இலங்கைக்கு மேலும் 300,000 டோஸ் சினோபோர்ம் கொரோனா தடுப்பூசிகளை பரிசளிப்பதாக சீனா உறுதியளித்துள்ளது.ஏற்கனவே 300,000 தடுப்பூசிகளை இலங்கைக்கு வழங்குவதற்கு தயாராக இருப்பதாக சீனா உத்தியோகப்பூர்வமாக அறிவித்திருந்தது.
இருப்பினும், சினோபோர்ம் தயாரிப்பாளரிடமிருந்து மேலும் சில விவரங்களுக்காக காத்திருப்பதனால், இலங்கையில் இந்த தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழங்கப்படவில்லை. இந்நிலையில், ஒரு
வார காலத்திற்குள் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என பதில் சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமன
தெரிவித்தார்.
எவ்வாறாயினும், இலங்கையில் அவசரகால பயன்பாட்டிற்காக இந்த தடுப்பூசிக்கு தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவினால் அங்கீகாரம் வழங்கப்படவில்லை.கடந்த 3 ஆம் திகதி சீனாவின் பிரதி வெளிவிவகார அமைச்சருடன் இடம்பெற்ற
சந்திப்பின்போது , 600,000 கொரோனா தடுப்பூசியை வழங்க சீனா உறுதியளித்திருந்தது என சீனாவிற்கான இலங்கை தூதுவர் குறிப்பிட்டார்.சீனா உருவாகியுள்ள சினோபோர்ம் தடுப்பூசிகளை அவசரகால பயன்பாட்டிற்கு பயன்படுத்த 56 நாடுகளில் அங்கீகாரம்
வழங்கப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக