நிலாவரை .கொம்

siruppiddy

புதன், 25 ஏப்ரல், 2018

ரொறன்ரோவில் நான்கு உடலங்கள் துணியால் மூடப்பட்ட நிலையில்

கனடா ரொறன்ரோவில் 24-04-018-(கனடா நேரம்   பி.ப. 1:30) அளவில் 10 பேர் வரையில் வாகனத்தால் மோதப்பட்டுள்ளனர்.
தெருவெங்கும் காயமுற்றோர் காணபடுகின்ற நிலையில் இறந்தோர் எண்ணிக்கை தொடர்பான விபரங்கள் தெரியவில்லை நான்கு உடலங்கள் துணியால் மூடப்பட்ட நிலையில்.Yonge Street இல் Finch க்கும் Sheppard க்கும் இடையே காணப்படுவதாக 
 தெரிவித்தார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


ஞாயிறு, 22 ஏப்ரல், 2018

சம்பளத்திற்கு எதிராக முறைப்பாடு: செய்து 52,000 டொலர்களைப் பெற்ற பெண்

பணிச்சுரண்டலுக்கு உள்ளாக்கிய முதலாளி மீது மெல்பேர்னைச் சேர்ந்த பூமிகா (வயது 29) முறைப்பாடு செய்ததன் மூலம் 52,000 டொலர்களைப் பெற்றுள்ளார்.
கடந்த 2014 மார்ச் மாதம் மெல்பேர்னில் குடியேறிய குறித்த பெண் மெல்பேர்ன் தென்கிழக்குப் பகுதியிலுள்ள இந்திய பலசரக்குக் கடை ஒன்றில் வேலைக்குச் சேர்ந்திருக்கிறார்.
குறித்த பெண் முழு நேரமாக வேலை செயத நிலையில், மணித்தியாலத்திற்கு 16.50 டொலர்கள் மட்டுமே சம்பளமாக பெற்றதாக தெரிவித்துள்ளார்.
சம்பள பற்றுச்சீட்டு வழங்கப்படாத அதேநேரம் சுப்பர் அனுவேசன் தொகையும் கட்டப்படவில்லை என்றும்அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் சுகவீன மற்றும் வருடாந்த விடுமுறையும் தனக்கு வழங்கப்படவில்லை எனவும் குறித்த பெண் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்ககது.
இச்சம்பவம் தொடர்பில் கடை உரிமையாளரிடம் கேட்டதாகவும், பின்பு இரண்டரை ஆண்டுகள் குறித்த கடையில் வேலை செய்த பின்பு விலகிவிட்டதாகவும் குறிப்பிட்டார்.
பின்பு அக்கடையின் உரிமையாளர் மீது Fair Work Ombudsman (FWO) மற்றும் ATO-இடம் பூமிகா முறைப்பாடு செய்திருக்கிறார்.
இதையடுத்து கொடுக்கப்படாத சம்பள நிலுவையான 42,000 டொலர்களையும், சுப்பர் அனுவேசன் தொகையாக 10,000 டொலர்களையும் கடை உரிமையாளர் வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதவேளை இன்னும் 10,000 டொலர்கள் கடை உரிமையாளர் தரவேண்டும் என்றும் அந்த பணத்தை பெறும் வரை ஓயப்போவதில்லை எனவும் பூமிகா கூறியுள்ளார்.
ணியிடங்களில் நீங்கள் சுரண்டப்படுவதாக உணர்ந்தாலோ அல்லது வேறேதும் சிக்கல்களை எதிர்கொண்டாலோ 13 13 94 என்ற இலக்கத்தில் தம்மைத் தொடர்பு கொள்ளுமாறு Fair Work தெரிவித்துள்ளது.
மொழிபெயர்ப்பு வசதி தேவைப்படும் தருணத்தில் 13 14 50 என்ற இலக்கத்தில் அழைக்குமாறும் கூறப்பட்டுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



குய்லின் பகுதியில் ஆற்றில் படகுகள் கவிழ்ந்து விபத்து: 17 பேர் பரிதாப பலி

7
சீனாவின் குய்லின் பகுதியில் உள்ள தாவோஹுவாஜியாங் ஆற்றில் இரண்டு படகுகள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் பரிதாபமாக பலியாகினர்.
குறித்த ஆற்றில் அவ்வப்போது படகு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். படகு போட்டிகள் நடாத்துவது எனில் பொலிசாரிடம் அனுமதி 
பெற வேண்டும்.
இந்நிலையில் படகு போட்டி நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், பொலிசாருக்கு எவ்வித தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
இதனையடுத்து போட்டிக்கு தயாராகி கொண்டிருந்த போது பயிற்சி ஓட்டம் நடைபெற்றுள்ளது.
அப்போது திடீரென ஏற்பட்ட விபத்தில் இரண்டு படகுகள் ஆற்றில் மூழ்கின. இதில் இரண்டு படகுகளிலும் பயணம் செய்த அனைவரும் 
ஆற்றில் மூழ்கினர்.
ஆற்றில் மூழ்கியவர்களை மீட்புப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் சுமார் 40 பேர் உயிருடன் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கோர விபத்தில் 17 பேர் பரிதாபமாக நீரில் மூழ்கி பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


ஞாயிறு, 15 ஏப்ரல், 2018

வான்வழி ஏவுகணைகளை இடைமறித்து தகர்த்துள்ள ரஷ்யா

சிரியாவில் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் நடத்திய 71 வான்வழி ஏவுகணைகளை இடைமறித்து தகர்த்துள்ளதாக ரஷ்யா இராணுவம் தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் மொஸ்கோவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ரஷ்ய உயர்மட்ட இராணுவ அதிகாரியொருவர் இதனை 
தெரிவித்துள்ளார்.
சிரியாவின் பல்வேறு நிலைகளை நோக்கி 103 ஏவுகனை தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக ரஷ்ய இராணுவம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக கோட்டா பகுதியில் உள்ள விமான தளத்தின் மீது நடத்தப்பட்ட 12 வான்வழித் தாக்குதல்கள் இடைமறிக்கப்பட்டுள்ளதாக
குறிப்பிடப்பட்டுள்ளது.
சிரியாவின் வான்வழிப் பாதுகாப்பை ரஷ்யா முழுமையாக வலுப்படுத்தியுள்ளதாகவும், கடந்த ஆறு மாதங்களாக இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுவந்ததாக ரஷ்யா 
குறிப்பிட்டுள்ளது.
சிரியாவில் இராசாயன ஆயுதங்கள் கொண்டு தாக்குதல்கள் நடத்தப்படுவதாக கூறி அமெரிக்கா தலைமையிலான பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் கூட்டுப்படைகள் சிரியாவில் தாக்குதல்களை 
ஆரம்பித்துள்ளன.
இந்த தாக்குதல் தொடர்பில் விமர்சித்துள்ள ஈரான் நாட்டின் முக்கிய தலைவர்களில் ஒருவரான அயதுல்லா அலி கமேனி, அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் நாட்டு தலைவர்களை குற்றவாளிகள் என குறிப்பிட்டுள்ளார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



வெள்ளி, 13 ஏப்ரல், 2018

இயற்கைப் பேரழிவுகளால் வரலாறு காணாத இழப்பு

 ஏற்பட்ட இயற்கைப் பேரழிவுகளால் 2017 ஆம் ஆண்டு  வரலாறு காணாத அளவிற்கு 144 பில்லியன் டொலர்கள்வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக சுவிஸ் காப்பீட்டு நிறுவனமான Swiss Re தெரிவித்துள்ளது.
அமெரிக்காவையும் கரீபியன் தீவுகளையும் புரட்டி எடுத்த Harvey, Irma மற்றும் Maria ஆகிய மூன்று புயல்கள் ஏற்படுத்திய இழப்பு 92 பில்லியன் டொலர்கள் என்று அந்த நிறுவனத்தின் அறிக்கை 
தெரிவிக்கிறது.
அந்த நிறுவனத்தின் தலைவர்களில் ஒருவரான Martin Bertogg மோசமான பல புயல்கள் வரும் ஆண்டுகளில் வரவிருப்பதால் இப்போதே தயாராகிக் கொள்ளுமாறு காப்பீட்டு நிறுவனங்களை 
எச்சரித்துள்ளார்.
இடர் மேலாண்மை நோக்கில் இது மிகவும் முக்கியம், ஏனென்றால் அது காப்பீட்டு நிறுவனங்களுக்கு மட்டுமின்றி மொத்த சமுதாயத்திற்கும் எதிர் காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளை எதிர்கொள்ள தயாராக இருப்பதற்கு உதவும் என்று Bertogg ஒரு அறிக்கையில் 
தெரிவித்துள்ளார்.
வரலாறு காணாத அளவு காட்டுத்தீ சம்பவங்களை சந்தித்த ஆண்டு 2017 என்றும், அதனால் 14 பில்லியன் டொலர்கள் அளவுக்கு இழப்பு ஏற்பட்டதாகவும் Swiss Re தெரிவித்துள்ளது.
2017 இல் தொடர்ந்து ஏற்பட்ட பல இயற்கைப் பேரழிவுகளால் மோசமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக பல காப்பீட்டு நிறுவனங்கள் 
தெரிவித்துள்ளன.
இயற்கை மற்றும் மனிதனால் ஏற்படும் பேரழிவுகள் மொத்தமாக 337 பில்லியன் டொலர்கள் இழப்பை ஏற்படுத்தியுள்ளன என்றும் இது 2016ஐ ஒப்பிடும்போது இரண்டு மடங்கு என்றும் Swiss Re 
தெரிவித்துள்ளது¨.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



புதன், 11 ஏப்ரல், 2018

சில பல மணி நேர போராட்டத்திற்கு பின் வாஷிங் மெஷினில் சிக்கிய குழந்தை மீட்பு

சீனாவில் பல மணி நேர போராட்டத்திற்கு பின் வாஷிங் மெஷினில் விழுந்த குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது.
குழந்தைகள் செய்யும் அக்கப்போருக்கு அளவே இல்லை. குழந்தைகள் விளையாட்டு என்ற பெயரில் அடிக்கும் லூட்டி சில சமயம் பெற்றோர்களை தர்ம சங்கட சூழ்நிலையிக்கு ஆளாக்கிவிடுகிறது.
சீனாவின் செஜியாங் மாகாணத்தில உள்ள ஷவ்ஷாங் நகரில் சிறுவர், சிறுமிகள் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்தனர். விளையாட்டில் கலந்து கொண்ட இரண்டு வயது குழந்தை வாஷிங்மெஷினுக்குள்
 ஒளிந்து கொண்டது. 
சிறிது நேரம் கழித்து குழந்தை இல்லாததை உணர்ந்த பெற்றோர், குழந்தையை வீடு முழுவதும் தேடினர். அப்போது வாசிங் மெஷினில் இருந்து அழுகுரல் கேட்டது. பதற்றமடைந்து வாஷிங் மெஷினுள் பார்த்த போது குழந்தை வாஷிங் மெஷினுள் இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்து குழந்தையை வாஷிங் மெஷினில் இருந்து எடுக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை.
இதனையடுத்து போலீஸாரின் உதவியோடு பல மணிநேர போராட்டத்திற்கு பின் வாஷிங் மெஷினை உடைத்து குழந்தையை
 பத்திரமாக மீட்டனர்..
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


ராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது

வடமேற்கு ஆப்பிரிக்க நாடான அல்ஜீரிய தலைநகர் அல்ஜீரிஸ் அடுத்து உள்ள பவ்பரிக் விமான நிலையத்திலிருந்து 200 ராணுவ வீரர்களை ஏற்றிக்கொண்டு ராணுவ விமானம் புறப்பட்டுள்ளது. 
இந்த விமானம் வடக்கு பகுதியில் உள்ள பெசார் என்ற நகரத்தை நோக்கி சென்று கொண்டிருந்த போது திடீரென கீழே நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானது.
ரஷ்ய தயாரிப்பு விமானமான இதில் ராணுவ வீரர்களை தவிர பயணிகளும் பயணித்தாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த விபத்தில் 100க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர்.
விபத்துக்காக காரணம் இன்னும் தெரியவில்லை, சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. 
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


புதன், 4 ஏப்ரல், 2018

துப்பாக்கிப் பிரயோகம்: யூத் து பெ தலைமை அலுவலகத்தின் மீது நால்வர் படுகாயம்!

சாப் புருனோ YouTube தலைமை அலுவலகத்தின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இந்த சம்பவத்தில் நாலவர்
 படுகாயமடைந்துள்ளதுடன், சந்தேகநபர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா – சான்பிரான்சிஸ்கோ, சாப் புருனோ பகுதியில் 
அமைந்துள்ள YouTube தலைமைஅலுவலகத்தின்மீதுஇன்றுஇந்ததாக்குதல்நடத்தப்பட்டுள்ளதுஅலுவலகத்திற்குள் நுழைந்த பெண் ஒருவரே இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாகவும், இதனையடுத்து, அந்த பகுதிக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த சம்பவத்தில் நால்வர் காயமடைந்துள்ள நிலையில், குறித்த அனைவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>