நிலாவரை .கொம்

siruppiddy

ஞாயிறு, 9 ஜூன், 2013

நிலை கொள்ளும் கடல் சீற்றம் ,.


கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால் அங்கு பலத்த காற்றுடன் தொடர்ந்து மழை பெய்து  வருகின்றது.
இதனால் அங்கு ஏராளமான இடங்களில் வீடுகள் இடிந்தது. பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் இப்போது  மழை சற்று ஓய்ந்துள்ளது. அதே சமயம் கேரள கடல் பகுதிகளில் கடும் சீற்றம் நிலவுகிறது. கடலில் ராட்சத அலைகள் வீசுகிறது.
மேலும் பல மீனவ கிராமங்களுக்கு கடல் நீர் புகுந்ததால் வீடுகள் இடிந்தது. ஏராளமான கிராமங்களில் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது.
திருவனந்தபுரம் அருகே உள்ள வலியத்துறை, பீமபள்ளி, பூந்துறை, அஞ்சு தொங்கு போன்ற பகுதிகளில் உள்ள ஏராளமான மீனவர்களின் வீடுகள் கடல் சீற்றத்துக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் இடிந்து விட்டது.
அதிகபட்சமாக வலியத்துறையில் 300 வீடுகளை கடல் தனது சீற்றத்தால் இடித்து தள்ளியது. மேலும் ஏராளமான படகுகளும் கடல் சீற்றத்தால் உடைந்து சேதமடைந்து உள்ளது.
இதனால் 4,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வீடுகளை இழந்த இவர்கள் சாலை ஓரங்களிலும் நடுத் தெருவிலும் சமையல் செய்து சாப்பிடும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
கேரள அரசு இவர்களுக்கு நிவாரண உதவிகளை மேற்கொள்ள அரசு எந்திரத்தை முடுக்கி விட்டுள்ளது.
தொடர்ந்து கடல் சீற்றமாக காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டு உள்ளனர்.
காசர்கோடு பகுதியில் ரெயில்வே தண்டவாளத்தில் மழையின் காரணமாக மண் சரிந்தது. இதனால் அந்த வழியாக ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து அந்த மண் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டு ரெயில் போக்குவரத்து மீண்டும் சீரானது.
களக்கூட்டம் பகுதியில் சூறாவளி காற்றுடன் பெய்த மழையால் சில வீடுகளில் மேற்கூரைகள் பறந்தன
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக