நிலாவரை .கொம்

siruppiddy

திங்கள், 15 ஜூலை, 2013

அமைச்சரை குரங்குடன் ஒப்பிட்டு விமர்சனம்: இத்தாலியில் ??


இத்தாலியில் கறுப்பின பெண் அமைச்சரை குரங்குடன் சேர்த்து ஒப்பிட்டு விமர்சித்தவரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இத்தாலி செனட் துணை தலைவர் மற்றும் நார்த்தன் லீக் கட்சி உறுப்பினர் ராபர்ட்டோ கால்டெரோலி.
இவர் நேற்று முன்தினம் வடக்கு இத்தாலியில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.
அப்போது, எனக்கு விலங்குகள், பறவைகளை மிகவும் பிடிக்கும். அதுபோல் சிசிலியை பார்த்தாலே எனக்கு உராங்குட்டான் குரங்குதான் நினைவுக்கு வருகிறது. அந்த நினைப்பை என்னால் தடுக்க முடியவில்லை என்று பேசினார்.
இதை கேட்டவர்கள் அதிர்ச்சி அடைந்தனர், நாகரிகம் சிறிது கூட இல்லாமல் இனவெறியுடன் விமர்சித்துள்ளார் என ராபர்ட்டோவுக்கு எதிராக கடும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன.
இத்தாலியில் சட்டவிரோதமாக குடியேறுபவர்கள் தடுப்பு துறை அமைச்சராக சிசிலி உள்ளார்.
மேலும் இவர் காங்கோ நாட்டை சேர்ந்தவர் என்பதும், 1983ம் ஆண்டு இத்தாலியில் குடியேறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து பிரதமர் லெட்டா வெளியிட்ட அறிக்கையில், அமைச்சர் சிசிலி யெங்கேவை குரங்குடன் ஒப்பிட்டு பேசியது நாகரிகமற்ற செயல்.
இனவெறியை தூண்டும் செயல். நாட்டின் அமைதிக்கும் ஒற்றுமைக்கும் குந்தகம் விளைவிக்கும். இதற்காக அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக