நிலாவரை .கொம்

siruppiddy

சனி, 22 ஜூன், 2013

என்.எல்.சி நிறுவனத்தில் 5 சதவீத பங்குகள் விற்பனை

:
 
 ரூ.466 கோடி லாபம்  பங்குகளை விற்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக என்.எல்.சியின் தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன.
பொதுத்துறை நிறுவனங்களின் மொத்த பங்குகளில் குறைந்தபட்சமாக 10 சதவீதம் பொதுமக்களுக்கு கிடைக்கவேண்டும் என்ற விதிமுறை உள்ளது. இதனை 2013 ஒகஸ்ட் மாதத்துக்குள் நிறைவேற்ற வேண்டும் என மத்திய அரசுக்கு இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை அமைப்புகள் (செபி) வலியுறுத்தியிருந்தது.
இதன் காரணமாக நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் (என்.எல்.சி) பங்குகளில் 5 சதவீதத்தை பொதுமக்களுக்கு விற்கவேண்டிய கட்டாயம் மத்திய அரசுக்கு ஏற்பட்டதால் இதனைப் பற்றி பொருளாதார விவகாரத்துக்கான மத்திய அமைச்சரவை குழு பரீசீலனை செய்தது.
ஆனால் தமிழகத்தை சார்ந்த கட்சிகளும், என்.எல்.சி நிறுவன தொழிற்சங்க நிறுவனங்களும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடந்த மாதம் கடிதம் எழுதினார். அதில் என்.எல்.சியிலிருந்து நிலக்கரி உற்பத்தி மட்டுமின்றி மின்சார உற்பத்தியும் செய்யப்படுகிறது. இதன் பங்குகளை விற்பதன் மூலம் மின் உற்பத்தி பாதிப்பதோடு மட்டுமல்லாமல் இந்நிறுவனத்தில் இருந்து மின்சார உற்பத்தியும் பாதிக்கப்படும்.
மேலும் அந்நிறுவன தொழிளாளர்கள் போராட்டம் நடத்தக்கூடும், இப்பிரச்சனையை சமாளிப்பதற்கு பங்குசந்தை பட்டியலில் இருந்து என்.எல்.சியை நீக்கலாம் அல்லது இந்நிறுவனத்தின் பங்குகள் விற்பனை செய்யப்படுவதில் இருந்து சிறப்பு விலக்கு அளிக்க பங்குகள் ஒப்பந்த கட்டுப்பாடு விதிமுறை 1957- யை திருத்தம் செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.
இது தொடர்பாக டெல்லியில் கடந்த மாதம் நடைபெற்ற பொருளாதார விவகாரத்துக்கான மத்திய அமைச்சரவை கூட்டத்திலேயே இறுதி முடிவு எடுக்கப்பட இருந்தது. ஆனால் இறுதியில் இது பற்றி எந்த முடிவும் எடுக்காமல் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் செபியின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்ற கட்டத்தில் என்.எல்.சியின் ரூ.7.8 கோடி பங்குகளை அல்லது 5 சதவீத பங்குகளை விற்கலாம் என்று பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழுவிடம் பங்கு விற்பனை துறை அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து டெல்லியில் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரத்துக்கான மத்திய அமைச்சரவை குழு கூட்டத்தில் என்.எல்.சியின் 5 சதவீத பங்குகளை பொதுமக்களுக்கு விற்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. என்.எல்.சியில் மத்திய அரசுக்கு தற்போது 93.56 சதவீத பங்குகள் உள்ளன. மும்பை பங்கு சந்தையில் என்.எல்.சி பங்கு தற்போது ரூ.59.80க்கு விற்கப்படுகிறது. எனவே 5 சதவீத பங்கு விற்பனை மூலம் அரசுக்கு ரூ.466 கோடி கிடைக்கும் என்று தெரிகிறது
 

வெள்ளி, 21 ஜூன், 2013

பெண்னை நாய், மற்றும் பாம்புகளுடன் பூட்டி வைத்து ??


அமெரிக்காவிள்ள ஒஹியோ நகரில் வீடொன்றில் மனநிலை குன்றிய தாயையும் அவரின் பிள்ளையையும் சரியில்லாத  பாம்புகள், நாய்களுடன் அடைத்து வைத்து சித்திரவதை செய்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த நபர்களை இரண்டு வருடங்களாக அடைத்து வைத்து சித்திரவதை செய்த மூன்று பேரை பொலிஸார் கைது செய்துள்ளர்.
எனினும் பாதிப்படைந்த பெண்ணின் பெயரை பொலிஸார் வெளியிடவில்லை.
பாம்பு, நாயுடன் தங்கியிருக்கும் போது குழந்தையுடன் தாயை சேர விடாமல் தடுத்தனர். எனினுமம் தனது குழந்தைக்கு ரகசியமாக உணவு, தண்ணீர் கொடுத்திருக்கிறார் அந்த தாய்.
பலமுறை பெண்ணை பாம்புகளும், நாயும் கடித்திருக்கிறது. இதற்காக அந்த பெண்ணுக்கு வலி நிவாரண மாத்திரை கொடுத்திருக்கிறார்கள்.
அந்த பெண் எப்படியோ வெளியே தப்பி வந்தது இனிப்பு பொருட்களை திருடியதாக பொலிஸில் சிக்கினார். அப்போது அவர் ‘என்னை ஜெயிலுக்கு அனுப்புங்கள். வீட்டிற்கு போக விரும்பவில்லை’ என்று பொலிஸாரிடம் கெஞ்சியிருக்கிறார்.
ஒன்றாக தங்கியிருக்கும் நண்பர்களே தன்னையும், குழந்தையையும் சிறைவைத்து அளித்த கொடுமைகளை அம்பலப்படுத்தினார்.
இந்த கொடுமை தொடர்பாக 26 வயது Jordie Callahan என்ற பெண்ணும், 31 வயது Jessica Hunt  மற்றும் 33 வயது Daniel Brown ஆகிய மூன்று பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் மீது பொலிஸார் பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
 

வியாழன், 20 ஜூன், 2013

பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 3-குற்றவாளிகளின்


டொரண்டோவில் இளம் பெண் ஒருவரை மூன்று பேர் கூட்டாக சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியை பெரும் பரபரப்புக்கு உள்ளாக்கியுள்ளது.இந்த சம்பவம் சென்ற ஏப்ரல் 5ஆம் திகதி நடந்தது என்றும் தற்போது குற்றவாளிகளின் புகைப்படம் கிடைத்துள்ளதாகவும் டொரண்டோ காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
அதிகாலை மூன்று மணியளவில் டொரண்டோவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் Gloucester Street, east of Yonge Street, வாக்கிங் சென்று கொண்டிருந்தபோது, அவருக்கு பின்னால் வந்த மூன்று மர்ம நபர்கள், அந்த பெண்ணை குறித்து மோசமான கமெண்டுகள் கூறியபடி வந்துள்ளனர்.
பின்னர் திடீரென அவரை தூக்கிக் கொண்டு Norman Jewison Park அருகேயுள்ள மறைவான இடத்தில் மூன்று பேரும் பாலியல் பலாத்காரம் செய்து விட்டு மாயமாக மறைந்து விட்டனர்.
பாதிக்கப்பட்ட பெண் கூறிய அடையாளத்தை அடுத்து டொரண்டோ போலீஸார் குற்றவாளிகள் மூன்று பேர்களில் இரண்டு நபர்களின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.
முதல் குற்றவாளி சுமார் 30 வயதுடையவன் என்றும், சுமாரான உடலமைப்பும், அடர்ந்த பிரெளன் நிற முடியும், டார்க் கலரில் பேண்ட்டும், டி சர்ட்டும் அணிந்திருந்தான்.
இரண்டாம் குற்றவாளி சுமார் 20 வயதுடையவன் என்றும், ஐந்தடி ஒன்பது அங்குல உயரத்துடனும், ஒல்லியான உடலமைப்பை உடைய இவன், கிரே கலரில் உடை அணிந்திருந்தான்.
மூன்றாம் குற்றவாளி 20வயதுடையவன் என்றும், ஐந்தடி ஒன்பது அங்குல உயரத்தில் சுமாரான உடலமைப்பை கொண்டவன் என்றும், டார்க் நிற உடையணிந்து அதற்கு மேலே கோட் அணிந்திருப்பான் என்றும் கூறப்படுகிறது.
குற்றவாளிகள் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் உடனே 416-808-7474 or Crime Stoppers anonymously at 416-222-TIPS (8477) என்ற எண்களுக்கு தொடர்பு கொள்ளும்படி பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
 

செவ்வாய், 18 ஜூன், 2013

சிறிது நேரத்தில் இறந்து விடுவீர்கள்: நடுவானில் பரபரப்பு

 
விமான பயணிகள் சாப்பிட்ட உணவில் விஷம் வைக்கப்பட்டிருந்ததாகவும், சிறிது நேரத்தில் அனைவரும் இறந்து விடுவார்கள் என்றும் பீதி கிளப்பிய வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.
அரபு நாட்டில் இருந்து நியூயார்க் சென்று கொண்டிருந்த யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்றில் 116 பயணிகள் பயணம் செய்தனர்.
விமானம் ஹாங்காங் வான் பகுதியில் பறந்து கொண்டிருந்த போது, வாலிபர் ஒருவர் திடீரென இருக்கையில் இருந்து எழுந்து பயணிகள் சாப்பிட்ட உணவில் விஷம் வைத்திருக்கிறேன். எல்லோரும் சிறிது நேரத்தில் சாக போகிறீர்கள் என்று கூறினார்.
இதனால் விமானத்தில் இருந்த பணிகள் அனைவரும் பீதியடைந்தனர். இதுகுறித்து விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
எனினும் விமானத்தை நடுவழியில் தரையிறக்காமல், விமானி நியூயார்க் சென்று, லிபர்ட்டி ஏர்போர்ட்டில் தரையிறக்கினார்.
அங்கு விமான நிலைய பாதுகாப்பு படை வீரர்கள், ஆம்புலன்சில் மருத்துவ குழுவினர் தயாராக இருந்தனர். அதற்குள் விஷம் பரவி இறந்து விடுவோமோ என்ற பீதியிலேயே பயணிகள் இருந்தனர். விமானம் தரையிறங்கியதும் பாதுகாப்பு வீரர்கள் விரைந்து சென்று பீதி கிளப்பிய வாலிபரை மடக்கி அழைத்து சென்றனர்.
இதுகுறித்து விமானத்தில் பயணம் செய்த சான் பிரான்ஸ்சிஸ்கோ பல்கலை மாணவர் மெரில் ஆமோஸ் கூறுகையில், விமானம் புறப்படும் முன்பாக ரெஸ்டாரன்டில் பயணிகள் சாப்பிட்டு கொண்டிருக்கும் போது அங்குள்ள கண்ணாடி வழியாக நீண்ட நேரம் அந்த வாலிபர் பயணிகளை பார்த்து கொண்டிருந்தார். அவர் மனநிலை பாதிக்கப்பட்டவரா என்று தெரியவில்லை என்றார்.
வாலிபரின் பெயர் உள்ளிட்ட விபரங்கள் வெளியிடப்படவில்லை. விமான பயணிகளை உடனடியாக பரிசோதித்து பார்த்தனர், உணவில் விஷம் எதுவும் கலந்திருக்கவில்லை என்பது உறுதியானது. அதன்பிறகே அனைவரும் நிம்மதி அடைந்தனர்.
 

காட்டுத் தீ; சிங்கப்பூர், மலேஷியாவில் புகை சூழ


 வரலாறு காணா அலவு சுமத்ரா காடுகளில் காட்டுத் தீ பற்றி எரிகிறது. இந்த காட்டுத் தீயால் சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் கடும் புகை சூழ்ந்துள்ளது. இது கடந்த 15 ஆண்டுகளில் ஏற்பட்ட பனிமூட்டம் போன்ற தோற்றத்தை ஏற்படுத்திவிட்டதாக கூறப்படுகிறது.
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் உள்ள காடுகளில் திடேரென ஏற்பட்ட தீயால் பெரும் காடுகள் பற்றி எரிகின்றன.
இதனால் இரவு பகலாக காட்டு தீ எரிந்து கொண்டிருக்கிறது. இந்த தீயினால் ஏற்பட்ட புகை, சிங்கப்பூரை சூழ்ந்துள்ளது. இந்த புகை மண்டலம் மலேசியாவிலும் பரவி வருகிறது. கடும் புகை மண்டலத்தால் மக்கள் கண் எரிச்சல் மற்றும் நெஞ்செரிச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் பலர் வீட்டை விட்டு வெளியே வருவதற்கு தயங்குகின்றனர். நேற்று பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. காட்டு தீ தொடர்ந்து எரிவதால் ஏற்படும் புகையினால் சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் போக்குவரத்து மற்றும் வர்த்தகம் பாதிக்கப்படும் என அஞ்சப்படுகிறது

வெளிநாட்டு தலைவர்களை பிரிட்டன் ரகசியமாக உளவு பார்த்தது அம்பலம்


ஜி20 மாநாட்டிற்கு வந்த தலைவர்களின் செயல்பாடுகளை பிரிட்டன் உளவுத்துறை ரகசியமாக கண்காணித்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது.
அமெரிக்காவின் ரகசிய உளவு வேலைகள் குறித்த தகவல்களை வெளியிட்ட அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏவின் முன்னாள் பணியாளர் எட்வர்ட் ஸ்னோடென் இத்தகவலையும் தெரிவித்துள்ளார்.
2008-ம் ஆண்டில் ஏற்பட்ட சர்வதேச பொருளாதார நெருக்கடி தொடர்பாக விவாதித்து முக்கிய முடிவுகள் எடுப்பதற்காக 2009-ம் ஆண்டு ஏப்ரல், செப்டம்பர் மாதங்களில் லண்டனில் ஜி20 நாடுகளின் மாநாடு நடைபெற்றது.
மாநாட்டுக்கு வரும் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் பயன்படுத்துவதற்காக சிறப்பு இன்டர்நெட் மையங்களை பிரிட்டன் உளவுத் துறை அமைத்துள்ளது.
மேலும் மாநாட்டில் பங்கேற்றுள்ள தலைவர்கள், யார் யாருடன் என்ன பேசுகிறார்கள் என்பதை கண்காணிக்க 45 பேர் கொண்ட குழுவை பிரிட்டன் உளவுத் துறை நியமித்துள்ளது.
துருக்கி நிதியமைச்சர் மெஹ்மத் சிம்செக், தென்னாப்பிரிக்க தலைவர்கள் உள்பட 15 பேரது செயல்பாடுகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் வெளிநாட்டு தலைவர்களின் தொலைபேசி உரையாடல்கள், அவர்கள் தங்கள் நாட்டுடன் பரிமாறிக் கொண்ட மின்னஞசல்கள் மற்றும் மடிக்கணனிகளில் உள்ள தகவல்களை ரகசியமாக பதிவு செய்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது.
இதனிடையே ஜி8 நாடுகளின் மாநாடு பிரிட்டனில் நேற்று தொடங்கியுள்ளது.
எனவே உளவு பார்த்தது தொடர்பான குற்றச்சாட்டு குறித்து பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் விளக்கமளிக்க வேண்டுமென்று மாநாட்டில் பங்கேற்கும் பிற நாட்டுத் தலைவர்கள் வலியுறுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விளைவுகளை சந்திக்க நேரிடும்: ஐரோப்பிய நாடுகளுக்கு சிரியா

 
சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கும் போராளிகளுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இதில், இதுவரை 93,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த போரில் பொதுமக்கள் மீது அதிபர் படை இராசயன ஆயுதங்களால் தாக்குகிறது என்று அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
இதனால் போராளிகளுக்கு ஆயுதங்கள் வழங்கி அமெரிக்கா உதவும் என்று கூறியது. இதற்கு சவால் விடும் விதமாக சிரியாவின் முக்கிய ஆதரவு நாடான ரஷ்யாவும், சிரியாவிற்கு ராஜதந்திர உதவிகள் மற்றும் ஏவுகணைகள் அனுப்பிவைக்கப்படும் என்று கூறியது.
இந்நிலையில், ஜெர்மனியில் இருந்து வெளியாகும் நாளிதழுக்கு சமீபத்தில் பேட்டியளித்த சிரியா அதிபர் பஷர் அல் ஆசாத் ஐரோப்பிய நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அந்த பேட்டியில் பஷர் அல் ஆசாத் கூறியுள்ளதாவது:-
எனது ஆட்சிக்கு எதிராக போராடி வரும் கலகக்காரர்களுக்கு ஐரோப்பிய நாடுகள் ஆயுதங்களை அளித்தால், நாளடைவில் கொல்லைப்புறம் வழியாக அந்த நாடுகளில் தீவிரவாதம் தலைதூக்கும்.
தற்போதைய செயல்களுக்காக பின்நாளில் அந்த நாடுகள் எல்லாம் பெரும் விலையை தர வேண்டியதாகி விடும். கடும் விளைவுகளையும் சந்திக்க நேரிடும்.
இந்த தீவிரவாதிகள் பிரிவினை கொள்கையுடன் ஐரோப்பிய நாடுகளின் அரசுக்கு எதிராக கடுமையான உள்நாட்டுப் போரில் ஈடுபடுவார்கள்.
எனது மக்களுக்கு எதிராக நான் ரசாயன ஆயுதங்களை உபயோகிப்பதாக குற்றம் கூறும் பிரான்ஸ், இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகள், தங்களது கூற்றுக்கு ஆதாரம் இருந்தால் அதை உலக மக்களின் முன்பு நிரூபிக்க வேண்டும்.
ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி எங்கள் ராணுவம் 150 பேரை கொன்றுவிட்டதாக இந்த நாடுகள் அபத்தமான பொய்யை கூறி வருகின்றன.
ரசாயன ஆயுதம் என்பது, ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான மக்களை அழிப்பதற்காக உருவாக்கப்பட்டவைதான். இவற்றை பயன்படுத்தி 150 பேர் மட்டும் உயிரிழந்துள்ளனர் என்று இந்த நாடுகள் குற்றம் சாட்டுவதை வைத்தே இவர்கள் கூறுவது அபத்தமான பொய்தான் என்பது உலகிற்கு தெரியும் என அசாத் குறிப்பிட்டுள்ளார்
 

திங்கள், 17 ஜூன், 2013

மோதிரத்தை ஜனாதிபதி புடின் திருடி விட்டார்பரபரப்பு குற்றச்சாட்டு அரிக்கன் கால் பந்து அணியின் உரிமையாளரான, அமெரிக்காவைச் சேர்ந்த 72 வயதான தொழில் அதிபர் ராபர்ட் கிராப்ட், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் மீது திடுக்கிடும் புகார் ஒன்றை தெரிவித்துள்ளார்.
கடந்த 2005-ம் ஆண்டு ரஷிய அதிபர் புதின் கலந்து கொண்ட செயின்ட் பீட்டர்ஸ் பர்க்கில் நடந்த விழாவில் நானும் பங்கேற்றேன். அப்போது நான் அணிந்திருந்த ரூ.15 லட்சம் மதிப்புள்ள வைர மோதிரத்தை கழற்றி நான் அவரிடம் காட்டினேன்.
அதை வாங்கி பார்த்து பாராட்டிய அவர் அதை தனது பாக்கெட்டில் போட்டுக் கொண்டு அதாவது அதனை திருடி சென்று விட்டார் என ராபர்ட் கிராப்ட் குற்றஞ் சாட்டியுள்ளார்.
அதை நான் அவருக்கு எனது நினைவு பரிசாக வழங்க நினைத்திருந்தேன். ஆனால், அவர் இதுபோன்று செய்வார் என நான் நினைக்கவில்லை.
இச்சம்பவம் புஷ் அதிபராக இருந்தபோது நடந்தது. இது குறித்து நான் வெள்ளை மாளிகையில் புகார் செய்தேன்.
ஆனால், இதன் மூலம் அமெரிக்கா-ரஷியா உறவில் சிக்கல் ஏற்படும் எனவே இதை பெரிதுபடுத்த வேண்டாம் என அதிகாரி தெரிவித்து விட்டதனால் அதை நான் கண்டு கொள்ளவில்லை என்றார்.
இந்த தகவலை சமீபத்தில் நியூயார்க்கில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் நடந்த நிகழ்ச்சியில் இதை அவர் தெரிவித்தார்.
ஆனால், புதினின் செய்தி தொடர்பாளர் அந்த மோதிரம் அவருக்கு பரிசாக வழங்கப்பட்டது என்று கூறி தொழில் அதிபர் ராபர்ட் கிராப்ட்டின் இந்த புகாரை மறுத்துள்ளார்.
 

இத்தாலிக்குள் நுழைய முயன்ற 650 பேர் நடுக்கடலில்


  ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு சட்டவிரோதமாகக் குடியேறுபவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகமாகி உள்ளதனால் பெரும்பாலோர் கடல்வழி பயணத்தை மேற்கொள்ளும் போது ஆபத்தில் சிக்க நேரிடுகின்றது.
கடந்த வாரம் இத்தாலி நாட்டிற்கு கடல் வழியே குடியேறியவர்களின் எண்ணிக்கை 900-க்கும் மேல் அதிகரித்துள்ள நிலையில், நேற்று முன்தினம் இதுபோல் கடல் வழியே இத்தாலிக்குள் நுழைய முயன்ற படகின் என்ஜின் பழுதடைந்த காரணத்தால் நடுக்கடலில் தத்தளித்த 650 பேரை கடலோரக் காவல்படையினர் பத்திரமாக காப்பாற்றி கரை சேர்ந்தனர்.
இந்த நிலையில் நேற்றும் கூட மத்திய தரைக்கடல் பகுதி வழியாக இத்தாலிக்குள் வரமுயன்ற இரண்டு படகுகள் பழுதாகி நடுக்கடலில் நின்றுவிட்டன.
இப் படகுகளில் பயணம் செய்த ஏராளமானோர் சிசிலி தீவு கரையோரம் கடலில் தத்தளித்துக் கொண்டிருப்பதாக கடலோரக் காவல்படையினருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கடலோர காவல் படையினர் மீட்புப் பணியில் இறங்கினர்.
அப்போது பழுதாகி நின்ற இரண்டு படகுகளில் இருந்த சுமார் 300-க்கும் மேற்பட்டவர்களை பத்திரமாக கடலோர காவல் படையினர் மீட்டனர்.
ஆனால், ரோந்து படையினரை கண்டதும் சிலர் பயத்தில் படகுகளிலிருந்து கடலில் குதித்து விட்டனர். அவர்களையும் கடலோரக் காவல் படையினர் பத்திரமாக மீட்டனர்.
இதுபோல் எரிடோரியா நாட்டிலிருந்து வந்த 100 பேரும், மற்றொரு படகில் இருந்த 55 பேரும் லம்படூசா என்ற தீவில் இறக்கி விடப்பட்டனர்.
தட்பவெப்ப நிலை சீராக இருப்பதனால் கடல் வழியாக இத்தாலிக்கு வருபவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகின்றது.

 

சிறுமியை கட்டாய திருமணம் செய்த 50 வயது கிழவன்

 
பழைய பகையை தீர்த்துக்கொள்வதற்காக பெண் கொடுப்பதும், பெண் எடுப்பதும் பாகிஸ்தானில் இன்றளவும் நடைமுறையில் உள்ளது. இந்த நடைமுறையை 'வானி' என்று அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ஹபீசாபாத் மாவட்டம், மலாஹன்வாலா பகுதியை சேர்ந்த முகம்மது அக்ரம் என்பவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் முனாவரன் என்ற பெண்ணை கடத்திச் சென்று விட்டார். பின்னர், அந்த பெண்ணையே இரண்டாம் மனைவியாக திருமணம் செய்துக்கொண்டு அவருடன் குடும்பம் நடத்தினார்.
 இதனால் அக்ரம் குடும்பத்தாருக்கும், முனாவரன் குடும்பத்துக்கும் இடையில் தீராத பகை இருந்து வந்தது.
இந்த நெடுங்கால பகையை தீர்த்து கொள்வதற்காக தனது முதல் மனைவி மூலம் பிறந்த 10 வயது மகளை முனாவரனின் 50 வயது சகோதரனுக்கு 'வானி' முறையின்படி இரண்டாம் தாரமாக திருமணம் செய்து வைக்கும்படி பஞ்சாயத்தார் தீர்ப்பளித்தனர்.
இதனையடுத்து, உள்ளூர் மதகுரு ஒருவருடன் தனது நண்பர்கள் சகிதமாக அக்ரமின் வீட்டுக்குள் நுழைந்த முனாவரனின் அண்ணன் பலக் ஷேர் என்பவர், அக்ரமின் முதல் மனைவி கண் எதிரிலேயே பலவந்தமாக அந்த 10 வயது சிறுமியை திருமணம் செய்துக்கொண்டு தனது வீட்டுக்கு இழுத்துச்சென்றார்.
அவரது பிடியில் இருந்து தப்பி வந்த அந்த சிறுமி அளித்த புகாரின் பேரில் மணமகன் பலக் ஷேர், உள்ளூர் மதத் தலைவர் உள்பட 9 பேர் மீது பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்
 

புதிதாக குறைந்து வரும் தொழில் ,


சுவிட்சர்லாந்தில் தற்போது புதிதாக தொழில் முனைவோர், புதிய சிந்தனையாளர்கள், ஊக்குவிப்பாளர்கள் மற்றும் தனித்துவம் சார்ந்த திறமையாளர்கள் அநேக அளவில் இருப்பதில்லை என ஸ்டீபன் கார்லி தெரிவித்துள்ளார்(global competition specialist Stéphane Garell).
இன்றைய இனைஞர்கள் யாருடனும் போட்டிபோடவும் சவாலான விடையங்களை செய்யவும் தயங்குகின்றனர். புதிய முயற்சிகளை எடுப்பதற்கு வெகுவாக யோசிக்கின்றனர்.
தொழில் மீதும், புதிய தொழில்களை தொடங்குவது குறித்த ஆர்வம் வெகுவாக குறைந்து காணப்படுகின்றது.
சூரிச்சின் KOF பொருளாதர ஆராய்ச்சி மையம் வெளியிட்ட அறிக்கையில் ஜரோப்பிய தேசத்தில் புதிதாக தொழில் முனைவோர் மற்றும் வித்தியாசமான தொழிலினை உருவாக்குவோர் பட்டியலி்ல் இரண்டாம் இடத்தில் இருந்தது.
ஆனால் அதன் நிலமையில் தற்போது மாற்றம் ஏற்பட்டு பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. அதற்கான போட்டிகளும் வெகுவாக குறைந்துவிட்டதாக ஆய்வின் தகவல்கள் தெரிவித்துள்ளன.
 

எட்வார்ட் ஸ்னோவ்டெனுக்கு இங்கிலாந்து செல்வதற்கு ??


 அமெரிக்க தேசிய பாதுகாப்பு முகவர் நிலையத்தின் மீது பகிரங்கமாக குற்றஞ் சாட்டிய "எட்வார்ட் ஸ்னோவ்டென்" அமெரிக்காவை விட்டு தற்போது பேங்காக்கில் தங்கியிருக்கலாம் என ஒரு சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் இங்கிலாந்து ஸ்னோவ்டெனுக்கு தஞ்சமளிக்க வெளிப்படையாகவே மறுப்பு தெரிவித்துள்ளது. அத்துடன் உலகின் முக்கிய ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் அனைத்துக்கும் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
தாய்லாந்து விமான நிலையத்தில் ஸ்னோவ்டென்னின் புகைப்படம் ஒண்றைக் கண்ட அசோசியெட் பிரஸ் ஊடகவியலாளர் இது தொடர்பில் பிரித்தானியாவிடம் விசாரித்த போதே பிரிட்டன் விடுத்திருந்த இக்கட்டளைப் பற்றி தெரியவந்துள்ளது.
அக்கட்டளையில் "ஸ்னோவ்டென் இரகசியமாக இங்கிலாந்து வருவதற்கு முயற்சிக்க கூடும். எனவே அவருக்கு எந்தவொரு ஏர்லைன்ஸ் விமானமும் தமது சேவையை பயன்படுத்த அனுமதி தரக்கூடாது" என கூறியுள்ளது.
இதேவேளை ஸ்னோவ்டெனுக்கு இந்தியா புகலிடமளிக்க வேண்டுமென விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் தெரிவித்துள்ளார்.
மேலும், ஸ்னோவ்டென் தொலைத் தொடர்பு, இணையச் சேவைகள், சமூக வலைத்தளங்கள் உதவியுடன் பெருமளவிலான இந்தியர்களின் தனிப்பட்ட விபரங்களையும் அமெரிக்க பாதுகாப்புத்துறை சேகரிக்க முனைவதாக குற்றம் சாட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்னோவ்டென் இந்த இரகசிய நடவடிக்கை பற்றி வெளியுலகுக்கு தெரியப்படுத்தியதற்காக இந்தியா அவருக்கு நன்றி கூறவேண்டும்.
இதற்காகவாது இந்தியா அவருக்கு புகலிடம் அளிகக் வேண்டும் என ஜூலியன் அசாஞ்ச் கூறியுள்ளார்.
 

ஞாயிறு, 16 ஜூன், 2013

பிரான்ஸில் சீன மாணவர்கள் மீது தாக்குதல்


 பிரான்ஸ் நாட்டின் "போர்டே" பகுதி மது உற்பத்திக்கு பிரசித்தி பெற்றதோடு அங்கு மொத்தம் 120000 ஹெக்டர் பரப்பளவில் திராட்சை உற்பத்தி நடைபெற்று வருகின்றது.
அங்கு ஆண்டுதோறும் சராசரியாக 700 மில்லியன் பாட்டில்கள் மது தயாரிக்கப்படுகின்றது.
சீன மாணவர்கள் 6 பேர் மது தயாரிப்பைப் பற்றி ஒரு வருடம் படிப்பதற்கும், பயிற்சி பெறவும் இங்கு வந்து போர்டே அருகில் உள்ள லேண்டஸ் என்ற பகுதியில் உள்ள ஹோஸ்டன்ஸ் என்ற கிராமத்தில் ஒரு வீட்டில் தங்கியிருந்தனர்.
கடந்த வெள்ளிக்கிழமையன்று அந்தப் பகுதிக்கு வந்த மூன்று பேர் நன்கு குடித்துவிட்டு மாணவர்கள் இருக்கும் வீட்டின் முன் வந்து வீட்டினுள் நுழைய முற்பட்டவேளை மாணவர்கள் அவர்களைத் தடுத்தனர்.
அப்போது ஏற்பட்ட கலவரத்தில், அங்கிருந்த ஒரு மாணவியின் முகத்தில் கண்ணாடி பாட்டில் குத்தியதால் காயமேற்பட்டது.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பிரான்சின் உள்துறை அமைச்சரான மானுவல் வல்ஸ், இது இனவெறியைக் குறிக்கும் என்று கண்டனம் தெரிவித்தார். இத் தாக்குதல் சீன மக்களிடையே பெரும் அதிருப்தியைத் தோற்றுவித்துள்ளது.
ஒரு பிரபலமான இணையதளத்தில் சீன மக்கள் தங்கள் கோபத்தை வெளிக்காட்டியுள்ளனர். "பிரான்சின் நற்பெயர் கெட்டுவிட்டது என்றும் சீன மக்கள் பிரான்ஸ் நாட்டிற்கு செல்லக்கூடாது" என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
பிரான்சிலுள்ள திராட்சைத் தோட்டங்களில் சீனர்கள் முதலீடு செய்வது உள்ளூர் மக்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளதால், அதன் வெளிப்பாடாக இந்தத் தாக்குதல் இருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன
 

சி.ஐ.ஏ.வுக்கு ரகசிய உளவு விமான தளம்என்னங்க இது புதிய கதை? இந்தியாவில், ! அந்தமான், நிக்கோபார் தீவுகளின் தலைநகர் போர்ட் பிளேர், அநேக இந்தியர்களுக்கு ஒரு உல்லாசப் பயண ஸ்தலம் மட்டுமே. ஆனால், போர்ட் பிளேர் என்ற பெயர் தற்போது படு தீவிரமாக பென்டகனில் அடிபட்டுக் கொண்டிருக்கிறது என்பது, அநேக இந்தியர்களுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை.
பென்டகன் எதற்காக போர்ட் பிளேர் பற்றி யோசிக்க வேண்டும்? அமெரிக்காவின் உளவு விமான ஆபரேஷன்களுக்கான ஆபரேஷன் தளம் ஒன்றை போர்ட் பிளேரில் அமைக்க விரும்புகிறார்கள் அவர்கள்.
அதாவது, தற்போது ஆப்கானிஸ்தானில் அமெரிக்க உளவுத்துறை சி.ஐ.ஏ. அமைத்துள்ள உளவு விமான தளம் போல ஒன்றை அந்தமான் தீவுகளில் அமைக்கும் முடிவில் உள்ளார்கள் அவர்கள். இது தொடர்பாக மத்திய அரசிடம் ஒரு தடவை பேசப்பட்டுள்ளது என்றும் சொல்கிறார்கள், ராணுவ வட்டாரங்களில்.
நேற்று நாம் வெளியிட்ட கிரைம் தொடர்பான கட்டுரையின் ஆங்கில லிங்கில் அதிக எண்ணிக்கையான வாசகர்கள் சென்று விளம்பரங்களில் கிளிக் செய்து ஆதரவு தெரிவித்திருந்தனர். எமது நன்றிகள்.  இந்தக் கட்டுரை ராணுவம் தொடர்பான கட்டுரை.  இதற்கு வாசகர்களின் ஆதரவு எப்படி இருக்கிறது பார்க்கலாம்.
இந்தியா தற்போது சீனாவுடன் ஒருவித ராணுவ ரீதியான முறுகல் நிலையில் உள்ளதால், அந்தமானில் உளவு விமான தளம் அமைப்பதற்கு இந்திய மத்திய அரசு அனுமதி தரும் என நினைக்கிறது அமெரிக்கா.
பென்டகன் அதிகம் பிரஸ்தாபிக்காமல் வைத்திருந்த இந்த திட்டம், எதிர்பாராத விதமாக ராணுவ வட்டாரங்களில் தெரிய வந்து விட்டது. ஆனால், இந்தியாவில் யாரும் இது பற்றி பேசுவதாக தெரியவில்லை.
சரி. கதை எப்படி வெளியே தெரிய வந்தது? அமெரிக்க செனட் பாதுகாப்பு கமிட்டி, பென்டகனுக்கு உத்தரவு ஒன்றை கொடுத்திருந்தது. ஆப்கானில் இருந்து அமெரிக்க ராணுவம் விரைவில் வெளியேறவுள்ள நிலையில், தென்னாசிய பகுதியில் உளவு விமானத் தளங்களுக்கு சரியான இடங்கள் பற்றிய அறிக்கை ஒன்றை கேட்டிருந்தது.
பென்டகன், இந்தப் பொறுப்பை அமெரிக்க ராணுவத்துக்கான கள ஆய்வுகளை செய்யும் ரான்ட் கார்ப்பரேஷனிடம் (RAND Corporation) கொடுத்திருந்தது. இவர்கள் முழுமையான ஆய்வு செய்து அறிக்கை கொடுத்து விட்டனர். அந்த அறிக்கை பென்டகனால் அப்ரூவல் கொடுக்கப்பட்டு, அமெரிக்க செனட் பாதுகாப்பு கமிட்டியிடம் போயிருக்கிறது.
இந்த அறிக்கை லீக் ஆனதில், விஷயம் ராணுவ வட்டாரங்களில் தெரியவந்துள்ளது.
ரான்ட் கார்ப்பரேஷன் அறிக்கையில் குறிக்கப்பட்டுள்ள, உளவு விமான தளத்துக்கான ஐடியல் ஸ்பாட் – போர்ட் பிளேர். அந்தமான் நிக்கோபார் தீவுகளின் தலைநகர்!
பென்டகன், 3 நாடுகளை ‘அமெரிக்கா ராணுவ ரீதியாக ஒரு கண் வைத்திருக்க வேண்டிய நாடுகள்’ என்ற பிரிவில் வைத்திருக்கிறது. ஈரான், வட கொரியா, சீனா ஆகியவையே இந்த 3 நாடுகள். இவற்றில் சீனா மீது ஒரு கண் வைத்திருக்க ஐடியல் இடம், போர்ட் பிளேரில் உளவு விமானத்தளம் அமைப்பது.
இந்தியாவுக்கும் சீனா மீது ராணுவ ரீதியான உரசல் இருப்பதால், இந்தியா தலையாட்டி விடும் என்பது, பென்டகனின் வியூ பாயின்ட் (ஒருவேளை இதற்காகவே இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே சமீபகால உரசலை ஏற்படுத்தினார்களோ… ஆண்டவனுக்குதான் வெளிச்சம்! ஆனால், சி.ஐ.ஏ. முன்பு ஈரானுக்கும், ஈராக்குக்கும் இடையே செயற்கையான உரசல் ஒன்றை ஏற்படுத்தி வெற்றி கண்டது என்பதை மறக்காதீர்கள்)
மற்றொரு விஷயமும் இங்கு உள்ளது.
சி.ஐ.ஏ.வுக்கு பாகிஸ்தானில் ஒரு ரகசிய உளவு விமான தளம் இருந்தது. பாகிஸ்தான் அரசின் அனுமதியுடன் அந்த தளம் அமைக்கப்பட்டு இருந்தாலும், அந்த தளத்தின் ஆபரேஷன் ரகசியமாகவே இருந்தது.
சரியாகச் சொல்ல வேண்டுமென்றால், பாகிஸ்தானில் ஷாம்சி என்ற இடத்திலுள்ள விமானப்படை தளத்தில் இருந்துதான் ஆரம்பத்தில் சி.ஐ.ஏ.வின் உளவு விமானங்கள் புறப்பட்டுச் சென்று ஏவுகணை தாக்குதல்களை நடத்தின. ஷாம்சி என்பது ஒரு சிறிய ஊர். பாலுசிஸ்தானின் குவேட்டா நகரிலிருந்து 350 கி.மீ. தென்மேற்கில் இருக்கிறது.
ஷாம்சியில் அமைந்துள்ள இந்த விமானத்தளம் பரவலாக அறியப்பட்டதல்ல. ஆப்கான் யுத்தத்துக்கு முந்திய காலங்களில் சவுதிப் பணக்காரர்கள் பறவை வேட்டைக்காக பாகிஸ்தான் வரும்போது பயன்படுத்திய விமானத்தளம் இது. அதாவது தனியார் விமானங்கள் வந்துபோகும் ஒதுக்குப்புறமான, சிறிய விமானத்தளம். (அந்த நாட்களில் பண்டாரி விமானத்தளம் என்றே அறியப்பட்டிருந்தது)
எல்லாமே நன்றாக போய்க்கொண்டிருக்கையில், சி.ஐ.ஏ.வுக்கும், பாகிஸ்தான் உளவுத்துறை ஐ.எஸ்.ஐ.க்கும் முறுகிக் கொண்டது. அதையடுத்து, கடந்த 2011-ம் ஆண்டு மே மாதம், ஐ.எஸ்.ஐ. ஒரு காலை வாவாரிவிடும் திட்டத்தை போட்டது. ஷாம்சியில் அமெரிக்க ரகசிய உளவு விமான தளம் இயங்குவதை பாகிஸ்தான் மீடியாக்களுக்கு ‘லீக்’ செய்தது.
அதற்கு முன்புகூட, ஷாம்சி விமானத் தளம் பற்றிய தகவல்கள் அரசல் புரசலாக வெளியாகியிருந்தன. ஆனால், சராசரி பாகிஸ்தானி பிரஜையை அவை சென்றடையவில்லை.
ஜனவரி 2002-ல் அமெரிக்க விமானப்படையின் கே.சி.130 ரக விமானம் ஒன்று ஷாம்சி விமானத் தளத்தில் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளாகி நொருங்கியது. அதில் பயணம் செய்த அனைவரும் கொல்லப்பட்டனர். இந்தச் செய்தி வெளியானபோதுதான் அப்படியொரு தளம் பாகிஸ்தானுக்குள் இருக்கும் விஷயம் முதலில் வெளியாகியது.
2006-ல் ஷாம்சி விமானத்தளத்தை அமெரிக்க விமானப்படை காலி செய்துகொண்டு போய்விட்டது. இப்போது அமெரிக்கப் படைகள் அங்கே இல்லை என்று பாகிஸ்தானும் அறிவித்தது.
ஆனால் அதன்பின்னரும் சி.ஐ.ஏ. அந்தத் தளத்தை ரகசியமாக உபயோகித்துக் கொண்டிருந்தது.
2009-ல் பிரிட்டிஷ் பத்திரிகையான த டைம்ஸ் இந்தத் தளத்தை சி.ஐ.ஏ. உபயோகிக்கின்றது என்ற சந்தேகத்தை எழுப்பியது. வானிலிருந்து எடுக்கப்பட்ட கூகிள் ஏர்த் படம் ஒன்றில் இந்தத் தளத்தில் சி.ஐ.ஏ.யின் பிரிடேட்டர் (விமானியற்ற) விமானம் பார்க் பண்ணப்பட்டிருப்பது தெளிவாகத் தெரிவதாக த டைம்ஸ் எழுதியது.
நவம்பர் 2009ல் நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகைக்குக் கருத்துத் தெரிவித்த பாகிஸ்தானிய ராணுவ அதிகாரி ஒருவர், “2009ம் ஆண்டு நடுப்பகுதியிலேயே ஷாம்சி விமானத் தளத்திலிருந்து சி.ஐ.ஏ. வெளியேறிவிட்டது” என்று கூறியிருந்தார்.
அதன் பின்னரும் சி.ஐ.ஏ. அங்கிருந்தது.
2011-ம் ஆண்டு மே மாதம் ஐ.எஸ்.ஐ.யும், சி.ஐ.ஏ.வும் முறுகிக் கொள்ளவே, ஐ.எஸ்.ஐ. சி.ஐ.ஏ. அங்கிருக்கும் விபரத்தை நியூயார்க் டைம்ஸ் போன்ற பாகிஸ்தானை ரீச் செய்யாத மீடியாவுக்கு கொடுக்கவில்லை. பக்கா லோக்கல் பாகிஸ்தான் பத்திரிகைகளில் கதை வருமாறு பார்த்துக் கொண்டது.
பாகிஸ்தான் மீடியாக்கள் போட்டுத்தாக்க, பாகிஸ்தானில் மக்கள் போர்க்கொடி தூக்க, வேறு வழியில்லாமல் சி.ஐ.ஏ. தமது உளவு விமானங்களுடன் இடத்தை காலி செய்தது. அதன்பின் பாகிஸ்தானில் சி.ஐ.ஏ.வின் உளவு விமானத் தளம் இல்லை.
இவ்வளவுக்கும் பின், இனி அந்தப் பக்கம் போக முடியாது. தற்போது ஆப்கானிஸ்தானில் சி.ஐ.ஏ.வுக்கு உள்ள உளவு விமானத்தளம் ரகசியமானதல்ல. அங்கிருந்து அமெரிக்க ராணுவம் விரைவில் முழுமையாக வெளியேற போகிறது. அதன்பின் அங்கு தலிபான்களின் கை ஓங்கும். இதனால், ஆப்கானில் ஒரு உளவு விமானத் தளத்தை வைத்து இயக்கினால், தலிபான் தாக்குதல் நிச்சயம்.
இதனால், எந்த சிக்கலும் இல்லாத, இந்தியாவின் அந்தமான் தீவுகள் ஐடியல் என்று நினைக்கிறது பென்டகன்.
ரான்ட் கார்ப்பரேஷனின் அறிக்கை செனட் பாதுகாப்பு குழுவால் கொள்கை அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக தெரிகிறது. அடுத்துவரும் வாரங்கள், அல்லது மாதங்களில், இந்தியாவுக்கு அமெரிக்கா எதையாவது ‘வாரி வழங்குகிறதா’ என்பதை கவனமாக பாருங்கள்.

உயிருக்கு போராடும் கவிஞர் வாலி -


 
அதிர்ச்சியில் திரையுலகம் 'கண்ணதாசனுக்குப் பின்  இலக்கிய உலகிலும் வாலிபக் கவிஞர் என திரையுலகிலும் புகழப்படும் கவிஞர் வாலி, உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிரபல சினிமா பாடலாசிரியர் கவிஞர் வாலி. 82 வயதாகும் இவருக்கு 2 நாட்களுக்கு முன் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூச்சுத்திணறல் காரணமாக சேர்க்கப்பட்டுள்ள அவருக்கு அவசர‌ சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ரங்கராஜன் என்ற இயற்பெயர் கொண்ட வாலி 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார். எம்.ஜி.ஆர்-சிவாஜி காலம் தொடங்கி இன்றைய தலைமுறையினர் வரை அவர் தொடர்ந்து சினிமா பாடல்கள் எழுதி வருகிறார். சிறந்த எழுத்தாளரும் ஆவார். ஓரிரு திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் வாலியின் உடல் நிலைக் குறித்து கேள்விப்பட்டதும் திரையுலகினர் அதிர்ச்சி ஆறாத் துயரும் அடைந்துள்ளனர். அவர் நலம் பெற பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
அதிர்ச்சியில் திரையுலகம்
 


'கண்ணதாசனுக்குப் பின்  இலக்கிய உலகிலும் வாலிபக் கவிஞர் என திரையுலகிலும் புகழப்படும் கவிஞர் வாலி, உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிரபல சினிமா பாடலாசிரியர் கவிஞர் வாலி. 82 வயதாகும் இவருக்கு 2 நாட்களுக்கு முன் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூச்சுத்திணறல் காரணமாக சேர்க்கப்பட்டுள்ள அவருக்கு அவசர‌ சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ரங்கராஜன் என்ற இயற்பெயர் கொண்ட வாலி 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார். எம்.ஜி.ஆர்-சிவாஜி காலம் தொடங்கி இன்றைய தலைமுறையினர் வரை அவர் தொடர்ந்து சினிமா பாடல்கள் எழுதி வருகிறார். சிறந்த எழுத்தாளரும் ஆவார். ஓரிரு திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் வாலியின் உடல் நிலைக் குறித்து கேள்விப்பட்டதும் திரையுலகினர் அதிர்ச்சி ஆறாத் துயரும் அடைந்துள்ளனர். அவர் நலம் பெற பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

சனி, 15 ஜூன், 2013

கிளர்ச்சிப் படைகளுக்கு ஆயுதம் வழங் அமெரிக்கா

      
சிரிய கிளர்ச்சிப் படையினருக்கு ஆயுத உதவி வழங்க அமெரிக்கா சம்மதம் தெரிவித்துள்ளது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
 சிரிய பிரதமர் அசாத் அலியின் அரச படைகளுக்கும், சிரிய கிளர்ச்சிப் படையினருக்கும் இடையில் ஒரு வருடத்திற்கு மேலாக யுத்தம் நீடித்து வருகிறது.

 இந்நிலையில் அண்மைக் காலமாக சிரிய அரச படைகள் தடை செய்யப்பட்ட இராசயன ஆயுதங்களை கொண்டு தாக்குதல் நடத்திவருவது உறுதி செய்யப்பட்டுள்ளதால் அமெரிக்கா இந்த முடிவை எடுத்துள்ளது.

 இந்த அறிவிப்புக்காக சிரிய கிளர்ச்சிப் படைகள் பல நாட்கள் காத்திருந்ததுடன், அமெரிககவிடம் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வந்தது.  இந்நிலையிலேயே அமெரிக்க வெள்ளை மாளிகையின் இந்த அறிவிப்பு, சிரிய கிளர்ச்சிப் படையினருக்கு  புதிய உத்வேகத்தை கொடுத்துள்ளது.

 சிரிய இராசயன ஆயுதங்களின் பாவணையில் 100-150 க்கு இடைப்பட்ட பொதுமக்கள் உயிரிழந்திருப்பதாக  தகவல் வெளியாகியிருந்தது.  இந்நிலையில் அமெரிக்க அரசு சிரிய கிளர்ச்சிப் படைகளுக்கு சிறிய ரக ஆயுதங்கள், பீரங்கி எதிர்ப்பு ஆயுதங்கள் என்பவற்றை வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை தீவிரமடைந்துள்ள சிரிய யுத்தத்தில் 93,000 பொதுமக்கள் உயிரிழந்திருப்பதாக ஐ.நா புள்ளிவிபரம் வெளியிட்டிருந்த அதே தினத்தில் அமெரிக்காவின் இந்த அறிவிப்ப்பு வெளியாகியுள்ளது.

 எனினும் கிளர்ச்சிப் படைகளுக்கும் ஆயுதங்கள் கொடுப்பதன் மூலம் மேலும் யுத்தம் தீவிரமடையலாமே  தவிர ஒரு நாளும் இது பிரச்சினைக்கு தீர்வாகாது என ஆஸ்திரேலிய உள்ளிட்ட நாடுகள் அமெரிக்காவின் இந்த முடிவுக்கு முன்னரே எதிர்ப்பு வெளியிட்டு வந்தன.

 

சனத்தொகை 1100 கோடியாக உயரும்: ஐ.நா ???


கி.பி. 8-ம் நூற்றாண்டில் 50 லட்சம் மக்களும் 1805-ம் ஆண்டு 100 மக்கள் மட்டுமே உலகில் வாழ்ந்தனர். ஐக்கிய நாடுகள் சபையின் அறிவிப்பின்படி 2011-ம் ஆண்டில் உலக மக்கள் தொகை 700 கோடி என தெரிய வந்தது.
எனினும் 2100-ல் உலக மக்கள் தொகை ஆயிரத்து நூறு கோடியாக உயரும் என வாஷிங்டன் பல்கலைக்கழக புள்ளிவிவர அறிக்கை தெரிவிக்கிறது.
இந்த மக்கள் தொகை உயர்விற்கு ஏற்கனவே கணிக்கப்பட்டவாறு ஆப்பிரிக்க நாடுகளில் மக்கள் தொகை உற்பத்தி வீழ்ச்சியடையாததே காரணம் என அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
தற்போது 110 கோடியாக உள்ள ஆப்பிரிக்க மக்கள் தொகை 2100-ம் ஆண்டு 420 கோடியாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதைப் போன்ற மக்கள்தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த ஆப்பிரிக்க பெண்களுக்கு கல்வியறிவை ஏற்படுத்த வேண்டும். குடும்ப கட்டுப்பாட்டை கட்டாயமாக்க வேண்டும்.
பெருகி வரும் மக்கள் தொகையினால் பெரிய நகரங்களில் மக்கள் நெருக்கம் அதிகரிக்கும். இதனால், சுற்றுச்சூழல் பாதிப்படையும் அபாயம் அதிகம் எனவும் அந்த அறிக்கை எச்சரித்துள்ளது.
2100-ம் ஆண்டில் உலக மக்கள் தொகையானது 900 கோடியில் இருந்து ஆயிரத்து 300 கோடிக்கு இடைப்பட்ட நிலையில் ஆயிரத்து நூறு கோடிக்கு நெருக்கமாக இருக்கும் என பேராசிரியர் ஆட்ரியன் ராப்ட்டெரி தலைமையிலான அந்த ஆய்வுக் குழுவின் அறிக்கை கூறுகிறது
 

பிரதமரிடம் செக்ஸ் கேள்வி கேட்ட நிருபர் பதவி இழப்பு


ஆஸ்திரேலிய பிரதமராக பதவி வகிக்கும் "ஜுலியா கில்லர்ட்"டிடம் ரேடியோ வர்ணனையாளர் (நிருபர்) "ஹோவர்ட் சாட்லர்" என்பவர் நேருக்கு நேர் விவாத நேரடியாக ஒலிபரப்பு நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார்.
பிரதமர் ஜுலியாவின் நெருங்கிய நண்பரான டிம் மாத்திசன் என்பவர் சிகை அலங்கார நிபுணராக இருக்கிறார். இவர் ஒரு ஓரின சேர்க்கையாளர் என தெரிகிறது.
இந் நிலையில் "சிகை அலங்கார நிபுணர் டிம் மாத்திசனுடன் பிரதமர் ஜுலியா கில்லாட்டின் கணவருக்கு 7 ஆண்டுகள் ஓரின சேர்க்கை செக்ஸ் தொடர்பு உண்டு என கூறப்படுகிறதே" என்ற கேள்வியை ஹோவர்ட் சாட்லர் கேட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஜுலியா கில்லர்ட் ஒரு வழியாக சமாளித்து பதில் அளித்தார். இக் கேள்வியை நேயர்களுக்காக நகைச்சுவையுடன் கேலியாக கேட்டதாக சாட்லர் விளக்கம் அளித்தார்.
ஆனால், அவர் கேட்ட கேள்வி பிரதமர் ஜுலியா கில்லார்ட்டின் மதிப்புக்கு பொதுமக்களிடையே குந்தகம் விளைவிப்பதாக கருதப்படுகிறது.
எனவே, ரேடியோ வர்ணனையாளர் (நிருபர்) ஹோவர்டு சாட்லர் உடனடியாக பணி நீக்கம் (டிஸ்மிஸ்) செய்யப்பட்டார்

 

அண்டார்டிகா கடலின் ஐஸ்கட்டிகள் உருகும் அபாயம்

 உலகம் வெப்ப மயமாவதால் அண்டார்டிகா கடலின் மேற்பரப்பில் இருக்கும் ஐஸ் கட்டிகள் உருகுவதாக முன்பு தெரிவிக்கப்பட்டன.
ஆனால் தற்போது கடலின் அடிப்பகுதியில் படிந்து கிடக்கும் பனிப்பாறைகள் அதிக அளவில் உருகுவதாக கலிபோர்னியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானி எரிக் ரிக்னாட் குழுவினர் நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது.
கடந்த 2003-ம் ஆண்டிலிருந்து 2008-ம் ஆண்டு வரை சராசரியாக 1325 லட்சம் கோடி கிலோ ஐஸ் கட்டிகள் உருகியுள்ளதோடு அதே நேரத்தில் 1,100 லட்சம் கோடி கிலோ ஐஸ் கட்டிகள் புதிதாக உருவாகியுள்ளன.
அண்டார்டிகா கடலின் ஆழமான பகுதியில் 3 மிகப் பெரிய ராட்சத ஐஸ் கட்டிகள் உருகியுள்ளன. அவை முழுமையான அண்டார்டிகாவின் மூன்றில் 2 மடங்காகும்.
ஆனால் கடலின் மேற்பரப்பில் 15 சதவீதம் ஐஸ் கட்டிகள் மட்டுமே உருகியுள்ளன.
 

ஜனாதிபதிக்கு எதிராக அறைகூவல் விடும் சன்னி மதத்?சிரியாவில் ஆட்சி மாற்றத்தை உருவாக்கும் புனிதப்போருக்கு தயாராகுங்கள் என்று சன்னி மதத் தலைவர்கள் அறைகூவல் விடுத்துள்ளனர்.
பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக போராடி வரும் சன்னி மதத் தலைவர்கள் எகிப்து அதிபர் முகம்மது மோர்சியை நேற்று முன்தினம் சந்தித்தனர்.
போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தருவதாக அவர்களிடம் எகிப்து அதிபர் வாக்குறுதி அளித்தார்.
இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சன்னி மத பெருந்தலைவர் யூசப் எல்-கொரடாவி, ‘சிரியாவில் மக்களை ஒடுக்க நினைக்கும் பஷர் அல் ஆசாத்தின் அடக்குமுறை இஸ்லாத்திற்கு எதிராக தொடுக்கப்படும் போர் போன்றது.
அவரது ஆட்சிக்கும் ஆதரவாளர்களுக்கும் எதிராக நடைபெறும் இந்த புனிதப் போரில் இருந்து நாங்கள் பின்வாங்க மாட்டோம்’ என்று கூறினார்

காட்டுத் தீயில் இருவர் பலியுடன் 420 வீடுகள் எரிந்து நாசம்


அமெரிக்காவின் கொலராடோ மாகாண கொலராடோ ஸ்பிரிங் நாகராட்சிக்குட்பட்ட வனப்பகுதியில் கடந்த செவ்வாய்க் கிழமை திடீரென தீ பற்றி மூன்று நாட்கள் ஆன நிலையிலும் தீயை அணைக்க தீயணைப்பு படையினர் போராடி வருகின்றனர்.
அங்கு நிலவி வரும் அதிக வெப்பம், வேகமாக வீசும் காற்று காரணமாக இந்த தீ மிக வேகமாக பரவியதனால் இது வரை சுமார் 420 வீடுகள் எரிந்து சாம்பலாகியதோடு, 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

இக் காட்டுத் தீ காரணமாக 24 சதுர மைல் அளவிலான வனப்பகுதி எரிந்து சாம்பலாகின. இதனால் அந்த பகுதியிலிருந்து 38 ஆயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
800 தீயணைப்புப் படையினர் காட்டுத் தீயை அணைக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். தீயணைக்கும் பணியில் தண்ணீரை கொட்டும் ஹெலிக்காப்டர்களும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தற்போது 30 சதவீத பரப்பளவில் தீ அணைக்கப்பட்டுள்ளதுடன் தற்போது அங்கு மழை பெய்வதால் தீ அணைக்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
தீ பரவிய பகுதிகளில் உள்ள வீடுகளின் மதிப்பு சுமார் 500 மில்லியன் டாலர் என்று அதிகாரிகள் கணக்கிட்டுள்ளனர். தீயணைப்பு பணிகளுக்காக இது வரை 2 மில்லியன் டாலர்கள் செலவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்

இளவரசர் வில்லியம்ஸ் உடலில் இந்திய மரபணு


இங்கிலாந்து இளவரசர் வில்லியம் உடலில் ஒரே ஒரு இந்திய மரபணு இருப்பது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வில்லியம்ஸ், ஹாரியின் தாயார் டயானா மூலம்தான் இந்த மரபணு அவர்களது உடலில் பரவியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
டயானாவின் மூதாதையரான தியோடார் போர்ப்ஸ் 1788 முதல் 1820 வரை இந்தியாவில் பணிபுரிந்த போது, அவருடைய வீட்டில் பணிபுரிந்த எலிசா கெவார்க் என்ற பெண்மணி மூலம் இந்திய வம்சாவளி மரபணு பரவியிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
எனவே இந்திய வம்சாவளி மரபணு உள்ள ஒருவர் முதன்முறையாக இங்கிலாந்து பிரிட்டன் மன்னராக வரவுள்ளார் என்று கூறபடுகிறது.
ஆயினும் இந்த மரபணுக்கள் தாய்வழி சொந்தங்களில் மட்டுமே பரவும் காரணத்தால், வில்லியம் மற்றும் ஹாரியின் குழந்தைகளுக்கு பரவாது என கூறப்படுகிறது


 

வெள்ளி, 14 ஜூன், 2013

ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து:


பயங்கரம் அர்ஜென்டினாவில் இரண்டு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதில் 3 பேர் பலியானார்கள், 150 பேர் படுகாயம் அடைந்தனர்.
அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அயர்சின் தென் பகுதியில் 30 கி.மீ தொலைவில் காஸ்ட்லர் நகர ரயில் நிலையம் உள்ளது.
இதற்கு இடைப்பட்ட பகுதியில் பயணிகள் இல்லாத ரயில் ஒன்று சிக்னலுக்காக காத்திருந்தது. அப்போது எதிரே வந்த பயணிகள் ரயில் எதிர்பாராத விதமாக நின்று கொண்டிருந்த ரயில் மீது பயங்கரமாக மோதியது.
இதில் ரயில் பெட்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதி நொறுங்கின. நேற்று காலை 7.07 மணிக்கு நடந்த இந்த விபத்தில் 3 பயணிகள் இறந்தனர். இடிபாட்டில் சிக்கி 150க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர், ரயில் டிரைவரும் காயம் அடைந்தார்.
தகவல் அறிந்ததும் மீட்பு படையினர், ரயில்வே அதிகாரிகள் விரைந்து வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக ரயில்வே அமைச்சர் ப்ளோரென்சியோ ராண்டாஸ் கூறுகையில், விபத்து நடந்த இடத்தில் 24 மணி நேரத்துக்கு ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. விபத்து குறித்து தீவிர விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.,{ காணொளி,புகைப்படங்கள் இணைப்பு)
 

இலங்கை தமிழரின் தகவல் மரணத்திற்கு என்ன காரணம்?

 
அயர்லாந்தில் பல் மருத்துவராக வேலை பார்த்த இந்திய பெண்ணான சவீதா, 17 வார கருவை சுமந்துக் கொண்டிருந்தார்.
அவரது இரத்தத்தில் தொற்று நோய் கிருமிகள் இருப்பதால் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் அவரது கருவை கலைக்க வேண்டி கால்வே மருத்துவமனையை நாடினார்.
கரு உயிருடன் இருப்பதால், கத்தோலிக்க கிறிஸ்தவ நாடான இங்கு கருக்கலைப்பு செய்ய முடியாது என்று கால்வே மருத்துவமனை அதிகாரிகள் கைவிரித்து விட்டனர்.
கருக்கலைக்க மறுக்கப்பட்ட நிலையில் சவீதா உயிரிழந்தார். இதனையடுத்து மனைவி இறப்பிற்கு காரணம் மருத்துவர்களே என்று அவரது கணவர் ஹலப்பனாவர் வழக்கு தொடர்ந்து அங்கு விசாரணை நடை பெற்று வருகிறது.
இவ்விசாரணைக் குழுவின் தலைவராக இலங்கை தமிழரும், புகழ்பெற்ற மகப்பேறு மருத்துவருமான சபாரத்தினம் அருள்குமரன் உள்ளார். பிரச்சினைக்குரிய இவ்விசாரணை அறிக்கையை அவர் விரைவில் அளிக்கவுள்ளார்.
இந்நிலையில், சவீதா கருவை தவறாக சுமந்த நிலையில் கால்வே மருத்துவர்கள் உடனடியாக கருக்கலைப்பு செய்து இருக்கவேண்டும்.
இதனால் சவீதாவிற்கோ அல்லது பிறக்கப்படாத குழந்தைக்கோ எந்த பாதிப்பும் இருந்து இருக்காது. ஆகையால் மருத்துவர்கள் சவீதாவை காப்பாற்ற தவறி விட்டனர் என்று குழுத்தலைவர் சபாரத்தினம் அருள்குமரன் தெரிவித்துள்ளார்
 

வியாழன், 13 ஜூன், 2013

1 யூரோவில் கார்: பிரான்ஸ் டீலர் அதிரடி


[பிரான்சில் பொருளாதார சரிவு ஏற்பட்டதையடுத்து விற்பனை வெகுவாக குறைந்துள்ளது.
இதையடுத்து விற்பனையை ஊக்கப்படுத்தும் நோக்கத்தோடு பிரெஞ்சு கார் டீலர் நிறுவனம் ஒன்று 10,120 யூரோ மதிப்புள்ள ஹுண்டாய் ஐ10 காரை 1 யூரோவுக்கு வழங்க உள்ளது.
இதற்கு இரண்டு நிபந்தனைகள் உள்ளன. இந்த பரிசை பெற்றுக் கொள்ள வேண்டுமென்றால் முதலில் 29,618 யூரோ மதிப்புள்ள Hyundai iX35 diesel SUV காரை வாங்க வேண்டும் மற்றும் அந்த வாகனத்தின் மூலம் 8 வருடங்களுக்கு மேல் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.
இவ்வாறு செய்தால் முன்னர் கூறப்பட்ட காருக்கு 1 யூரோ மட்டுமே செலுத்தினால் போதும். இந்த
 

லண்டனில் காணாமல் போன இந்திய பெண்


இந்தியாவைச் சேர்ந்த இளம் பெண் இமான் ஷா பள்ளி விடுமுறையின் போது தனது குடும்பத்தினருடன் லண்டன் வந்திருந்தார். இவர் கடந்த 10ம் திகதி நாடு திரும்புவதாக இருந்தது.
ஆனால் கடந்த 10ம் திகதி லண்டன் ஆக்ஸ்போர்ட் தெருவில் தாயாருடன் ஷாப்பிங் சென்ற அந்தப் பெண் திடீரென காணாமல் போயுள்ள நிலையில் பெற்றோர் பொலிசில் மகள் காணாமல் போனது தொடர்பாக வழக்கு பதிவு செய்தனர்.
அதனைத் தொடர்ந்து பொலிசாரின் விசாரணையில் அவர் காணாமல் போன போது கையில் பணம் மட்டுமே எடுத்துச் சென்றார் எனவும் கையில் செல்போன் வைத்திருக்கவில்லை எனவும் தெரிய வந்தது.
இமான் ஷா தங்கியிருந்த ஓட்டலைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கமெராக்களில் பதிவான காட்சிகளை பொலிசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
இமானின் தந்தை தன்வீர் ஷா, இந்தியாவில் விளம்பர நிறுவனம் நடத்தி வருகிறார். தனது மகள் காணாமல் போவதற்கு எந்த காரணமும் இல்லை.
அத்துடன் சிறப்பாக தேர்வு எழுதிய அவர் பல்கலைக்கழகத்தில் சேர உற்சாகமாக தயாராகி வந்ததாகவும் தன்வீர் ஷா கூறினார்
 

அமெரிக்காவில் பரவிவரும் காட்டுத் தீ


அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் ஸ்பிரிங் நாகராட்சிக்குட்பட்ட வனப்பகுதியில் கடந்த செவ்வாய்க் கிழமை திடீரென தீ பற்றியது.
இக் காட்டுத் தீயை அணைக்க தீயணைப்பு படையினர் போராடி வருகின்றனர். எனினும் அங்கு நிலவி வரும் அதிக வெப்பம் மற்றும் வேகமாக வீசும் காற்று காரணமாக இந்த தீ மிக வேகமாக பரவி வருகின்றது.
இந்த காட்டுத் தீ விபத்தில் சுமார் 100 வீடுகள் எரிந்து சாம்பலாயின. மேலும் அங்குள்ள 3 ஆயிரத்து 500 வீடுகளில் இருந்த 9500க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இருந்தும் தீயணைப்புப் படையினர் காட்டுத் தீயை அணைக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

அத்துடன் கைவிடப்பட்ட வீடுகளில் இருந்த பொருட்கள் கொள்ளை அடிக்கப்படுவதை தடுக்க ராணுவமும் அங்கு விரைந்துள்ளது

கொடூர செயலால் பாதுகாப்பு இல்லத்தில் 11 முதியவர்கள்


ஸ்பெயின் நாட்டில் உள்ள ஜிரோனா என்ற இடத்தில் உள்ள முதியோர் இல்லம் ஒன்றில் ஆதரவற்ற நூற்றுக்கணக்கான முதியவர்கள் வசித்து வந்தனர்.
இவர்களில் சிலர் திடீர் திடீரென இறந்தனர். அவர்கள் ஏன் இறந்தார்கள், எப்படி இறந்தார்கள்? என்று நடந்த ஆய்வில் அவர்கள் இயற்கையாக சாகவில்லை, கொலை செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிய வந்தது.
அதன் பின்பு அவர்களை அந்த இல்லத்தின் காவலாளியாக இருந்தவரே கொலை செய்திருந்தார் என்று கண்டுபிடிக்கப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக அந்த காவலாளி கைது செய்யப்பட்டு அவரை விசாரித்த போது, முதியவர்களின் தொல்லை தாங்காமல் அவர்களை கொலை செய்ததாக கூறினார்.
அவர்களில் பலர் மூச்சு திணறடிக்கப்பட்டு கொல்லப்பட்டதோடு, 3 பேருக்கு அதிக அளவில் மதுவை குடிக்க வைத்து அவர் கொலை செய்திருந்தார்
 

இங்கிலாந்து வீரரைத் தாக்கிய டேவிட்


   இங்கிலாந்து வீரரொருவரை அவுஸ்திரேலிய அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் டேவிட் வோணர் தாக்கியதாக இங்கிலாந்துக் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. அத்தோடு, இந்தத் தாக்குதல் காரணமின்றி இடம்பெற்றதாக அச்சபை தெரிவித்துள்ளது.
  
 டேவிட் வோணரின் நடவடிக்கை காரணமாக நியூசிலாந்திற்கெதிராக இடம்பெற்றுவரும் போட்டியில் அவர் விளையாடுவதற்கு அவுஸ்திரேலியக் கிரிக்கெட் சபை அனுமதி மறுத்திருந்த நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான நேற்றைய போட்டியில் அவர் 12ஆவது வீரராகச் செயற்பட்டிருந்தார்.
 
 குறித்த சம்பவம் தொடர்பாக ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள இங்கிலாந்துக் கிரிக்கெட் சபை, கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தச் சம்பவம் இடம்பெற்றதாகத் தெரிவித்தார்.
 
 அவுஸ்திரேலிய, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டி நிறைவடைந்த பின்னர், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணிக்கு மதுபோதையில் டேவிட் வோணர் இந்தத் தாக்குதலை மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
 தாக்கப்பட்ட வீரர் தொடர்பான தகவல்களை இதுவரை இரண்டு நாட்டுக் கிரிக்கெட் சபைகளும் வெளிப்படுத்தியிருக்காத போதிலும், தாக்குதலுக்கு உள்ளாவனர் ஜோ றூட் எனத் தெரிவிக்கப்படுகிறது.
 
 குறித்த சம்பவம் இடம்பெறும்போது ஜோ றூட், ஸ்ருவேர்ட் ப்ரோட், கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் குறித்த மதுபானசாலையில் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

பாரிய குற்றச் செயல்களுடன் மற்றுமொரு பொலிஸ்மா அதிபர்:

      
நெருக்கடியில் மஹிந்த சிறிலங்காவில் இடம்பெற்று வரும் பல்வேறு சட்டவிரோத செயல்களுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் மற்றுமொரு பிரதிப் பொலிஸ்மா அதிபரை விசாரணைக்குட்படுத்த சிறிலங்காவின் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
 மேல்மாகாணத்தின் பிராந்தியம் ஒன்றுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபரான சுமித் எதிரிசிங்கவே குற்றப் புலனாய்வு பிரிவினரின் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளார்.

 மீரிஹான, நுகேகொட போன்ற பிரதேசங்களில் இடம்பெற்று வரும் சட்டவிரோதச் செயல்கள், விபசார விடுதிகள் நடத்தப்படல் போன்றவை தொடர்பில் கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையிலேயே இவர் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளார் எனக் தெரிவிக்கப்படுகிறது.

 இதேவேளை, கொழும்பில் முஸ்லிம் வர்த்தகர் ஒருவரை கடத்திக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட மேல்மாகாண  பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்த்தனவுக்கு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 3 மாத தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளது.

 கொழும்பு நீதிமன்ற நீதிவானிடம் இதற்கான உத்தரவை சிறிலங்கா காவல்துறையின் தீவிரவாத புலனாய்வுப் பிரிவு பெற்றுள்ளது.

 இந்த ஒப்பந்தக் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள 7 பேரில் ஐவர் சிறிலங்கா காவல்துறையினராவர்.

 கைது செய்யப்பட்ட காவல்துறையினர் அனைவரும் பிரதிக் காவல்துறை மா அதிபர் வாஸ் குணவர்த்தனவின் கீழ் இயங்கியவர்கள்.

 வாஸ் குணவர்த்தன மேலும் பல குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டுள்ளதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக சிறிலங்கா காவல்துறை வட்டாரங்கள்.

 அத்துடன் வாஸ் குணவர்தனவின் மனைவியும் மகனும் கைது செய்யப்படவுள்ளனர் என பிறிதொரு தகவல் தெரிவிக்கின்றன.

 

விமான நிலையத்திற்குள், நள்ளிரவில் நுழைய முனைந்த மர்மநபர் ?


அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள இரத்மலானை விமான நிலையத்திற்குள் சட்டவிரோதமான முறையில் நுழைவதற்கு முயன்ற ஒருவரை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
 
 கிம்புலனிலுள்ள அந்திட்டிய வாவியின் ஊடாகவே குறித்த சந்தேகநபர் அதியுயர் பாதுகாப்பு வலயத்திற்குள் நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு 12 மணியளவில் நுழைவதற்கு முயன்றுள்ளார்.

 இதன்போதே குறித்த நபரை விமானப்படையினர் கைது செய்துள்ளனர். மேலதிக விசாரணைகளுக்காக அவரை கல்கிசை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படைத்துள்ளனர்.

 சந்தேகநபரை பொலிஸார் கல்கிசை நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்திய போது அவரை 26 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதவான் அவரை மனநல வைத்தியரிடம் பரிசோதனைக்கு உட்படுத்தி அறிக்கையொன்றை பெற்றுக்கொள்ளுமாறும் உத்தரவிட்டார்.

 சிறிலங்காவின் கட்டுநாயக்க விமான நிலையம் மற்றும் அநுராதபுரம் இராணுவ விமான நிலையம் என்பன விடுதலைப் புலிகளின் துல்லியமான வேவு நடவடிக்கையின் மூலம் வெற்றிகரமாக தாக்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

 

புதன், 12 ஜூன், 2013

கடற்பரப்பில் பயணிகள் படகு மாயம்!:

 
        விபத்துக்குள்ளாகியிருக்கலாம் அச்சம்! அவுஸ்திரேலியா நோக்கி பயணித்த அகதிகள் படகு ஒன்று காணாமற்போயுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
   குறித்த படகு ஏழு நாட்களாக காணவில்லை என அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
  இந்த படகில் சிறிலங்காவைச் சேர்ந்த 30 புகலிடக் கோரிக்கையாளர்கள் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 
  இந்த படகு கடலில் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
  கொக்கோஸ் தீவுக்கு வடக்காக 257 கடல் மைல் தூரத்தில் இடம்பெற்றுள்ள இந்தச் சம்பவத்தையடுத்து அங்கு மீட்புப் பணிகளுக்காக அவுஸ்திரேலிய அரசு கடற்படை படகுகளையும் ஹெலிக்கொப்டர்களையும் அனுப்பி வைத்துள்ளது.
  இதற்கு மேலாக இரண்டு விமானங்களும் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படுத்தப்பட்டுள்ளன.
  55 புகலிடக்கோரிக்கையாளர்களை ஏற்றிச் சென்ற படகு விபத்துக்குள்ளாகி அவர்கள் உயிரிழந்து ஒருவார காலப்பகுதிக்குள் மற்றுமொரு படகு காணாமற்போயுள்ளது.
  தமது கடற்பரப்பிற்குள் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றதையிட்டு அவுஸ்திரேலியா கவலை வெளியிட்டுள்ளது.
  இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 1,644 இலங்கை புகலிடக்கோரிக்கையாளர்கள் அவுஸ்திரேலியாவை சென்றடைந்துள்ளது.
  இதேவேளை கடந்த வருடம் 6,428 இலங்கை புகலிடக்கோரிக்கையாளர்கள் அவுஸ்திரேலியாவை சென்றடைந்தமை குறிப்பிடத்தக்கது

 

அந்தரங்க படத்தை வெளியிட்ட மாணவர்கள்:


ரஷ்யாவில் ஆசிரியையொருவர் உள்ளாடையுடன் இருக்கும் படத்தினை அவரது மாணவர்கள் சிலர் வெளியிட்ட சம்பவமானது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
தெற்கு ரஷ்யாவில் உள்ள பாடசாலையொன்றில் ஆசிரியையாக சேவையாற்றி வருபவர் நடாலியா மொலோகோவா. இவரின் வயது 34. அவர் கற்பிக்கும் பாடசாலையில் பரீட்சை நடைபெற இருந்துள்ளது.
இந்நிலையில் குறித்த ஆசிரியையின் ஆண் நண்பர் தனது மடி கணனியை மொலோகோவா கற்பிக்கும் பாடசாலையில் அவர் பரீட்சை நடத்தவிருந்த வகுப்பறையில் விட்டுச் சென்றுள்ளார்.
குறித்த கணனி ஆசிரியையுடையது என நினைத்த மாணவர்கள் பரீட்சை வினாக்கள் கணனியில் இருக்கலாம் என நினைத்து அதனை இயக்கியுள்ளனர்.
இதன்போது நடாலியா மொலோகோவா உள்ளாடையுடன் மாத்திரம் காட்சியளிக்கும் அந்தரங்க படத்தை மாணவர்கள் கண்டுள்ளனர்.
மேலும் அப்படத்தை மின்னஞ்சலுக்கு அனுப்பியுள்ளதுடன், இணையம் மற்றும் சமூகவலையமைப்புகளில் தரவேற்றியுள்ளனர்.
ஆசிரியையின் ஆண் நண்பர் வருவதற்குள் மாணவர்கள் படத்தினை அம்பலப்படுத்தி விட்டனர்.
இச்சம்பவம் அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனோடு தொடர்புடைய மாணவர்களின் வயது 15 எனத் தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மேலும் குறித்த ஆசிரியை அவமானம் காரணமாக பாடசாலைக்கு வருவதில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
 

திங்கள், 10 ஜூன், 2013

கடுமையாகும் சுவிட்சர்லாந்தின் தஞ்சக் கோரிக்கை சட்டங்கள்


சுவிட்சர்லாந்தில் அகதித் தஞ்சம் கோருவோர் தொடர்பான சட்ட விதிகளை கடுமையாக்குவதற்கு அந்நாட்டு மக்கள் பலத்த ஆதரவினைத் தெரிவித்துள்ளனர்.
தஞ்சக்கோரிக்கை தொடர்பான சட்டங்களில் கடந்த செப்டம்பரில் கொண்டுவரப்பட்ட திருத்தங்கள் தொடர்பில் நடத்தப்பட்ட மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் 80 வீதமான மக்கள் ஆதரவாக வாக்களித்துள்ளதாக ஆரம்பக்கட்ட முடிவுகள் தெரிவிக்கின்றன.
இந்தப் புதிய சட்டவிதிகளின்படி, இராணுவத்திலிருந்து தப்பிவருபவர்கள் இனிமேல் அங்கு தஞ்சம் கோரமுடியாது.
அதேபோல, வெளிநாடுகளில் உள்ள சுவிஸ் தூதரகங்கள் ஊடாக இனிமேல் எவரும் தஞ்சம் கோரமுடியாதபடியும் சட்டத்திருத்தம் வந்துள்ளது.
தஞ்சக் கோரிக்கை சட்டத்தில் கொண்டுரப்பட்ட சட்டத்திருத்தத்தை எதிர்த்து, மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென்று மனித உரிமை அமைப்புகளும் இடதுசாரிகளும் நடத்திய கையெழுத்து வேட்டையின் பிரகாரமே இன்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சுவிட்சர்லாந்தில் கடந்த பத்தாண்டுகளில் தஞ்சக் கோரிக்கைகள் அளவுகடந்து அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இந்த சட்டத்திருத்தம் தாய்நாடொன்றிலிருந்து தஞ்சம் கோரி விண்ணப்பிப்பவர்களைப் பாதிக்காது என்றும் மூன்றாவது நாடொன்றில் உள்ள சுவிஸ் தூதரகத்தினூடாக விண்ணப்பிப்பதையே தடுப்பதாகவும் சுவிட்சர்லாந்தின் லுத்செர்ன் மாநில சோசலிஸக் கட்சி சட்டமன்ற உறுப்பினர் லதன் சுந்தரலிங்கம் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
வெளிநாட்டவர்களின் குடியேற்றத்துக்கு எதிராக மேற்குலக நாடுகளில் அதிகரித்துவரும் அழுத்தங்களின் தொடர்ச்சியே சுவிட்சர்லாந்தின் கொள்கை மாற்றமும் என்றும் அவர் கூறினார்.

ஞாயிறு, 9 ஜூன், 2013

நிலை கொள்ளும் கடல் சீற்றம் ,.


கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால் அங்கு பலத்த காற்றுடன் தொடர்ந்து மழை பெய்து  வருகின்றது.
இதனால் அங்கு ஏராளமான இடங்களில் வீடுகள் இடிந்தது. பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் இப்போது  மழை சற்று ஓய்ந்துள்ளது. அதே சமயம் கேரள கடல் பகுதிகளில் கடும் சீற்றம் நிலவுகிறது. கடலில் ராட்சத அலைகள் வீசுகிறது.
மேலும் பல மீனவ கிராமங்களுக்கு கடல் நீர் புகுந்ததால் வீடுகள் இடிந்தது. ஏராளமான கிராமங்களில் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது.
திருவனந்தபுரம் அருகே உள்ள வலியத்துறை, பீமபள்ளி, பூந்துறை, அஞ்சு தொங்கு போன்ற பகுதிகளில் உள்ள ஏராளமான மீனவர்களின் வீடுகள் கடல் சீற்றத்துக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் இடிந்து விட்டது.
அதிகபட்சமாக வலியத்துறையில் 300 வீடுகளை கடல் தனது சீற்றத்தால் இடித்து தள்ளியது. மேலும் ஏராளமான படகுகளும் கடல் சீற்றத்தால் உடைந்து சேதமடைந்து உள்ளது.
இதனால் 4,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வீடுகளை இழந்த இவர்கள் சாலை ஓரங்களிலும் நடுத் தெருவிலும் சமையல் செய்து சாப்பிடும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
கேரள அரசு இவர்களுக்கு நிவாரண உதவிகளை மேற்கொள்ள அரசு எந்திரத்தை முடுக்கி விட்டுள்ளது.
தொடர்ந்து கடல் சீற்றமாக காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டு உள்ளனர்.
காசர்கோடு பகுதியில் ரெயில்வே தண்டவாளத்தில் மழையின் காரணமாக மண் சரிந்தது. இதனால் அந்த வழியாக ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து அந்த மண் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டு ரெயில் போக்குவரத்து மீண்டும் சீரானது.
களக்கூட்டம் பகுதியில் சூறாவளி காற்றுடன் பெய்த மழையால் சில வீடுகளில் மேற்கூரைகள் பறந்தன