அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் மகப்பேறு டாக்டராக பணியாற்றியவரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 100 கோடி டாலர்( இந்திய மதிப்பில் ரூ.726 கோடி ) இழப்பீடு வழங்க குறித்த பல்கலைக்கழகம் ஒப்புக்கொண்டுள்ளது.
தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் குறித்த முடிவுக்கு லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது.தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில்
செயல்பட்டு வந்த மாணவர்களுக்கான சுகாதார
மையத்தில் மகப்பேறு மருத்துவராக பணியாற்றி வந்தவர் டாக்டர் ஜார்ஜ் டிண்டால். இவரே மொத்தம் 710 மாணவிகளிடம் வரம்பு மீறியதாகவும், பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாகவும் புகார் அளிக்கப்பட்டது.இந்த
வழக்கில், சுமார் 852
மில்லியன் டாலர் இழப்பீடு வழங்க பல்கலைக்கழகம் ஒப்புக்கொண்டதுடன்,இன்னொரு 215 மில்லியன் டாலர் இழப்பீடும் வழங்க லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி நீதிமன்றம் வியாழக்கிழமை
ஒரு ஒப்பந்தம் மேற்கொண்டது. டாக்டர் ஜார்ஜ் டிண்டால்
இந்த விவகாரம் தொடர்பில் 2019ல் கைதானார்.அவர் மீது 19 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது மட்டுமின்றி,
விசாரணைக்கு
இடையே, அவர் மீது மீண்டும் 6 பிரிவுகளில் துஷ்பிரயோக வழக்குப் பதியப்பட்டது.அவர் இதுவரை தாம்
குற்றவாளி அல்ல என்று வாதிட்டு வருவதால் அவர் மீதான வழக்கு நிலுவையில் உள்ளது.2009 முதல் 2016 வரையான
காலகட்டத்திலேயே மருத்துவர் திண்டால் மாணவிகளிடம் துச்ஜ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.விசாரணை அதிகாரிகள் திண்டாலின்
குடியிருப்பில் இருந்து 1,000-கும் அதிகமாக காணொளி காட்சிகளையும், அருவருப்பான புகைப்படங்களையும் கைப்பற்றினர் என்பது
குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக