நிலாவரை .கொம்

siruppiddy

ஞாயிறு, 22 ஏப்ரல், 2018

சம்பளத்திற்கு எதிராக முறைப்பாடு: செய்து 52,000 டொலர்களைப் பெற்ற பெண்

பணிச்சுரண்டலுக்கு உள்ளாக்கிய முதலாளி மீது மெல்பேர்னைச் சேர்ந்த பூமிகா (வயது 29) முறைப்பாடு செய்ததன் மூலம் 52,000 டொலர்களைப் பெற்றுள்ளார்.
கடந்த 2014 மார்ச் மாதம் மெல்பேர்னில் குடியேறிய குறித்த பெண் மெல்பேர்ன் தென்கிழக்குப் பகுதியிலுள்ள இந்திய பலசரக்குக் கடை ஒன்றில் வேலைக்குச் சேர்ந்திருக்கிறார்.
குறித்த பெண் முழு நேரமாக வேலை செயத நிலையில், மணித்தியாலத்திற்கு 16.50 டொலர்கள் மட்டுமே சம்பளமாக பெற்றதாக தெரிவித்துள்ளார்.
சம்பள பற்றுச்சீட்டு வழங்கப்படாத அதேநேரம் சுப்பர் அனுவேசன் தொகையும் கட்டப்படவில்லை என்றும்அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் சுகவீன மற்றும் வருடாந்த விடுமுறையும் தனக்கு வழங்கப்படவில்லை எனவும் குறித்த பெண் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்ககது.
இச்சம்பவம் தொடர்பில் கடை உரிமையாளரிடம் கேட்டதாகவும், பின்பு இரண்டரை ஆண்டுகள் குறித்த கடையில் வேலை செய்த பின்பு விலகிவிட்டதாகவும் குறிப்பிட்டார்.
பின்பு அக்கடையின் உரிமையாளர் மீது Fair Work Ombudsman (FWO) மற்றும் ATO-இடம் பூமிகா முறைப்பாடு செய்திருக்கிறார்.
இதையடுத்து கொடுக்கப்படாத சம்பள நிலுவையான 42,000 டொலர்களையும், சுப்பர் அனுவேசன் தொகையாக 10,000 டொலர்களையும் கடை உரிமையாளர் வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதவேளை இன்னும் 10,000 டொலர்கள் கடை உரிமையாளர் தரவேண்டும் என்றும் அந்த பணத்தை பெறும் வரை ஓயப்போவதில்லை எனவும் பூமிகா கூறியுள்ளார்.
ணியிடங்களில் நீங்கள் சுரண்டப்படுவதாக உணர்ந்தாலோ அல்லது வேறேதும் சிக்கல்களை எதிர்கொண்டாலோ 13 13 94 என்ற இலக்கத்தில் தம்மைத் தொடர்பு கொள்ளுமாறு Fair Work தெரிவித்துள்ளது.
மொழிபெயர்ப்பு வசதி தேவைப்படும் தருணத்தில் 13 14 50 என்ற இலக்கத்தில் அழைக்குமாறும் கூறப்பட்டுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக