நிலாவரை .கொம்

siruppiddy

சனி, 15 ஜூன், 2013

காட்டுத் தீயில் இருவர் பலியுடன் 420 வீடுகள் எரிந்து நாசம்


அமெரிக்காவின் கொலராடோ மாகாண கொலராடோ ஸ்பிரிங் நாகராட்சிக்குட்பட்ட வனப்பகுதியில் கடந்த செவ்வாய்க் கிழமை திடீரென தீ பற்றி மூன்று நாட்கள் ஆன நிலையிலும் தீயை அணைக்க தீயணைப்பு படையினர் போராடி வருகின்றனர்.
அங்கு நிலவி வரும் அதிக வெப்பம், வேகமாக வீசும் காற்று காரணமாக இந்த தீ மிக வேகமாக பரவியதனால் இது வரை சுமார் 420 வீடுகள் எரிந்து சாம்பலாகியதோடு, 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

இக் காட்டுத் தீ காரணமாக 24 சதுர மைல் அளவிலான வனப்பகுதி எரிந்து சாம்பலாகின. இதனால் அந்த பகுதியிலிருந்து 38 ஆயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
800 தீயணைப்புப் படையினர் காட்டுத் தீயை அணைக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். தீயணைக்கும் பணியில் தண்ணீரை கொட்டும் ஹெலிக்காப்டர்களும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தற்போது 30 சதவீத பரப்பளவில் தீ அணைக்கப்பட்டுள்ளதுடன் தற்போது அங்கு மழை பெய்வதால் தீ அணைக்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
தீ பரவிய பகுதிகளில் உள்ள வீடுகளின் மதிப்பு சுமார் 500 மில்லியன் டாலர் என்று அதிகாரிகள் கணக்கிட்டுள்ளனர். தீயணைப்பு பணிகளுக்காக இது வரை 2 மில்லியன் டாலர்கள் செலவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக