நிலாவரை .கொம்

siruppiddy

சனி, 22 ஜூன், 2013

என்.எல்.சி நிறுவனத்தில் 5 சதவீத பங்குகள் விற்பனை

:
 
 ரூ.466 கோடி லாபம்  பங்குகளை விற்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக என்.எல்.சியின் தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன.
பொதுத்துறை நிறுவனங்களின் மொத்த பங்குகளில் குறைந்தபட்சமாக 10 சதவீதம் பொதுமக்களுக்கு கிடைக்கவேண்டும் என்ற விதிமுறை உள்ளது. இதனை 2013 ஒகஸ்ட் மாதத்துக்குள் நிறைவேற்ற வேண்டும் என மத்திய அரசுக்கு இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை அமைப்புகள் (செபி) வலியுறுத்தியிருந்தது.
இதன் காரணமாக நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் (என்.எல்.சி) பங்குகளில் 5 சதவீதத்தை பொதுமக்களுக்கு விற்கவேண்டிய கட்டாயம் மத்திய அரசுக்கு ஏற்பட்டதால் இதனைப் பற்றி பொருளாதார விவகாரத்துக்கான மத்திய அமைச்சரவை குழு பரீசீலனை செய்தது.
ஆனால் தமிழகத்தை சார்ந்த கட்சிகளும், என்.எல்.சி நிறுவன தொழிற்சங்க நிறுவனங்களும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடந்த மாதம் கடிதம் எழுதினார். அதில் என்.எல்.சியிலிருந்து நிலக்கரி உற்பத்தி மட்டுமின்றி மின்சார உற்பத்தியும் செய்யப்படுகிறது. இதன் பங்குகளை விற்பதன் மூலம் மின் உற்பத்தி பாதிப்பதோடு மட்டுமல்லாமல் இந்நிறுவனத்தில் இருந்து மின்சார உற்பத்தியும் பாதிக்கப்படும்.
மேலும் அந்நிறுவன தொழிளாளர்கள் போராட்டம் நடத்தக்கூடும், இப்பிரச்சனையை சமாளிப்பதற்கு பங்குசந்தை பட்டியலில் இருந்து என்.எல்.சியை நீக்கலாம் அல்லது இந்நிறுவனத்தின் பங்குகள் விற்பனை செய்யப்படுவதில் இருந்து சிறப்பு விலக்கு அளிக்க பங்குகள் ஒப்பந்த கட்டுப்பாடு விதிமுறை 1957- யை திருத்தம் செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.
இது தொடர்பாக டெல்லியில் கடந்த மாதம் நடைபெற்ற பொருளாதார விவகாரத்துக்கான மத்திய அமைச்சரவை கூட்டத்திலேயே இறுதி முடிவு எடுக்கப்பட இருந்தது. ஆனால் இறுதியில் இது பற்றி எந்த முடிவும் எடுக்காமல் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் செபியின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்ற கட்டத்தில் என்.எல்.சியின் ரூ.7.8 கோடி பங்குகளை அல்லது 5 சதவீத பங்குகளை விற்கலாம் என்று பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழுவிடம் பங்கு விற்பனை துறை அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து டெல்லியில் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரத்துக்கான மத்திய அமைச்சரவை குழு கூட்டத்தில் என்.எல்.சியின் 5 சதவீத பங்குகளை பொதுமக்களுக்கு விற்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. என்.எல்.சியில் மத்திய அரசுக்கு தற்போது 93.56 சதவீத பங்குகள் உள்ளன. மும்பை பங்கு சந்தையில் என்.எல்.சி பங்கு தற்போது ரூ.59.80க்கு விற்கப்படுகிறது. எனவே 5 சதவீத பங்கு விற்பனை மூலம் அரசுக்கு ரூ.466 கோடி கிடைக்கும் என்று தெரிகிறது
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக