நிலாவரை .கொம்

siruppiddy

திங்கள், 29 மார்ச், 2021

பல்கலைக்கழக மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்து மாட்டிய மருத்துவர்

அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் மகப்பேறு டாக்டராக பணியாற்றியவரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 100 கோடி டாலர்( இந்திய மதிப்பில் ரூ.726 கோடி ) இழப்பீடு வழங்க குறித்த பல்கலைக்கழகம் ஒப்புக்கொண்டுள்ளது.
தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் குறித்த முடிவுக்கு லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது.தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில்
 செயல்பட்டு வந்த மாணவர்களுக்கான சுகாதார 
மையத்தில் மகப்பேறு மருத்துவராக பணியாற்றி வந்தவர் டாக்டர் ஜார்ஜ் டிண்டால். இவரே மொத்தம் 710 மாணவிகளிடம் வரம்பு மீறியதாகவும், பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாகவும் புகார் அளிக்கப்பட்டது.இந்த 
வழக்கில், சுமார் 852 
மில்லியன் டாலர் இழப்பீடு வழங்க பல்கலைக்கழகம் ஒப்புக்கொண்டதுடன்,இன்னொரு 215 மில்லியன் டாலர் இழப்பீடும் வழங்க லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி நீதிமன்றம் வியாழக்கிழமை
 ஒரு ஒப்பந்தம் மேற்கொண்டது. டாக்டர் ஜார்ஜ் டிண்டால்
 இந்த விவகாரம் தொடர்பில் 2019ல் கைதானார்.அவர் மீது 19 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது மட்டுமின்றி, 
விசாரணைக்கு 
இடையே, அவர் மீது மீண்டும் 6 பிரிவுகளில் துஷ்பிரயோக வழக்குப் பதியப்பட்டது.அவர் இதுவரை தாம் 
குற்றவாளி அல்ல என்று வாதிட்டு வருவதால் அவர் மீதான வழக்கு நிலுவையில் உள்ளது.2009 முதல் 2016 வரையான
 காலகட்டத்திலேயே மருத்துவர் திண்டால் மாணவிகளிடம் துச்ஜ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.விசாரணை அதிகாரிகள் திண்டாலின் 
குடியிருப்பில் இருந்து 1,000-கும் அதிகமாக காணொளி காட்சிகளையும், அருவருப்பான புகைப்படங்களையும் கைப்பற்றினர் என்பது 
குறிப்பிடத்தக்கது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



புதன், 24 மார்ச், 2021

ஆஸ்திரேலிய அரசு இந்திய குடும்பத்தையும் நாடுகடத்தும் செயலில் ஈடுபட்டிருக்கிறது.

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்திய தம்பதியருக்கு உடல் குறைப்பாட்டுடன் பிறந்த குழந்தையையும், அக்குடும்பத்தையும் ஏற்க மறுத்து அனைவரையும் இந்தியாவுக்கு நாடுகடத்தும் செயலில் ஆஸ்திரேலிய 
அரசு ஈடுபட்டிருக்கிறது. 
கயான் கட்யால் எனும் 6 வயதாகும் அக்குழந்தைக்கு ஆஸ்திரேலிய பிறப்புச் சான்றிதழ் உள்ள போதிலும் ஆஸ்திரேலியாவில் அக்குழந்தைக்கான உரிமைகள் மறுக்கப்படுவதாக கவலைத் தெரிவித்திருக்கிறார் குழந்தையின் தந்தையான வருண் கட்யால்.  
கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியரான வருண் கட்யால் ஐரோப்பிய சமையல் குறித்து கற்பதற்காக ஆஸ்திரேலியா சென்று பின்பு ஆஸ்திரேலியாவிலேயே தனது பணி வாழ்க்கையையும் அமைத்துக் கொண்டார். இந்தியரான அவரது மனைவியும் திருமணத்துக்குப் பிறகு ஆஸ்திரேலியா சென்றுவிட்டார்.  
ஆஸ்திரேலியாவில் தனது உணவகத்தைத் திறக்கவும், நிரந்தரமாக வசிப்பதற்கான PR விசாவுக்காகவும் வருண் காத்திருந்த சூழலில் அவரது 6 வயது குழந்தையை ஏற்க மறுக்கும் ஆஸ்திரேலியா, அக்குடும்பத்தை நாடுகடத்த திட்டமிட்டிருப்பதாகக் 
கூறப்படுகின்றது. 
ஆஸ்திரேலியாவில் நிரந்தர வாசிகளை அல்லாதோரின் குழந்தைக்கு உடல் குறைப்பாடு இருந்தால் ஆஸ்திரேலிய புலம்பெயர்வு சட்டத்தின் கீழ் அவர்கள் நாடுகடத்துவதற்கான வழி உள்ளது. அதே சமயம், இவ்வாறான உடல் குறைப்பாடு காரணமாக எத்தனை குழந்தைகள் நாடுகடத்தப்பட்டிருப்பார்கள் என்ற தகவல் எதுவும் இல்லை. 
“ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக வசிக்கவே இங்கு இருக்கிறார்கள். ஆனால் உடல் குறைப்பாட்டுடன் ஒரு குழந்தை பிறந்ததும் அவர்கள் இந்நாட்டுக்கு வேண்டாதவர்கள் ஆகிவிடுகிறார்கள்,” Welcoming Disability அமைப்பின் ஜேன் கோதர்ட் தெரிவித்திருக்கிறார்.  

நிலாவரை.கொம் செய்திகள் >>>



செவ்வாய், 23 மார்ச், 2021

ஜெர்மனியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு

ஜெர்மனியில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக அங்கு உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா பரவி வருவதாக 
கூறப்படுகிறது.
இதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஜெர்மனி அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
ஜெர்மனியில் தற்போது ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மார்ச் 28 ஆம் திகதிக்குப் பிறகு ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கல் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஜெர்மனியில் வரும் ஏப்ரல் 18ஆம் திகதி வரை ஊரடங்கு 5 நாட்களுக்கு தீவிர ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்றும் ஜெர்மன் அரசு அறிவித்துள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>



ஞாயிறு, 14 மார்ச், 2021

காவல்துறை மேலதிகாரியிடம்பாரிஸ் மெற்றோ தொடருந்தில் ‘பிற் -பொக்கற்’ கைவரிசை

 பாரிஸ் மெற்றோ ரயில்களில் மீண்டும் இளவயது பிற் பொக்கற் திருடர்களின் கைவரிசை அதிகரித்துள்ளது என்று போக்குவரத்து காவல்துறை  பயணி களை எச்சரித்துள்ளனர்.
கடந்த வெள்ளியன்று பகல் பாரிஸ் மெற்றோ ஒன்றில் பயணித்த காவல்துறை  கொமாண்டோ உத்தியோகத்தரின் பணப்பை ‘பிக்-பொக்கற்’ திருடர்களால் அபகரிக்கப்பட்டிருக்கிறது என்ற தகவலை ‘பரிஷியன்’ செய்திச் சேவை வெளியிட்டிருக்கிறது.
தனது பணப்பையைப் பறிகொடுத்ததை அறிந்ததும் உடனடியாக Gare de L’Est ரயில் நிலையத்தில் இறங்கிய அந்த அதிகாரி போக்குவரத்துப் பொலீஸாரிடம் முறையிட்டார். திருடப்பட்ட பணப்பையில் இருந்த 
அவரது வங்கிக் கடன் அட்டை மூலம் சொற்ப 
நேரத்தில் இரண்டு 
தடவைகள் 500 ஈரோக்கள் பணம் வங்கியில் மீளப்பெறப்பட்டிருப்பது தெரியவந்தது. உடனடியாக நகர வங்கிப் பணப்பரிமாற்ற
 இயந்திரங்களின் கண்காணிப்புக் கமராக்கள் சோதனை 
செய்யப்பட்டன. அதன் மூலம் பெறப்பட்ட காட்சிகளைக் கொண்டு பாரிஸ் 18 ஆம் நிர்வாகப் பிரிவில் வைத்து பணப்பைத் திருடர்கள் மடக்கிப் பிடிக்கப்பட்டனர்.
எட்டுப் பேர் கொண்ட பதின்ம வயதுடைய பிக்-பொக்கற் கும்பல் ஒன்றே இவ்வாறு நெற்வேர்க் பிரிகேட் பொலீஸாரிடம் சிக்கியது. அனைவரும் பொஸ்னிய (Bosnian) நாட்டவர்கள் என்பது 
தெரியவந் துள்ளது.
வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற மற்றொரு சம்பவத்தில் நெதர்லாந்து நாட்டின் பெண் ஒருவரிடம் அவரது பணப்பை திருடப்பட்டு அதில் இருந்த வங்கி அட்டை மூலம் பணம் அபகரிக்கப்பட்டுள்ளது. Luxembourg RER ரயில் தரிப்பிடத்தில் அந்தப் பெண் பயணி தனது வங்கி அட்டையைப் பயன்படுத்தி ரிக்கெற் பெற்றுக்கொண்ட சமயம் சிறுவர் 
பிக்-பொக்கற் கும்பல் 
ஒன்று அவரது வங்கி அட்டையின் இரகசியக் குறியீட்டு இலக்கங்களை 
அறிந்து கொண்டு அவரோடு கூடவே ரயிலில் பயணித்து 
அங்கு வைத்து அவரது பணப்பையைத் திருடி உள்ளனர். சுமார் அரை மணி நேரத்துக்குள் அந்தப் பெண்ணின் வங்கிக் கடன்
 அட்டை மூலம் அவரது கணக்கில் இருந்து பணம் அபகரிக்கப்பட்டிருப்பதும் தெரியவந் துள்ளது.
கிழக்கு ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த சிறுவர் திருட்டுக் கும்பல்கள் இவ்வாறு ரயில்களில் பயணிகளிடம் பணப்பை களை நுட்பமாக அபகரிக்கும் சம்பவங் கள் நீண்ட காலமாகத் தொடர்ந்து இடம் 
பெற்றுவருகின்றன.
வன்முறையை வெளிப்படுத்தாமல் மிகவும் பவ்வியமாக – தங்களை அப்பாவிச் சிறுவர்கள் போன்று பாவனை காட்டி – பயணிகளின் உடைமைகளை அபகரிக்கின்ற இந்தக் கும்பல்களைச் சேர்ந்தோர் அவர்களின் வயது காரணமாகத் தண்டனைகளில் இருந்து தப்பிவிடுகின்றனர்.அல்லது சிறுவர் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகின்றனர்.
இவர்கள் பெரும்பாலும் உல்லாசப் பயணிகளையே குறிவைக்கின்றனர். பொஸ்னிய பூர்வீகத்தைக் கொண்ட சட்டவிரோத வலைப்பின்னல் ஒன்றே சிறுவர்களை இவ்வாறு கட்டாயத்தின் பேரில் திருட்டுத் தொழிலில் ஈடுபடுத்தி வருகின்றது என்று காவல்துறை  அதிகாரிகள்
 தெரிவிக்கின்றனர்.
கொரோனா வைரஸ் நெருக்கடியால் நகருக்கு உல்லாசப் பயணிகளது வருகை தடைப்பட்டதை அடுத்து ரயில்களில் இவ்வாறான திருட்டுக்கள் குறைந்திருந்தன. ஆனால் தற்போது மீண்டும் பிக்-பொக்கற் அபகரிப்புகள் தொடங்கியுள்ளன என்று பாரிஸ் நகரப் போக்கு வரத்துப் பிரிவு தெரிவித்துள்ளது.


 

 பாரிஸ் மெற்றோ ரயில்களில் மீண்டும் இளவயது பிக்-பொக்கற் திருடர்களின் கைவரிசை அதிகரித்துள்ளது என்று போக்குவரத்து காவல்துறை  பயணி களை எச்சரித்துள்ளனர்.

கடந்த வெள்ளியன்று பகல் பாரிஸ் மெற்றோ ஒன்றில் பயணித்த காவல்துறை  கொமாண்டோ உத்தியோகத்தரின் பணப்பை ‘பிக்-பொக்கற்’ திருடர்களால் அபகரிக்கப்பட்டிருக்கிறது என்ற தகவலை ‘பரிஷியன்’ செய்திச் சேவை வெளியிட்டிருக்கிறது.

தனது பணப்பையைப் பறிகொடுத்ததை அறிந்ததும் உடனடியாக Gare de L’Est ரயில் நிலையத்தில் இறங்கிய அந்த அதிகாரி போக்குவரத்துப் பொலீஸாரிடம் முறையிட்டார். திருடப்பட்ட பணப்பையில் இருந்த அவரது வங்கிக் கடன் அட்டை மூலம் சொற்ப நேரத்தில் இரண்டு தடவைகள் 500 ஈரோக்கள் பணம் வங்கியில் மீளப்பெறப்பட்டிருப்பது தெரியவந்தது. உடனடியாக நகர வங்கிப் பணப்பரிமாற்ற இயந்திரங்களின் கண்காணிப்புக் கமராக்கள் சோதனை செய்யப்பட்டன. அதன் மூலம் பெறப்பட்ட காட்சிகளைக் கொண்டு பாரிஸ் 18 ஆம் நிர்வாகப் பிரிவில் வைத்து பணப்பைத் திருடர்கள் மடக்கிப் பிடிக்கப்பட்டனர்.

எட்டுப் பேர் கொண்ட பதின்ம வயதுடைய பிக்-பொக்கற் கும்பல் ஒன்றே இவ்வாறு நெற்வேர்க் பிரிகேட் பொலீஸாரிடம் சிக்கியது. அனைவரும் பொஸ்னிய (Bosnian) நாட்டவர்கள் என்பது தெரியவந் துள்ளது.

வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற மற்றொரு சம்பவத்தில் நெதர்லாந்து நாட்டின் பெண் ஒருவரிடம் அவரது பணப்பை திருடப்பட்டு அதில் இருந்த வங்கி அட்டை மூலம் பணம் அபகரிக்கப்பட்டுள்ளது. Luxembourg RER ரயில் தரிப்பிடத்தில் அந்தப் பெண் பயணி தனது வங்கி அட்டையைப் பயன்படுத்தி ரிக்கெற் பெற்றுக்கொண்ட சமயம் சிறுவர் பிக்-பொக்கற் கும்பல் ஒன்று அவரது வங்கி அட்டையின் இரகசியக் குறியீட்டு இலக்கங்களை அறிந்து கொண்டு அவரோடு கூடவே ரயிலில் பயணித்து அங்கு வைத்து அவரது பணப்பையைத் திருடி உள்ளனர். சுமார் அரை மணி நேரத்துக்குள் அந்தப் பெண்ணின் வங்கிக் கடன் அட்டை மூலம் அவரது கணக்கில் இருந்து பணம் அபகரிக்கப்பட்டிருப்பதும் தெரியவந் துள்ளது.

கிழக்கு ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த சிறுவர் திருட்டுக் கும்பல்கள் இவ்வாறு ரயில்களில் பயணிகளிடம் பணப்பை களை நுட்பமாக அபகரிக்கும் சம்பவங் கள் நீண்ட காலமாகத் தொடர்ந்து இடம் பெற்றுவருகின்றன.

வன்முறையை வெளிப்படுத்தாமல் மிகவும் பவ்வியமாக – தங்களை அப்பாவிச் சிறுவர்கள் போன்று பாவனை காட்டி – பயணிகளின் உடைமைகளை அபகரிக்கின்ற இந்தக் கும்பல்களைச் சேர்ந்தோர் அவர்களின் வயது காரணமாகத் தண்டனைகளில் இருந்து தப்பிவிடுகின்றனர்.அல்லது சிறுவர் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகின்றனர்.

இவர்கள் பெரும்பாலும் உல்லாசப் பயணிகளையே குறிவைக்கின்றனர். பொஸ்னிய பூர்வீகத்தைக் கொண்ட சட்டவிரோத வலைப்பின்னல் ஒன்றே சிறுவர்களை இவ்வாறு கட்டாயத்தின் பேரில் திருட்டுத் தொழிலில் ஈடுபடுத்தி வருகின்றது என்று காவல்துறை  அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கொரோனா வைரஸ் நெருக்கடியால் நகருக்கு உல்லாசப் பயணிகளது வருகை தடைப்பட்டதை அடுத்து ரயில்களில் இவ்வாறான திருட்டுக்கள் குறைந்திருந்தன. ஆனால் தற்போது மீண்டும் பிக்-பொக்கற் அபகரிப்புகள் தொடங்கியுள்ளன என்று பாரிஸ் நகரப் போக்கு வரத்துப் பிரிவு தெரிவித்துள்ளது.


 

ஞாயிறு, 7 மார்ச், 2021

அமெரிக்காவின் அதி உயர் விருதுபெறும் தமிழ்ப் பெண்மணி

தமிழினத்தின் நலனுக்காக செய்துவரும் அபரிதமான சேவையினால் அமெரிக்காவின் அதி உயர் விருதுபெறும் தமிழ்ப் பெண்மணி
சிறிலங்கா அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்கள் குறித்த பேசுபொருள் அனைத்துலக அரசாங்கத்தில் முக்கிய 
இடத்தைப்பிடித்துள்ள
 நிலையில், இலங்கையின் மனிதஉரிமை ஆர்வலரும் வழக்கறிஞருமான ரனிதா ஞானராஜாவுக்கும் அமெரிக்க ராஜாங்கத்திணைக்களம் சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு தைரியமான பெண்மணி என்ற விருதை
 வழங்கியுள்ளது
அமெரிக்க ராஜாங்கத்திணைக்களத்தால் நேற்று உலகெங்கிலும் இருந்து விருது பெறுபவர்களின் பட்டியலை அறிவிக்கப்பட்டிருந்தது இதில் ஒருவராக ரனிதா ஞானராஜாவும் இடம் பிடித்துள்ளார்.சிறிலங்கா அரசாங்கத்தால் அச்சுறுத்தல்கள் மற்றும் சவால்கள் விடுக்கப்பட்டபோதிலும், ஒடுக்குமுறையால் பாதிக்கப்பட்ட சமூகங்களின் உரிமைகளுக்காக ரனிதா ஞானராஜா தொடர்ந்தும் போராடி வருவதாகவும் அமெரிக்கவெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.சிறிலங்காவின் 
இலங்கையின் 
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ பல ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு இலவச சட்ட உதவி உட்பட்ட சேவைகளை வழங்கும் நீதிக்காக ரனிதா ஞானராஜா 
தனதுவாழ்க்கையை அர்ப்பணித்துள்ளதாகவும் அமெரிக்க ராஜாங்கத்திணைக்களம் குறிப்பிடப்பட்டுள்ளது.இவர்களுக்குரிய விருது வழங்கும் மெய்நிகர் நிகழ்வு எதிர்வரும் திங்கட்கிழமை அமெரிக்க ராஜாங்கசெயலாளர் அந்தனி பிளிங்களின் தலைமையில் 
இடம்பெறவுள்ளது

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



இலங்கைக்கு அங்கீகாரம் வழங்கப்படாத 300,000 டோஸ் சினோபோர்ம் தடுப்பூசிகளை வழங்கும் சீனா

இலங்கைக்கு  மேலும் 300,000 டோஸ் சினோபோர்ம் கொரோனா தடுப்பூசிகளை  பரிசளிப்பதாக சீனா உறுதியளித்துள்ளது.ஏற்கனவே 300,000 தடுப்பூசிகளை இலங்கைக்கு வழங்குவதற்கு தயாராக இருப்பதாக சீனா உத்தியோகப்பூர்வமாக அறிவித்திருந்தது.
இருப்பினும், சினோபோர்ம் தயாரிப்பாளரிடமிருந்து மேலும் சில விவரங்களுக்காக காத்திருப்பதனால், இலங்கையில் இந்த தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழங்கப்படவில்லை. இந்நிலையில், ஒரு
 வார காலத்திற்குள் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என பதில் சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமன 
தெரிவித்தார்.
எவ்வாறாயினும், இலங்கையில் அவசரகால பயன்பாட்டிற்காக இந்த தடுப்பூசிக்கு தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவினால் அங்கீகாரம் வழங்கப்படவில்லை.கடந்த 3 ஆம் திகதி சீனாவின் பிரதி வெளிவிவகார அமைச்சருடன் இடம்பெற்ற 
சந்திப்பின்போது , 600,000 கொரோனா தடுப்பூசியை வழங்க சீனா உறுதியளித்திருந்தது என சீனாவிற்கான இலங்கை தூதுவர் குறிப்பிட்டார்.சீனா உருவாகியுள்ள சினோபோர்ம் தடுப்பூசிகளை அவசரகால பயன்பாட்டிற்கு பயன்படுத்த 56 நாடுகளில் அங்கீகாரம் 
வழங்கப்பட்டுள்ளது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>