நிலாவரை .கொம்

siruppiddy

திங்கள், 8 ஜூலை, 2013

எண்ணெய் டாங்கர்களுடன் ரயில் தடம்புரண்டு விபத்து: 60 பேர்

 
கனடாவில் எண்ணெய் டாங்கர்களுடன் சென்ற ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 60 பேர் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
அமெரிக்காவின் வடக்கு டோக்டா நகரில் இருந்து எண்ணெய் ஏற்றிக்கொண்டு 77 டாங்கர்களுடன் சென்ற ரயில், கனடாவின் கிழக்கே குயிக்பெக் மாகாணத்தின் லாமேக்னடிக் நகர் வந்த போது, திடீரென தடம்புரண்டு கட்டிட பகுதிக்குள் புகுந்து விபத்திற்குள்ளானது.
இதனால் ஏற்பட்ட தீயிலும், கரும் புகையிலும் அருகில் இருந்த ஏராளமான கட்டிடங்களும், வீடுகளும் சேதமடைந்தன.
பாதுகாப்பு கருதி ஆயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
இதில் 60-க்கும் மேற்பட்டோர் தீயில் கருகி இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவ இடத்தில் 200-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர்.
அமெரிக்காவிலிருந்தும் வரவழைக்கப்பட்ட தீயணைப்பு துறையினரும் இவர்களுடன் இணைந்து தீயை கட்டுக்குள் கொண்டுவர முயன்று கொண்டிருக்கின்றனர்.
70 பெட்டிகள் இணைக்கப்பட்டிருந்த இந்த ரயிலில், பெட்ரோலியம் பொருட்கள் ஏற்றப்பட்டிருந்த சில பெட்டிகள் வெடித்ததில் இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.
அருகிலிருந்த சவுடியர் நதியிலும் இந்த ரயிலிலிருந்து கசிந்த எரிபொருட்கள் கலந்ததாக கியூபெக் மாகாணத்தின் சுற்றுச்சூழல் அமைப்பின் தகவல் அதிகாரி கிறிஸ்டியன் பிளாங்கெட் தெரிவித்துள்ளார்
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக