.
அமெரிக்காவில், ஒவ்வொரு ஆண்டும், ‘டிவி’ தொடர்களில் நடிப்பவர்களுக்கு, ‘ப்யூப்பிள் சாய்ஸ்’ எனப்படும், மக்களின் மனம் கவர்ந்த நடிகர், நடிகை என்ற விருது வழங்கப்படுவது வழக்கம்.
இந்தாண்டுக்கான விருது வழங்கும் விழா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நேற்று (07) நடைபெற்றது.
இதில், சிறந்த அறிமுக நடிகை விருதுக்கு, பிரியங்கா சோப்ரா தேர்வு செய்யப்பட்டு, அவருக்கு விருது வழங்கப்பட்டது.
எம்மா ராபர்ட்ஸ், ஜெமி லீ குருடிஸ், லியா மிக்கெல் போன்ற நடிகையரின் கடும் போட்டியையும் மிஞ்சி, அதிக வாக்கு வித்தியாசத்தில், பிரியங்கா சோப்ரா வெற்றி பெற்றுள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக