நிலாவரை .கொம்

siruppiddy

வியாழன், 13 ஜூன், 2013

பாரிய குற்றச் செயல்களுடன் மற்றுமொரு பொலிஸ்மா அதிபர்:

      
நெருக்கடியில் மஹிந்த சிறிலங்காவில் இடம்பெற்று வரும் பல்வேறு சட்டவிரோத செயல்களுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் மற்றுமொரு பிரதிப் பொலிஸ்மா அதிபரை விசாரணைக்குட்படுத்த சிறிலங்காவின் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
 மேல்மாகாணத்தின் பிராந்தியம் ஒன்றுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபரான சுமித் எதிரிசிங்கவே குற்றப் புலனாய்வு பிரிவினரின் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளார்.

 மீரிஹான, நுகேகொட போன்ற பிரதேசங்களில் இடம்பெற்று வரும் சட்டவிரோதச் செயல்கள், விபசார விடுதிகள் நடத்தப்படல் போன்றவை தொடர்பில் கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையிலேயே இவர் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளார் எனக் தெரிவிக்கப்படுகிறது.

 இதேவேளை, கொழும்பில் முஸ்லிம் வர்த்தகர் ஒருவரை கடத்திக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட மேல்மாகாண  பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்த்தனவுக்கு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 3 மாத தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளது.

 கொழும்பு நீதிமன்ற நீதிவானிடம் இதற்கான உத்தரவை சிறிலங்கா காவல்துறையின் தீவிரவாத புலனாய்வுப் பிரிவு பெற்றுள்ளது.

 இந்த ஒப்பந்தக் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள 7 பேரில் ஐவர் சிறிலங்கா காவல்துறையினராவர்.

 கைது செய்யப்பட்ட காவல்துறையினர் அனைவரும் பிரதிக் காவல்துறை மா அதிபர் வாஸ் குணவர்த்தனவின் கீழ் இயங்கியவர்கள்.

 வாஸ் குணவர்த்தன மேலும் பல குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டுள்ளதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக சிறிலங்கா காவல்துறை வட்டாரங்கள்.

 அத்துடன் வாஸ் குணவர்தனவின் மனைவியும் மகனும் கைது செய்யப்படவுள்ளனர் என பிறிதொரு தகவல் தெரிவிக்கின்றன.

 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக