நிலாவரை .கொம்

siruppiddy

செவ்வாய், 18 ஆகஸ்ட், 2020

கலிஃபோர்னியா மரணப் பள்ளத்தாக்கில் இதுவரை 'பூமியின் அதிகபட்ச' வெப்பநிலை பதிவு

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள மரணப் பள்ளத்தாக்கு தேசிய பூங்காவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று 130 டிகிரி ஃபாரன்ஹீட் (54.4 டிகிரி செல்சியஸ்) வெப்பம் பதிவு 
செய்யப்பட்டுள்ளது.
மரணப் பள்ளத்தாக்கின் ஃபர்னேஸ் க்ரீக் எனும் இடத்தில் இந்த வெப்பநிலை பதிவாகியுள்ளது.
இதுவரை பூமியில் பதிவுசெய்யப்பட்ட வெப்பநிலையில் இதுவே அதிகபட்சமாக இருப்பதற்கான சாத்தியங்கள் இருப்பதாக 
கருதப்படுகிறது.
அமெரிக்காவின் மேற்குக் கடலோரப் பகுதிகளில் கடுமையான வெப்ப அலை வீசி வரும் சூழலில் இந்த அதிகபட்ச வெப்பநிலை பதிவு 
செய்யப்பட்டுள்ளது.
அப்பகுதியின் வெப்பநிலை இந்த வாரத்தில் மேலும் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு பூமியில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை 129.2 டிகிரி ஃபாரன்ஹீட் (54 டிகிரி செல்சியஸ்) ஆகும்.
இதுவும் 2013-ஆம் ஆண்டு மரணப் பள்ளத்தாக்கில்தான் 
பதிவு செய்யப்பட்டது.
ஒரு நூற்றாண்டுக்கு முன்பாக மரணப் பள்ளத்தாக்கில் 134 டிகிரி ஃபாரன்ஹீட் (56.6 டிகிரி செல்சியஸ்) வெப்பநிலை பதிவு செய்யப்பட்டது என்று கூறப்படுவது குறித்து பல்வேறு சந்தேகங்கள் மற்றும் 
கேள்விகள் உள்ளன.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


சனி, 8 ஆகஸ்ட், 2020

கடைசி இராட்சத பனிப்பாறை வடக்கு ஆர்ட்டிக் பகுதியின் தானாகவே உடைவு

வடக்கு ஆர்ட்டிக் பகுதியில் இருந்த கடைசி இராட்சத பனிப்பாறை அடுக்கு தானாகவே இடிந்து விழுந்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.இதில், 40 சதவீதம் பகுதி உருகி விட்டதாகவும், இடிந்து விழுந்த பனிப்பாறையின் அளவு 80 சதுர கிலோ மீட்டர் எனவும், நியூயோர்க்கில் உள்ள 60 சதுர கிலோ மீட்டர் கொண்ட மன்ஹாட்டன் தீவைவிட பெரியது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.பனிப் பாறை இடிந்த பகுதி, வடக்கு கனடாவுக்கு. சொந்தமான மக்கள் தொகை மிகவும் குறைவாக உள்ள நுனாவட் எல்லீஸ்மீர் தீவில் உள்ளது.சாதாரண காற்று வெப்பநிலைக்கு மேல், கடல் காற்று மற்றும் பனி அடிக்கின் முன் திறந்த நீர் ஆகியவை பனிப்பாறையின் ஒரு பகுதியை உடைந்திருக்கலாம் என கனடாவின் பனி மையம். தெரிவித்துள்ளது.புவிவெப்பமயமாதல் காரணமாக பனி பாறைகள் தொடர்ந்து உருகி வருவதால், கடல் நீர் மட்டம் அதிகரித்து பேரழிவு ஏற்படலாம் எனவும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>>>


புதன், 5 ஆகஸ்ட், 2020

பலஸ்தீனத்தில் சிறுவனுக்கு எடுத்த ஸ்கான் முடிவை பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சி


திடீரென தனக்கு தூக்கம் வருவது போல் உணர்வதாக கூறிய சிறுவனை பெற்றோர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல, அவனுக்கு ஸ்கான் எடுத்த மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்த 
சம்பவமொன்று பலஸ்தீனத்தில் இடம்பெற்றுள்ளது.குறித்த ஒன்பது வயது சிறுவனின் தலையில் எடுக்கப்பட்ட ஸ்கானில், அவனது மூளையில் துப்பாக்கிக்குண்டு ஒன்று பதிந்திருந்தது. அதன் பிறகு அவனது தலையை பரிசோதித்தபோது, 
ஒரு சிறு காயம் இருப்பதைக் கவனித்துள்ளார்கள் மருத்துவர்கள்.கொண்டாட்டங்களின்போது துப்பாக்கியால் சுடும்வழக்கம் சில நாடுகளில் இருப்பதால், அப்படி
 சுடும்போது அவன் தலையில் குண்டு பாய்ந்திருக்கலாம் என கருதும் பொலிசார் விசாரணையைத் தொடக்கியுள்ளார்கள். குண்டு மூளையில் பாய்ந்த நிலையிலும், அந்த சிறுவன் 
மருத்துவமனைக்கு கொண்டு வரப்படும்போது சுயநினைவுடனேயே இருந்துள்ளான்.அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் அந்த குண்டை அகற்றிய நிலையில், தற்போது அந்த 
சிறுவன் நன்றாக இருக்கிறான். இதே குண்டு வேறொரு கோணத்தில் தலையில் பாய்ந்திருந்தால், மூளைக்கு அதிக சேதத்தை ஏற்படுத்தியிருக்கும், பல நரம்பு மண்டல பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கும் என்று கூறும் மருத்துவர்கள், அந்த சிறுவன் பிழைத்தது அதிர்ஷ்டம்தான் 
என்கிறார்கள்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>>>


செவ்வாய், 4 ஆகஸ்ட், 2020

மெகசின் சிறைக்குள் ஹெரோயின் கடத்திய பூனை தப்பியோடவில்லை


மெகசின் சிறைக்குள் ஹெரோயின், சிம்கள் மற்றும் மெமரி காட் என்பவற்றை கொண்டு வந்த பூனை தப்பியோடியதாக,03-08.20. நேற்று பல்வேறு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இந்நிலையில் குறித்த ஹெரோயின் கடத்தல் பூனை தப்பியோடவில்லை எனறும் சிறை வளாகத்துக்குள் தான் சுதந்திரமாக சுற்றி திரிகிறது எனவும் பூனையை அனுப்பியோரை கண்டறிய விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றும் சிறைச்சாலை அதிகாரிகள் 
தெரிவித்துள்ளனர்.
நிலாவரை.கொம் செய்திகள் >>>>>