நிலாவரை .கொம்

siruppiddy

வெள்ளி, 13 ஏப்ரல், 2018

இயற்கைப் பேரழிவுகளால் வரலாறு காணாத இழப்பு

 ஏற்பட்ட இயற்கைப் பேரழிவுகளால் 2017 ஆம் ஆண்டு  வரலாறு காணாத அளவிற்கு 144 பில்லியன் டொலர்கள்வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக சுவிஸ் காப்பீட்டு நிறுவனமான Swiss Re தெரிவித்துள்ளது.
அமெரிக்காவையும் கரீபியன் தீவுகளையும் புரட்டி எடுத்த Harvey, Irma மற்றும் Maria ஆகிய மூன்று புயல்கள் ஏற்படுத்திய இழப்பு 92 பில்லியன் டொலர்கள் என்று அந்த நிறுவனத்தின் அறிக்கை 
தெரிவிக்கிறது.
அந்த நிறுவனத்தின் தலைவர்களில் ஒருவரான Martin Bertogg மோசமான பல புயல்கள் வரும் ஆண்டுகளில் வரவிருப்பதால் இப்போதே தயாராகிக் கொள்ளுமாறு காப்பீட்டு நிறுவனங்களை 
எச்சரித்துள்ளார்.
இடர் மேலாண்மை நோக்கில் இது மிகவும் முக்கியம், ஏனென்றால் அது காப்பீட்டு நிறுவனங்களுக்கு மட்டுமின்றி மொத்த சமுதாயத்திற்கும் எதிர் காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளை எதிர்கொள்ள தயாராக இருப்பதற்கு உதவும் என்று Bertogg ஒரு அறிக்கையில் 
தெரிவித்துள்ளார்.
வரலாறு காணாத அளவு காட்டுத்தீ சம்பவங்களை சந்தித்த ஆண்டு 2017 என்றும், அதனால் 14 பில்லியன் டொலர்கள் அளவுக்கு இழப்பு ஏற்பட்டதாகவும் Swiss Re தெரிவித்துள்ளது.
2017 இல் தொடர்ந்து ஏற்பட்ட பல இயற்கைப் பேரழிவுகளால் மோசமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக பல காப்பீட்டு நிறுவனங்கள் 
தெரிவித்துள்ளன.
இயற்கை மற்றும் மனிதனால் ஏற்படும் பேரழிவுகள் மொத்தமாக 337 பில்லியன் டொலர்கள் இழப்பை ஏற்படுத்தியுள்ளன என்றும் இது 2016ஐ ஒப்பிடும்போது இரண்டு மடங்கு என்றும் Swiss Re 
தெரிவித்துள்ளது¨.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக