நிலாவரை .கொம்

siruppiddy

ஞாயிறு, 24 நவம்பர், 2019

நடைப்பயிற்சிக்கு நாயுடன் சென்ற கர்ப்பிணிப் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

காட்டுப்பகுதியில் நடைப்பயிற்சிக்கு சென்றகொண்டிருந்த ஆறு மாத கர்ப்பிணிப் பெண்ணை நாய்கள் கடித்து கொன்றுள்ளதாக அவரது கணவர் கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளார்.பாரிஸிலில் ரெட்ஸ் வனப்பகுதியில் எலிசா பிலாஸ்கி என்ற 29 வயதுடைய 6 மாத 
கர்ப்பிணிப் பெண்ணே இவ்வாறு தனது வளர்ப்பு நாயுடன் நடைப்பயிற்சியை மேற்கொண்டுள்ளார்.அப்போது சில நாய்கள் அவரை சூழ்ந்து அவரை தாக்க முற்படுவதாக கணவருக்கு 
தொலைப்பேசி வாயிலாக தெரியப்படுத்தியுள்ளார். அந்நிலையில், விமான நிலையத்தில் தொழில்புரிந்து வந்த அவரின் கணவர் சுமார் 45 நிமிடங்களின் பின்னரே சம்பவம் இடம்பெற்ற இடத்தை அடைந்துள்ளார்.இதன்போது, பெரிய அதிர்ச்சியொன்று அவரிற்கு காத்திருந்தது. 
நாய்களால் கடித்து குதறப்பட்ட நிலையில் சடலமாக கிடந்த தன் மனைவியை
 பார்த்த அவர் கதறி அழுதுள்ளார். பின்னர் பொலிஸாருக்கு தகவலும் வழங்கியுள்ளார்.சம்பவ இடத்திற்கு விரைந்த 
பொலிஸார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
இந்நிலையில் பிலாஸ்கியை கடித்து குதறியது, அவரின் வளர்ப்பு நாயா? அல்லது காட்டில் சுற்றித்திறிந்த தெருநாய்களா என கண்டறிய டீ.என்.ஏ மாதிரிகளை பொலிஸார் பரிசோதிக்க அனுப்பி வைத்துள்ளனர்.இந்நிலையில், கர்ப்பிணி மனைவியை இழப்பானது, கணவனை பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>




வெள்ளி, 8 நவம்பர், 2019

நடந்த கார் விபத்தில் அமெரிக்காவில் பரிதாபமாக பலியான யாழ் இளைஞன்

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் அமெரிக்காவில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.யாழ்ப்பாணம் நெடுந்தீவை சேர்ந்த 28 வயது இளைஞர் ஒருவரே இவ்வாறு
 உயிரிழந்தவராவார்.குறித்த இளைஞர் கடந்த
 சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.கடந்த 2018-ம் ஆண்டில் 
அமெரிக்காவில் இடம்பெற்ற கார் விபத்தொன்றில் காயமடைந்து, சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே அவர் தற்போது உயிரிழந்துள்ளதாக அறியமுடிகின்றது.

செவ்வாய், 5 நவம்பர், 2019

கனடாவில் நடந்த பாரிய கார்த் திருட்டு வசமாக மாட்டிய ஈழத்து தமிழர்கள்

கனடாவில் பெரும் கார்த்திருட்டில் ஈடுபட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த சகோதரர்கள் இருவர் பொலிசாரிடம் மாட்டிக் கொண்டுள்ளனர்.விபத்தில் சிக்கிய கார் ஒன்றை பலவந்தமாக இழுத்து
 செல்ல முயன்றபோது, 
வாகனத்தின் உரிமையாளர் பொலிசாருக்கு அறிவித்ததையடுத்து, இரண்டு தமிழ் இளைஞர்களும் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவர்கள் எமகாதக 
திருட்டில் ஈடுபட்ட
 விடயம் அம்பலமானது.நமது ஊர்களில் சங்கக்கடைகளில் நிவாரணத்திற்கு வரிசையில் முந்திக்கொள்ள அடிபிடிப்பட்ட நினைவு உங்களிற்கிருக்கும். கனடாவில் விபத்தில் சிக்கிய வாகனங்களை, 
இழுத்து செல்லும் 
நிறுவனங்களும் கிட்டத்தட்ட அப்படித்தான். விபத்தொன்று நடந்தால், அந்த வாகனத்தை இழுத்துச் செல்ல பல நிறுவனங்களின் வாகனங்கள் அங்கு பாய்ந்து விழுந்து வரும்.
ஸ்கார்பாரோவைச் சேர்ந்த கபிலன் விக்னேஸ்வரன் (24), நகுல் விக்னேஸ்வரன் (30) ஆகிய இருவரும் விபத்தில் சிக்கிய வாகனங்களை இழுத்துச் செல்லும் நிறுவனமொன்றை நடத்தியுள்ளனர்.அண்மையில், கனடாவின் ஈஸ்ட் எக்லிண்டன் அவென்யூ 
மற்றும் வார்டன் அவென்யூ அருகே விபத்தில் சிக்கிய வாகனத்தின் உரிமையாளர், வாகனத்தை இழுத்துச் செல்ல நிறுவனமொன்றிற்கு அழைப்பு விடுத்துள்ளார். அதற்குள் அந்த 
பகுதிக்கு வந்த தமிழ் சகோதரர்கள் தமது இழுத்து செல்லும் வாகனத்தில், விபத்திற்குள்ளான வாகனத்தை கொழுவியுள்ளனர்.
வாகன உரிமையாளர் எதிர்ப்பு தெரிவித்தபோதும், அதை பொருட்படுத்தாமல் இழுத்துச் சென்றனர். இது குறித்து வாகன உரிமையாளர், பொலிசாருக்கு தகவல் வழங்கினார்.மான்வில் வீதியில் உள்ள 
கபி ஓட்டோ இன்க் 
நிறுவனத்திற்கு அந்த கார் கொண்டு செல்லப்பட்டிருந்தது. அங்கு சென்ற பொலிசார் விசாரணைகளை நடத்தினர். ஆரம்பத்தில் அங்கு பொலிசார் உள்நுழைய, உரிமையாளர்கள்
 எதிர்ப்பு தெரிவித்தாக 
கூறப்படுகின்றது.பொலிசார் அங்கு நடத்திய சோதனையில், திருடப்பட்ட இரண்டு விலை உயர்ந்த சொகுசுக்கார்கள் அங்கு மீட்கப்பட்டன. தமிழ் சகோதரர்களே அவற்றை திருடினார்கள் என்பது
 விசாரணைகளில் தெரிய வந்தது. 2015 பி.எம்.டபிள்யூ எம் 4 மற்றும் 2017 ஃபெராரி 4 ஜிஎஸ் ஆகிய கார்களே மீட்கப்பட்டன.வாகனத் திருட்டு உள்ளிட்ட பல குற்றச்சாட்டக்கள் அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது.
விசாரணைக்கு அழைக்கும்போது 
முன்னிலையாக வேண்டுமென்ற நிபந்தனையுடன் அவர்கள் வீடு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்தச் சம்பவத்தையடுத்து, விபத்தில் சிக்கிய வாகனங்களை
 கட்டியிழுக்கும் நிறுவனங்கள் தொடர்பாக, பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ள கனடிய பொலிசார், சில அறிவுறுத்தல்களையும் வெளியிட்டுள்ளனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>