நிலாவரை .கொம்

siruppiddy

புதன், 12 ஜூன், 2013

கடற்பரப்பில் பயணிகள் படகு மாயம்!:

 
        விபத்துக்குள்ளாகியிருக்கலாம் அச்சம்! அவுஸ்திரேலியா நோக்கி பயணித்த அகதிகள் படகு ஒன்று காணாமற்போயுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
   குறித்த படகு ஏழு நாட்களாக காணவில்லை என அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
  இந்த படகில் சிறிலங்காவைச் சேர்ந்த 30 புகலிடக் கோரிக்கையாளர்கள் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 
  இந்த படகு கடலில் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
  கொக்கோஸ் தீவுக்கு வடக்காக 257 கடல் மைல் தூரத்தில் இடம்பெற்றுள்ள இந்தச் சம்பவத்தையடுத்து அங்கு மீட்புப் பணிகளுக்காக அவுஸ்திரேலிய அரசு கடற்படை படகுகளையும் ஹெலிக்கொப்டர்களையும் அனுப்பி வைத்துள்ளது.
  இதற்கு மேலாக இரண்டு விமானங்களும் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படுத்தப்பட்டுள்ளன.
  55 புகலிடக்கோரிக்கையாளர்களை ஏற்றிச் சென்ற படகு விபத்துக்குள்ளாகி அவர்கள் உயிரிழந்து ஒருவார காலப்பகுதிக்குள் மற்றுமொரு படகு காணாமற்போயுள்ளது.
  தமது கடற்பரப்பிற்குள் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றதையிட்டு அவுஸ்திரேலியா கவலை வெளியிட்டுள்ளது.
  இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 1,644 இலங்கை புகலிடக்கோரிக்கையாளர்கள் அவுஸ்திரேலியாவை சென்றடைந்துள்ளது.
  இதேவேளை கடந்த வருடம் 6,428 இலங்கை புகலிடக்கோரிக்கையாளர்கள் அவுஸ்திரேலியாவை சென்றடைந்தமை குறிப்பிடத்தக்கது

 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக