நிலாவரை .கொம்

siruppiddy

திங்கள், 26 டிசம்பர், 2016

தமிழர் ஒருவர்பாரிஸ் நகரில் கத்திக்குத்து பலி!

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் தமிழர் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். தமிழகம் கும்பகோணத்தை சேர்ந்த 26 வயதான மணிமாறன் என்பவரே இவ்வாறு படுகொலை 
செய்யப்பட்டுள்ளார்.
பிரான்ஸ் ஊடகங்களை மேற்கோள்காட்டி வெளியாகியுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது நண்பரை பார்ப்பதற்காக பாரிஸ் வாகிரார்ட் மெட்ரோ புகையிரத நிலையத்தை வந்தடைந்த மணிமாறனை, இனந்தெரியாத நபர்கள் கொடூரமான முறையில் கத்தியால்
 குத்தியுள்ளனர்.
எனினும், படுகாயமடைந்த மணிமாறன் தனது நண்பர் வீட்டை நோக்கி ஓடியுள்ளார். இந்நிலையில், வீட்டு அழைப்பு மணியை அழுத்திய மணிமாறன் அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், வீட்டு கதவை திறந்து பார்த்த நண்பர், மணிமாறன் உயிரிழந்து கிடப்பதை கண்டு அந்நாட்டு பொலிஸாருக்கு தகவல் 
வழங்கியுள்ளார்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் வழக்கு தாக்கல் செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும்
 தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



திங்கள், 19 டிசம்பர், 2016

அன்பாந்த பிரான்ஸ் வாழும் தமிழ் மக்களுக்கு அவசர வேண்டுகோள்!!!.

அவசரகால நிலை பிரான்சில் மேலும் 7 மாதங்கள் நீடிப்பு,பிரான்சில் நெருக்கடி நிலையை ஜூலை மாதம் 15-ந் தேதி வரை மேலும் 7 மாதங்களுக்கு நீடிக்க வகை செய்து, அந்த நாட்டின் பாராளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப் பட்டுள்ளது . அதன்பேரில் நேற்று ஓட்டெடுப்பு
 நடத்தப்பட்டது.
இந்த ஓட்டெடுப்பில், நெருக்கடி நிலையை மேலும் 7 மாதங்கள் நீட்டிப்பதற்கு 288 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்ததால், தீர்மானம் நிறைவேறியது. எதிராக 32 பேர் மட்டுமே வாக்களித்தனர்.
வரும் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் அந்த நாட்டின் அதிபர் தேர்தலும், பாராளுமன்ற தேர்தலும் நடக்க உள்ள நிலையில், பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தும் அச்சுறுத்துதல்கள் இருப்பதாக பிரான்ஸ் அரசு கருதித்தான், நெருக்கடி நிலையை மேலும் 7 மாதங்கள் நீடிக்க முடிவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அவசரகால நிலை நீடிப்பினால் போலீசார் சந்தேகிக்கும் இடங்களில் உத்தியோகப் பற்றற்ற ஊரடங்கு அமுல் செய்து சுற்றி வளைப்புத் தேடுதல் நடத்தலாம் சந்தேகப்படும் யாரையும் கைது செய்யலாம்,
பிரான்ஸ் நாட்டில் வாழும் ஈழத்தமிழர்கள் இவ்விடயத்தில் முன் ஜாக்கிரதையுடன் நடந்து கொள்ளவும் தேவையற்ற பயணங்களைக் குறைத்துக் கொள்ளுங்கள், ஒரு குறிப்பிட்ட பகுதி பொலிசாரின் தீவிர கண்காணிப்புப் பகுதியாக உள்ளது அதில் பாரிஸ் நகரம் முன்னுரிமை கொடுக்கப் பட்டுள்ளது,
பாரிஸ் நகரத்தின் லாச்சப்பல் பகுய்தி பல நாடுகளைச் சேர்ந்தோர் நடமாடும் பகுதி இந்தப் பகுதியில் பாரிய குற்றச் செயல்கள் பதிவாகி உள்ளதுடன் தீவிர கண்காணிப்பிலும் உள்ளனர் அங்கு பரவலாக ஈழத் தமிழ் மக்கள் வாழும் பகுதியாகும்.
அப்பகுதிக்கு தேவையற்ற பயணங்களைக் குறைத்துக் கொள்வதுடன் அனாவசியப் பிரச்சனைகளில் இருந்தும் தமிழ் மக்கள் உங்களைக் காப்பாற்றிக் கொள்ளவும் உங்களுக்கான விசா நடைமுறை நீண்டகாலப் போராட்டத்தில் சட்டபூர்வமாக பெறப்பட்டுள்ளது எனவே தயவுடன் தமிழ் மக்கள் எந்த வித குற்றச் செயலிலும் சம்பந்தப் படாமல் இருக்குமாறு 
வேண்டுகிறோம்,
வரும் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் அந்த நாட்டின் அதிபர் தேர்தலும், பாராளுமன்ற தேர்தலும் நடக்க உள்ள நிலையில்,அதுவரை இந்த அவசரகால நிலை நீடிக்கப் பட்டுள்ளது இந்த காலகட்டத்தில் பெரும்பாலும் நீங்கள் சரிய குற்றத்தில் சம்பந்தப் பட்டாலும் அது உங்களது எதிர் காலத்துக்கு கேள்விக்குறியாக அமைந்துவிடும்.
முடிந்தவரை அனாவசியமாக ஓன்று கூடுதல்,சிறு கலவரங்கள்.சிறு ஆயுதப் பிரயோகம்.அச்சுறுத்தல் கற்பழிப்பு ஆட்கடத்தல்களில் பங்கு கொள்ளல்,மதுபான நிலையங்களில் ஒன்றுக்கு மேற்பட்டோர் குழப்பம் விளைவித்தல் என்பன சாதாரண நேரத்தில் நடப்பதைவிட அவசர கால நிலையில் நடந்தால் 1/3 என்ற வீதத்தில் குற்றவியலில் நீங்களும் உள்ளடக்கப்படுவீர்கள்.
அப்படி உள்ளடக்கப் படும் பொது சில நேரங்களில் உங்களது பிணை மனு கூட நிராகரிக்கப் பட்டு நீண்டகாலம் சிறையில் இருக்க நேரிடும் நாடுகடத்தப் பாடவும் கூடும் விசாவுக்கு விண்ணப்பித்தோர்,அகதியாகப் பதிந்தோர்.பதிய இருப்போர்கள், இவ்விடயத்தை கவனிக்கவும்00:49 19.12.2016
முடித்தவரை உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>






புதன், 14 டிசம்பர், 2016

பயணிகளுக்கு தொல்லை கொடுத்த பெண் விமானத்தில்இருந்து வெளியேற்றப்படார்?

அமெரிக்காவில் தனியாருக்கு சொந்தமான விமானம் ஒன்றில் பெண் பயணி ஒருவரை அங்குள்ள பொலிஸ்  இழுத்து வெளியேற்றியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை 
ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் டெட்ராய்ட் பெருநகர விமான நிலையத்தில் குறித்த அதிர்ச்சியளிக்கும் சம்பவம் நடந்துள்ளது. இங்கு புறப்பட தயாராக நின்ற டெல்டா விமானத்தில் பெண்மணி ஒருவர் திடீரென்று புகுந்து தமது இருக்கைக்கு நேர் மேலே இருக்கும் பொருட்கள் வைக்கும் பகுதியில் தனியாக அதிக இடம் வேண்டும் என கேட்டு முதலில் பிரச்னை 
செய்துள்ளார்.
இதனால் அங்கே பரபரப்பு ஏற்பட்டது. குறித்த பெண்மணி விடாப்பிடியாக தமக்கு இடம் ஒதுக்க வேண்டும் என்று வற்புறுத்தியே வந்துள்ளார். இதனிடையே அந்த பெண்மணி உரிய அனுமதி பெறாமல் விமானத்தில் பயணிக்க முயன்றுள்ளதாகவும் அவரது பெட்டி உள்ளிட்ட பொருட்களை சோதனைக்கு உட்படுத்தவில்லை எனவும் 
தெரிய வந்தது.
இதனையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்து குறித்த பெண்மணியுடன் விவதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அவர் அதற்கு ஒப்புக்கொள்ள மறுத்துள்ளார். மேலும் விமானத்தில் இருந்து வெளியேறவும் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனிடையே குறித்த டெல்டா நிறுவனம் பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கவும் அவர்கள் வந்து அந்த பெண்மணியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
ஆனால் அவர் விமானத்தை விட்டு வெளியேற மறுத்து அடம்பிடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து பொலிசார் அவரை வலுக்கட்டாயமாக இழுத்து விமானத்தில் இருந்து வெளியெற்றியுள்ளனர்.
தொடர்ந்து சக பயணிகளுக்கு தொல்லை தந்த குற்றத்திற்காகவும் விமான நிலைய சட்டத்திட்டங்களுக்கு எதிராக செயல்பட்டதாகவும் கூறி கைது செய்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



வெள்ளி, 9 டிசம்பர், 2016

இது மனிதர்களை தின்னும் கொடூர மிருகம்: ஏலியனா ? அச்சத்தில் மக்கள்

கர்நாடகாவில் விலங்குகள் மற்றும் மனிதர்களை தின்னும் கொடூர விலங்கு ஒன்று பிடிபட்டுள்ளதாக கூறி வீடியோ ஒன்று தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக
 பரவி வருகிறது.
கர்நாடகாவின் எல்லைப் பகுதியில் கடந்த 30 ஆம் திகதி விசித்திரமான மிருகம் ஒன்று பிடிபட்டுள்ளது. இதை சமூகவலைத்தளங்களில் இது ஒரு கொடூரமான விலங்கு என்றும் விலங்குகள் மற்றும் மனிதர்களை உண்ணும் ஏலியன் என குறிப்பிட்டுள்ளனர்.
இதனால் கர்நாடகாவின் எல்லைப் பகுதி வழியே செல்பவர்கள் பார்த்து கவனமாக செல்லுங்கள் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோவும் தற்போது இணையத்தில் உலா வரத் தொடங்கியுள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

ஞாயிறு, 4 டிசம்பர், 2016

அகதிகளுக்கு ஆதரவாக பிரித்தானியவில் மாபெரும் ஆர்ப்பாட்டம்!

பிரித்தானியாவிலுள்ள பெட்போர்ட் என்னும் இடத்தில் உள்ள யார்ல் வூட் தடுப்பு முகாமை மூடவேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து இன்று (03/12/16) யார்ல் வூட் தடுப்பு முகாமை சுற்றி மக்கள் மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். Movement for justice என்னும் அமைப்பு ஒழுங்கு செய்திருந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ் சொலிடாரிட்டி, நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் போன்ற தமிழர் அமைப்புகளும் தமது ஆதரவை வழங்கியது.
அகதிகளின் பிரச்சனைகளுக்கு எதிராக, அகதிகள் தொடர்பான பிரித்தானியா அரசின் கடும் போக்குவாதத்திற்கு எதிராக அகதிகளே போராட வேண்டும் என்ற தொனிப் பொருளில் இயங்கும் “அகதிகளுக்கான உரிமைகள் அமைப்பு” இந்த போராட்டத்தை முன்னின்று நடத்தியதை 
காணக்கூடியதாகவிருந்தது.
மேலும் இன,மத,மொழி வேற்றுமை பாராமல் பல்லின மக்களும் இதில் கலந்து கொண்டமை சிறப்பானதொரு
 அம்சமாகும்
தடுப்பு முகாம்களை மூடு, அகதிகளும் மனிதர்களே, அகதிகளை விடுதலை செய், அகதிகளுக்கான உரிமைகளை வழங்கு, அகதிகளை திருப்பி அனுப்புவதை நிறுத்து, இனவெறியை நிறுத்து , நிறவெறியை நிறுத்து போன்ற கோஷங்கள் பிரித்தானிய அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டக்காரர்களால் முன்வைக்கப்பட்டன. கடந்த மாதம் அகதிகளுக்ககான உரிமைகள் அமைப்பு லண்டனில் அகதிகளின் உரிமைகளை வலியுறுத்தி மாபெரும் ஊர்வலம் ஒன்றையும் நடாத்தியது இங்கு 
குறிப்பிடத்தக்கது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



கிராம மக்களுக்கு ராணுவ வீரர் அளித்த பரிசு என்ன தெரியுமா?

ஜேர்மன் நாட்டை சேர்ந்த ராணுவ வீரர் ஒருவரின் உயிரை காப்பாற்றிய கிராம மக்களுக்கு அவரது இறுதி நாளில் செய்துள்ள நன்றிக்கடன் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
இரண்டாம் உலகப்போர் நடைபெற்று வந்த நேரத்தில் ஜேர்மனியை சேர்ந்த Heinrich Steinmeyer(அப்போதைய வயது 19) என்ற ராணுவ வீரர் பிரான்ஸ் நாட்டில் கைது செய்யப்பட்டார்.
பின்னர் ஸ்கோட்லாந்து நாட்டில் உள்ள Comrie என்ற சிறிய கிராமத்தில் கைதியாக அடைக்கப்பட்டார். இக்கிராமத்தில் உள்ள Cultybraggan முகாமில் அடைக்கப்பட்ட வீரர் பல்வேறு இன்னல்களுக்கு
 உள்ளாகியுள்ளார்.
இந்நிலையில், வீரரின் நிலையைக் கண்ட அக்கிராமத்து மக்கள் அவருக்கு பல்வேறு வகையில் உதவி செய்ததுடன் அவருடன் அன்பாக பழகி வந்துள்ளனர்.
கிராமத்து மக்களின் அன்பைக் கண்டு புத்துணர்ச்சி பெற்ற வீரர் தனது துன்பத்திலிருந்து படிப்படியாக முன்னேறியுள்ளார்.
சில ஆண்டுகளுக்கு பின்னர் முகாமில் இருந்து விடுதலை செய்யப்பட்ட வீரர் கிராம மக்களுக்கு நன்றி தெரிவித்துவிட்டு ஜேர்மனிக்கு
 திரும்பியுள்ளார்.
இந்நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தன்னுடைய 90வது வயதில் அவர் உயிரிழந்துள்ளார்.
ஆனால், உயிரிழப்பதற்கு முன்னதாக ஒரு பத்திரம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு உயிரிழந்துள்ளார்.
அதாவது, தனது சொத்துக்களில் பாதியை (சுமார் 8 கோடி இலங்கை ரூபாய்) தன்னுடைய உயிரை காப்பாற்றிய Comrie கிராம மக்களுக்கு வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தன்னுடைய உடலை எரித்த பின்னர் அதன் ஒரு பாதியை அக்கிராமத்தில் புதைக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ராணுவ வீரரின் விருப்பப்படி அத்தொகை கிராமத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. தற்போது இத்தொகை ஒவ்வொரு குடும்பத்தினரின் வளர்ச்சிக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
60 ஆண்டுகளுக்கு முன்னர் செய்த உதவியை தனது வாழ்நாள் முழுவதும் மறக்காமல் நன்றிக்கடனாக முன்னாள் ராணுவ வீரர் செய்துள்ள இச்செயல் கிராம மக்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



திங்கள், 28 நவம்பர், 2016

கார் ஏற்றி பொலிஸ்சாரை கொன்றுவிட்டு தப்பிய குற்றவாளி கைது !

பிரான்ஸ் நாட்டில் பொலிஸ் அதிகாரி ஒருவரின் மீது கார் ஏற்றி கொன்றுவிட்டு குற்றவாளி ஒருவர் தப்பிக்க முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சனிக்கிழமை நள்ளிரவு நேரத்தில் தான் இந்த பயங்கர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மேற்கு பிரான்ஸில் உள்ள Tarascon-sur-Ariege நகரில் பொலிசார் வாகன பரிசோதனையில் ஈடுப்பட்டு வந்துள்ளனர்.

அப்போது, தூரத்தில் கார் ஒன்று வேகமாக வந்துள்ளது. காரை இடைமறித்து நிறுத்த பொலிசார் முயன்றுள்ளனர்.

ஆனால், வேகமாக வந்த கார் நிற்காமல் சென்றுள்ளது. எனினும், 55 வயதான பொலிஸ் அதிகாரி ஒருவர் காரை தடுக்க முயன்றபோது அவரை இடித்து தள்ளி விட்டு கார் பறந்துள்ளது.

இச்சம்பவத்தில் பொலிஸ் அதிகாரி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.

பணியில் இருந்த மற்றொரு பொலிஸ் அதிகாரி தனது காரை எடுத்துகொண்டு பின் தொடர்ந்து துப்பாக்கி முனையில் நபரை கைது செய்துள்ளார்.

மேலும், பொலிசார் விசாரணை நடத்தியதில் கைது செய்யப்பட்டவர் ஏற்கனவே பொலிசாரால் தண்டிக்கப்பட்ட குற்றவாளி என தெரியவந்துள்ளது.

இச்சம்பவத்தில் பலியான பொலிஸ் அதிகாரிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நள்ளிரவு நடந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள உள்துறை அமைச்சர் குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதி துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

சனி, 26 நவம்பர், 2016

தற்போது லண்டனில் தொழில் புரிபவர்களுக்கு வந்தது அதிஸ்ரம?


பிரித்தானியாவில் பணியாற்றும் ஊழியர்களுக்கு அடிப்படைய சம்பளத்தை உயர்த்துவது தொடர்பில் அந்நாட்டு அரசாங்கம் ஆலோசித்து வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல்
 வெளியிட்டுள்ளன.
இதனடிப்படையில் 25 வயதுக்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கு ஒரு மணிநேரத்துக்கான குறைந்தபட்ச சம்பளம் 7.20 பவுண்டுகளாகவும், 21 முதல் 24 வயதுக்குட்பட்டோருக்கு 6.95 பவுண்டுகளாகவும், 18 முதல் 20 வயதுக்குட்பட்டோருக்கு 5.55 பவுண்டுகளாகவும்
 உள்ளது.
இந்த குறைந்தபட்ச சம்பள உயர்த்தி நிர்ணயிக்க வேண்டும் என்று நீண்டகாலமாக இங்குள்ள தொழிற்சங்கங்கள் கோரிக்கைகளை முன்வைத்து வந்தனர். இதன் அடிப்படையில் அந்நாட்டின் முன்னாள் நிதியமைச்சர் ஜார்ஜ் ஆஸ்போர்ன் நடவடிக்கையின் பேரில் 25 வயதுக்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கு ஒரு மணிநேரத்துக்கான புதிய குறைந்தபட்ச சம்பள நிர்ணயிப்பது தொடர்பாக அரசு
 ஆலோசித்தது.
இதன்விளைவாக, 25 வயதுக்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கு ஒரு மணிநேரத்துக்கான குறைந்தபட்ச சம்பளமாக 7.20 பவுண்டுகளில் இருந்து 7.50 பவுண்டுகளாக உயர்த்த பிரித்தானிய அரசாங்கம் 
தீர்மானித்துள்ளது.
இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை பிரித்தானிய நிதியமைச்சர் பிலிப் ஹாமன்ட் இன்று பாராளுமன்றத்தில் வெளியிடுகிறார்.
எதிவரும் 2020 ஆண்டுக்குள் மறுசீரமைக்கப்பட்ட சம்பளம் 9 பவுண்டுகளாக உயர்த்தப்படலாம் என இங்குள்ள தொழிலாளர் வர்க்கத்தினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்

இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


வியாழன், 24 நவம்பர், 2016

தனது பூனை இறந்ததற்கு 2½ கோடி ரூபா நஷ்டஈடு கேட்கும் பெண்`?

பாகிஸ்தானை சேர்ந்த பெண் வழக்கறிஞர் சுந்தஸ்கோரின் வளர்ப்பு பூனை இறந்தமைக்கு நஷ்ட ஈடாக ரூபா 2.5 கோடி கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
குறித்த வழக்கறிஞர் ஒரு பூனை வளர்த்து வந்தார். அந்த பூனைக்கு உடல் நலம் சரியில்லாமல் இருந்தது.
அங்குள்ள கால்நடை வைத்தியரிடம் காண்பித்தார். அவர் சிகிச்சை அளித்தும் நோய் குணமாகவில்லை. நோய் மேலும் அதிகரித்தது.
இதனால் பூனையை வேறு வைத்தியரிடம் கொண்டு சென்றார். அதற்குள் பூனை இறந்து விட்டது. 
ஏற்கனவே சிகிச்சை அளித்த வைத்தியர் தவறுதலாக சிகிச்சை அளித்ததால் பூனை இறந்து விட்டதாக கூறி அவர் மீது ரூ. 2½ கோடி நஷ்டஈடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



வியாழன், 17 நவம்பர், 2016

செத்த எலி ஆடைக்குள் ஆடை விற்பனை நிலையத்துக்கு எதிராக யுவதி வழக்கு!.

அமெ­ரிக்­காவைச் சேர்ந்த யுவ­தி­யொ­ருவர் தான் வாங்­கிய ஆடையில் மடித்து தைத்த பகு­திக்குள் இறந்த எலி­யொன்று கிடந்­ததைக் கண்டு அதிர்ச்­சி­ய­டைந்­துடன், வழக்கும் தொடுத்­துள்ளார்.
நியூயோர்க்கைச் சேர்ந்த கெய்லி பிசெல் எனும் 24 வய­தான இந்த யுவதி, “ஸாரா” எனும் ஸ்பானிய ஆடை விற்­பனை நிறு­வ­ன­மொன்­றி­ட­மி­ருந்து மேற்­படி புதிய ஆடையை வாங்­கி­ய­தாகத் தெரி­வித்­துள்ளார்.
40 அமெ­ரிக்க டொலர்­க­ளுக்கு (சுமார் 6000 ரூபா) வாங்­கப்­பட்ட இந்த ஆடையை சில வாரங்­களின் பின்னர் தனது வேலைத்­த­ளத்­துக்கு அணிந்து சென்­ற­போது அதிக துர்­நாற்றம் ஏற்­பட்­டதாம்.
தனது காலில் ஏதோ உராய்­வதை உணர்ந்த கெய்லி பிசெல், மேற்­படி ஆடையை ஆராய்ந்­த­போது, ஆடையில் மடித்து தைத்த பகு­திக்கு வெளியே எலி­யொன்றின் கால் நீட்­டிக்­கொண்­டி­ருப்­பதை அவ­தா­னித்­தாராம்.
“தைய­லி­டப்­பட்ட பகு­தியை தொட்­ட­போது, எலி­யொன்றின் கால் தென்­பட்­டது. அப்­போது அதிர்ச்­சி­யினால் நான் உறைந்து போய்­விட்டேன்” என கெய்லி பிசெல் தெரி­வித்­துள்ளார்.
இதை­ய­டுத்து, மேற்­படி நிறு­வ­னத்­திடம் நஷ்ட ஈடு கோரி கெய்லி பிசெல் வழக்குத் தொடுத்­துள்ளார். இது தொடர்­பாக ஸாரா யூ.எஸ்.ஏ. நிறு­வ­னத்தின் பேச்­சாளர் ஒருவர் கூறு­கையில், “இந்த விவ­காரம் குறித்து நிறு­வனம் அறிந்­தி­ருக்­கி­றது.
இது தொடர்­பாக விசா­ரணை நடத்­தப்­ப­டு­கி­றது. ஸாரா யூ.எஸ்.ஏ. நிறு­வ­ன­மா­னது இறுக்­க­மான சுகாதார மற்றும் பாதுகாப்பு தர நியமங்களை பேணுவதற்கு உறுதி பூண்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

புதன், 9 நவம்பர், 2016

இரு மடங்காக அமெரிக்க பொருளாதாரத்தை உயர்த்துவேன்!

அமெரிக்க பொருளாதாரத்தை இரு மடங்காக உயர்த்த திட்டமிட்டுள்ளதாக, புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப், தனது ஆதரவாளர்களிடையே உரையாற்றினார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் அமோக வெற்றி பெற்று நாட்டின் 45-வது அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து அவரது ஆதரவாளர்கள் உற்சாகமாக கொண்டாடி
 வருகின்றனர்.
இந்த வெற்றியை அடுத்து நியூயார்க்கில் தனது ஆதரவாளர்களிடையே டிரம்ப் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
அமெரிக்காவின் அதிபராக என்னை தேர்வு செய்த மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், எனது வளர்ச்சிக்குக் காரணமான பெற்றோர் மற்றும் குடும்பத்தினருக்கும் நன்றி தெரிவிக்கிறேன். நாட்டிற்கு நீண்டகாலம் சேவையாற்றிய ஹிலாரிக்கும் என் நன்றிகளை
 தெரிவிக்கிறேன்.
8 மாத பயணத்தின் இறுதியாக மிகச்சிறந்த வெற்றியை நாம் பெற்றிருக்கிறோம். ஹிலாரியும் வெற்றி பெறுவதற்காக கடுமையாகப் போராடினார். இனி வேறுபாடுகளை கடந்து ஒன்றுபட்டு செயல்படவேண்டும். ஒற்றுமையாக செயல்பட்டால் நமது கனவுகளை
 செயல்படுத்தலாம்.
நான் அனைத்து அமெரிக்கர்களுக்கும் அதிபராக பணியாற்றுவேன். ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களுக்கு கூடுதல் வசதிகள் செய்து கொடுக்கப்படும். அமெரிக்க பொருளாதாரத்தை இரு மடங்காக உயர்த்த திட்டம் உள்ளது. அமெரிக்காவை நண்பனாக நினைக்கும், அமெரிக்காவுடன் நட்பு கொள்ள விரும்பும் நாடுகளுடன் நமது உறவை வலுப்படுத்துவோம். இவ்வாறு அவர் பேசினார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



செவ்வாய், 8 நவம்பர், 2016

அடுத்த அமெரிக்காவின் அதிபராக டொனால் டிரம்ப் தேர்வு!

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்டு டிரம்ப் அதிக வாக்குகளுடன் வெற்றபெற்றுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.

குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால் டிரம்ப் 276 அதிபர் மன்ற வாக்குகளைப் பெற்றுள்ளார்.

ஜனநாயக் கட்சியைச் சேர்ந்த ஹிலரி கிளின்டனுக்கு 218 அதிபர் மன்ற வாக்குகள் கிடைத்துள்ளன.
தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஹிலரி கிளின்டனை விட 58 ஆசனங்களை மேலதிகமாக பெற்று டொனால்ட் டிரம்ப் வெற்றி
 பெற்றுள்ளார்.
அமெரிக்க அதிபராக பதவி வகிக்கும் ஒபாமாவின் பதவிக்காலம் எதிர்வரும் ஜனவரியில் முடிகிறது. அதை தொடர்ந்து அந்நாட்டின் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று 
இடம்பெற்றது.
அதில் குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்டு டிரம்ப் (70), ஜனநாயக கட்சி வேட்பாளராக ஹிலாரி கிளிண்டன் (69) ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவியது.
அதற்கமைய தற்போது வரையில் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால் டிரம்ப் 276 அதிபர் மன்ற வாக்குகளைப் பெற்று வெற்றிப்
 பெற்றுள்ளார்.
மேலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜனநாயக் கட்சியைச் சேர்ந்த ஹிலரி கிளின்டன் 218 அதிபர் மன்ற வாக்குகள் பெற்று 
தோல்வியடைந்துள்ளார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



ஞாயிறு, 6 நவம்பர், 2016

எச்சரிக்கை பிரித்தானியா நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது ?

பனியின் தாக்கம் இரவு நேரங்களில் உச்சத்தை அடையும் என்பதால் பிரித்தானிய நாட்டு மக்கள் தங்கள் விழா கொண்டாட்டத்தை சீக்கிரம் முடித்து கொள்ளுதல் நலம் என அந்த நாட்டின் வானிலை மையம் மக்களை அறிவுறுத்தியுள்ளது.
பிரித்தானியா நாட்டில் பாரம்பரியமாக BoneFire Night என்னும் வானவேடிக்கை நிகழ்ச்சி கோலாகலமாக நவம்பர் மாதங்களின் இரவு நேரங்களில் நடைபெறுவது வழக்கமாகும். இதில் ஏராளமான மக்கள் பங்கேற்று அந்த நிகழ்ச்சிகளை சிறப்பிப்பார்கள்.
இந்த நிலையில் அங்கு பனியின் தாக்கம் உச்சத்தை அடைந்துள்ளது. இது குறித்து வானிலை மையம் வெளிட்டுள்ள செய்தியில், காலை நேரங்களில் வெயில் சுட்டெரிக்கும், பின்னர் மாலை நேரம் ஆக ஆக குளிரின் தாக்கம் அதிகம் அடைந்து பின்னர் -5 டிகிரி செல்சியஸிலிருந்து -3 டிகிரி செல்சியஸாக குறைய கூட வாய்ப்புள்ளது.
இப்படி ஆவதால் பனி பொழிந்து மக்கள் இரவு நேரங்களில் பெரும் அவதிக்குள்ளாக நேரிடும். இதனால் மக்கள் BoneFire நிகழ்ச்சியை நடு இரவு வரை கொண்டாடுவது சரியானதாக இருக்காது என வானிலை மையத்தின் செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதை பற்றி அங்கு வாழும் ஒருவர் கூறுகையில், மக்கள் கொண்டாட்டமான மனநிலையில் தற்போது இருக்கிறார்கள். ஆனால் வானிலை மையத்தின் எச்சரிக்கையையும் அவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>





சனி, 29 அக்டோபர், 2016

அனைவருக்கும் தித்திக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

மக்களின் வாழ்வில் இன்ப ஒளியை பிரகாசிக்க செய்ய வேண்டும் என இறைவனை பிரார்த்தித்து எனது அன்பு இணைய உலக தமிழ் உள்ளங்களுக்கும் அன்பர்கள் நண்பர்கள்அ
னை வர்க்கும் இந்த நவற்கிரி. நவக்கிரி .நிலாவரை இணையங்களின் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.
தீபாவளி பண்டிகை மாநிலத்துக்கு மாநிலம் கொண்டாட்டத்தில் வித்தியாசம்
தீபாவளி பலதேச மக்களாலும் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை யாகும். ஆசியாவிலேயே மிக அதிகமான மக்கள் கொண்டாடும் ஒரே பண்டிகை தீபாவளிப் பண்டிகை தான். மக்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் பட்டாசுகளைக் வெடித்து 
பரவசம் அடைவர்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


ஞாயிறு, 23 அக்டோபர், 2016

ஹெலிகப்டர் தரையில் விழுந்து நொறுங்கிய 19 பேர் பலியான பரிதாபம்!.

ரஷ்யா நாட்டில் ராணுவ ஹெலிகொப்டர் ஒன்று தரையில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 19 பேர் பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சைபீரியாவில் இருந்து நேற்று Mi-8 என்ற ராணுவ ஹெலிகொப்டர் ஒன்று 22 பேருடன்
 புறப்பட்டுள்ளது.
சில மணி நேரப்பயணத்திற்கு பின்னர் Yamal Peninsula என்ற பகுதியில் தரையிறங்க முயன்றபோது அந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது. ஹெலிபேட் அமைந்துள்ள இடம் சரியாக தெரியாததால் ஹெலிகொப்டர் தாறுமாறாக சுழன்றுள்ளது.
பின்னர், கண் இமைக்கும் நேரத்தில் கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகொப்டர் தரையில் வேகமாக மோதி நொறுங்கியுள்ளது. ஹெலிகொப்டரில் தீவிபத்து ஏற்படவில்லை. எனினும், இவ்விபத்தில் சிக்கிய 3 வீரர்கள் உள்பட 19 பேர் உடல் சிதைந்து பலியாகியுள்ளனர். எஞ்சிய 16 பேர் எண்ணெய் நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் என
 கூறப்படுகிறது.
Alexey Veremev (42) என்னும் பயணி ஒரு கால் ஹெலிகொப்டரில் மாட்டிய நிலையில், வலியால் துடித்து கொண்டே உதவி உதவி என கத்தியுள்ளார். சில மணி நேரம் கழித்து அங்கு வந்த மீட்புபணி குழுவினர் அங்குள்ள சடலங்களை மீட்டனர்.
காயத்துடன் அங்கு போராடி கொண்டிருந்த Alexey உட்பட மூன்று பேரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்திற்கான உண்மையான காரணம் தெரியவராத நிலையில், இரண்டு கருப்பு பெட்டிகளை கைப்பற்றியுள்ள பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



புதன், 19 அக்டோபர், 2016

இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞர் ஒருவர் பிரான்சில் படுகொலை`

பிரான்ஸ் நாட்டில் வைத்து இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் 
தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் கடந்த 16ஆம் திகதி பிரான்சில் உள்ள ஒபேவில்லியேவில் (Aubervilliers – Seine-Saint-Denis) எனும் இடத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 16ஆம் திகதி அதிகாலை இடம்பெற்ற இந்த கொலை சம்பவத்தில் 30 வயது மதிக்கத்தக்க இலங்கை தமிழ் இளைஞர் ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், குறித்த கொலை சம்பவம் தொடர்பில் நான்கு இலங்கை இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு பொலிஸார் கூறியுள்ளனர்.
குறித்த கொலைக்கான முழுமையான விபரங்கள் இது வரையிலும் தெரியவில்லை. ஆனால் ஒரு மோதலின் முடிவிலேயே, இந்தப் படுகொலை நடந்துள்ளதாக பொலிஸார் சந்தேகம்
 வெளியிட்டுள்ளனர்.
மோதல்கள் இடம்பெற்றமைக்கான அடையாளங்கள் கொலை இடம்பெற்ற வீட்டில் காணப்படுவதாக குறிப்பிட்டுள்ள பொலிஸார், பொபினி நீதிமன்றத்தின் பணிப்பில், கொலைக்கான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



திங்கள், 17 அக்டோபர், 2016

தமிழ் மொழியை அவுஸ்திரேலியாவில் ஒரு பாடமாக இணைத்துக் கொள்ள கோரிக்கை!

அவுஸ்திரேலியாவின் தேசிய கல்வித் திட்டத்தில் தமிழ் மொழியை ஒரு பாடமாக இணைத்துக் கொள்ள வேண்டும் என Prospect தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஹூ மெக்டெர்மாட் (Hugh Mcdermott) கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பான பிரேரணையை நியூ சவுத் வெல்ஸ் பாராளுமன்றத்தில் நாளைய தினம் தாக்கல் செய்யவுள்ளார்.
தமிழ் கல்வியும், கலாசாரமும் இந்தியா மற்றும் அவுஸ்திரேயாவுக்கு மட்டுமன்றி தெற்காசிய நாடுகளுக்கு மிகவும் முக்கியம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உலகம் முழுவதும் 70 மில்லியன் மக்கள் தமிழ் மொழி பேசுகின்றனர். இதனை அவுஸ்திரேலிய அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும். தமிழ் மொழியை பாடப்புத்தகத்தில் சேர்த்துக் கொள்வதன் மூலம் அவுஸ்திரேலிய மாணவர்களும் பயன்பெற முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
இவ்வாறான நடவடிக்கை சமகால மாணவர்களுக்கு
 மட்டுமன்றி எதிர்கால சந்ததிக்கும் பயனுள்ளதாக அமையும் என ஹூ மெக்டெர்மாட் குறிப்பிட்டார்.
தமிழ் மொழியை தேசிய பாடமாக அங்கீகரிக்குமாறு நாளைய தினம் பாராளுமன்றத்தில் வைத்து கல்வி அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதன்மூலம் அவுஸ்திரேலிய மாணவர்கள் தமிழ் மொழியை ஒரு பாடமாக கற்க முடியும். தமிழை கற்றுக்கொடுக்கும் நிறுவனங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.
தமிழ் மொழியை பரப்பும் கலாசார நிறுவனங்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும் அவர் பாராளுமன்ற கோரிக்கை விடுக்கவுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இந்த விடயங்களை ஹூ மெக்டெர்மாட்
 குறிப்பிட்டார்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


நாட்டை விட்டு வெளியேற சம்மதிக்கும் அகதிகளுக்கு 2000 பவுண்ட்ஸ் நிதி!

நாட்டின் அகதிகள் நெருக்கடியை சமாளிக்க பிரதமர் தெரேசா மே தலைமையிலான அரசாங்கம், நாட்டை விட்டு வெளியேறும் அகதிகளுக்கு 2000 பவுண்ட்ஸ் வழங்குவதாக தகவல்கள் 
வெளியாகியுள்ளன
பிரித்தானியாவை விட்டு வெளியேற இணக்கம் தெரிவிக்கும் அனைத்து அகதிகளுக்கும் தலா 2000 பவுண்ட்ஸ் நிதி வழங்கப்படும் என்ற தகவலை அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளதாக, சனிக் கிழமை ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
இது தொடர்பில் உட்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், இவ்வாண்டின் ஜனவரி மாதம் முதல் அரசாங்கம் அமுல்படுத்தியுள்ள இந்த திட்டத்தின் கீழ் இதுவரையான காலப்பகுதிக்குள் 529 அகதிகள் நிதியுதவி பெற்று வந்தனர். இந்த நிதி அவர்கள் பாதுகாப்பான ஏதோவொரு இடத்திற்கு பாதுகாப்பாக செல்வதற்கோ அல்லது தொழில் வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்வதற்கோ அல்லது சொந்த நாட்டில் சுய தொழிலை ஆரம்பிப்பதற்கோ பயன்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த 2004 ஆம் ஆண்டில் இருந்து பிரித்தானியா அகதிகள் நெருக்கடியை எதிர்கொண்டு வருவதாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

வெள்ளி, 14 அக்டோபர், 2016

ஈழத்தமிழர் .அவுஸ்திரேலிய இராணுவ மேஜரான ர் !!!

அகதியாக அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்து சென்ற ஈழத் தமிழர் ஒருவர் அவுஸ்திரேலிய இராணுவத்தின் மேஜராகி ஈழத் தமிழினத்துக்கு பெருமை சேர்த்துள்ளார். 
அவுஸ்திரேலிய இராணுவத்தினால் இந்த வாரம் மேஜராகத் தரமுயர்த்தப்பட்டார்.
லவன் என அழைக்கப்படும் சேரலாதன் தர்மராஜா எனப்படும் குறித்த நபர் தனது 15ஆவது வயதில் தனது குடும்பத்தினருடன் அவுஸ்திரேலியாவில் புகலிடம் தேடிக்கொண்டார்.
மேஜர் தர்மராஜா என அழைக்கப்படும் லவன் தொடர்பாக அவரது நண்பர் கருத்துத் தெரிவிக்கையில்,
19 வருடங்களுக்கு முன்னர் நாம் இருவரும் அவுஸ்திரேலிய மண்ணில் கால் பதித்தோம். நாமிருவரும் கோம்புஸ் ஹவுஸ் பாடசாலையில் பத்து வருடங்கள் ஒன்றாகக் கல்வி கற்றோம்.
ஆனால், லவன் ஒருபோதுமே தனது பயணம் குறித்து எதுவுமே சொல்லவில்லை. இருப்பினும் அவனுடைய பயணம் எனக்கு நிறையவற்றைக் கற்றுக்கொடுத்துள்ளது. அதனை நான் உங்களுக்குத் தெரியப்படுத்த விரும்புகின்றேன்.
நாட்டுக்குள் அகதிகள் தொடர்பாக மக்கள் கேள்விகளை எழுப்பிக்கொண்டிருந்த நேரத்தில், அனைத்து இடங்களிலும் இனவாதம் தலைதூக்கியுள்ள நேரத்தில், வேகமாக மாறிவரும் உலகத்திலும், நிச்சயமற்ற எதிர்காலத்திலும் மக்கள் நம்பிக்கையை இழந்த 
நேரத்தில் இப்பொழுது
 மேஜர் தர்மராஜ் என அழைக்கப்படும் லவனிடமிருந்து நான் பல பாடங்களைக் கற்றுக்கொண்டேன். அவனுடைய எளிமையான வாழ்க்கைத் தத்துவம் என்னை அவனிடம் கட்டிப்போட்டுள்ளது
 எனத் தெரிவித்தார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


சனி, 1 அக்டோபர், 2016

தொழிலதிப‌ர் ஐெயாதரன் எம்பிஸ் முதலிடத்தில் உள்ளது!

யேர்மனி டோட்முண்ட நகரில் தொழிலதிப‌ர் ஐெயாதரன் எம்பிஸ் முதலிடத்தில் உள்ளது என தெரியுசெய்யுப்பட்டு விருதளிக்கப்பட்டுள்ளது கோணர் என்னும் பியர் நிறுவணத்தினரால் இரண்டாவது ஆண்டாகவும் தெரிவாகியுள்ளது தமிழர்களுக்கு பெருமைதரும் நற் 
செய்தியாகும் ,
புலத்தில் எம்மினம் சிறந்து எல்லாத்துறையிலும் விளங்கி வருகின்றனர் அந்த வகையில் தொழிலதிப‌ர் ஐெயாதரன் எம்பிஸ் முதலிடம் என்பது அவருக்கு மகிழ்வு மட்டுமல்ல அங்கே வந்த யேர்மனியர் மகிழ்வு கொண்டாது மட்டுமல்ல அவரின் நற்குணத்தைஅவர்தங்களுடன் பளகும் அன்பை கூறி நின்றார்கள்,
யேர்மனிய வானொலி 92.2 கூட இவர் கருத்தை உள்வாங்கியது இவருக்காணபரிசளிப்பை பாராட்டி நின்றது மட்டுமல்ல அங்கு வந்தவர்கள் இவரைப்பாராட்டி நின்றது தமிழனான எனக்கு மகிழ்வைத்தந்தது என்பது தான் உன்மை இவர் இந்த ஆண்டு பெற்ற பாராட்டு பரிசுபோல் அடுத்த அண்டும் பெறவேண்டும் என்று இவரின் கடைக்கு வருபவர்கள் பாராட்டியதும் மகிழ்வானது இவர் தனது கருத்தை கூறும்
 போது இது 
எனக்கு கிடைத்த மதிப்பளிப்பல்ல உங்கள் எல்லோருக்கும் கிடைத்த பரிசளிப்பு என்ற போது அங்கிருந்தவர்கள் கரங்கள் ஓங்கி ஒலித்தது இவர் சிறப்பு இன்னும் வளர்கவென வாழ்த்தி நிற்போம்,
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



சனி, 24 செப்டம்பர், 2016

உங்க வீட்டு பெண்கள் முகநுாலில் இருக்கிறார்களா .?கவனிங்கள்..!!!

உங்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு விட்டாலோ, திருமணம் நடந்து விட்டிருந்தாலோ அல்லது யாருடனாவது தொடர்பில் இருந்தாலோ, உங்களுடைய இணைய வழி செயல்பாடுகளை சற்றே கவனத்துடன் அணுக வேண்டிய தருணம் இதுவாகும்.
ஃபேஸ்புக்குகளில் எந்தவித அறிமுகமும் இல்லாமல் தொடங்கிய பல்வேறு உறவுகளும், விவாகரத்து அல்லது பிரிந்து வாழ்தல் போன்ற நிலைகளுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
நீங்கள் ஒரு மகிழ்ச்சியான இணையாக இருந்தாலோ மற்றும் காலம் முழுவதும் இவ்வாறே இணைந்திருக்க விரும்பினாலோ, இங்கே தரப்பட்டுள்ள குறிப்புகளை படித்து, பின்பற்ற வேண்டியது 
அவசியமாகிறது.
தங்களுடைய நண்பர்களுடைய பட்டியலை வைத்திருக்கும் உண்மையான கணக்கை ப்ரெஷ்சாகவும் மற்றும் சுத்தமாகவும் வைத்திருக்கும் பொருட்டாகவும், சில பேர் போலியான அடையாளங்களை கொண்டு கணக்குகளை தொடங்குவார்கள்.
இன்னும் சில பேர் தவறான காரணங்களுக்காக போலியான அடையாளம் கொண்ட கணக்குகளை பயன்படுத்துவார்கள்.
நீங்கள் இவ்வாறு போலி கணக்குகளை பயன்படுத்துபவர்களில் ஒருவராக இருந்தால், உடனடியாக நிறுத்திக் கொள்ளுங்கள்.
இந்த வகை கணக்கை அழித்து விட்டு, உங்களுடைய துணைவருக்கு உண்மையானவராக நடந்து கொள்ளுங்கள்.
இந்த வகையான போலி அடையாளங்களை உங்களுடைய துணைவர் கண்டறிய மாட்டார் என்று நினைப்பது, நெடுநாட்களுக்கு நீடித்து இருப்பதில்லை.
உங்களுடைய இனிமையான மண வாழ்க்கை அல்லது உறவை தொந்தரவுக்குள்ளாக்கும் சில நண்பர்களை முகநூல் நட்பிலிருந்து வெளியேற்றுவது நல்லது.
இந்த வகை நண்பர்களிடம் தொடர்பில் இருப்பதை விட, பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் கூட தொடர்பு கொள்ளாமல் 
இருப்பது நல்லது.
உங்களுடைய ஆண் நணர்பகளாக இருந்தவர்கள், இப்போதைய மண வாழ்க்கையை சூறையாடும் பகைவர்களாக மாறி விட
 வாய்ப்புகள் உண்டு.
இது ஒரு புத்திசாலித்தனமான அட்வைஸாக இருப்பதற்கு காரணம், பல கணவர்களும், மனைவிகளும் பிரிந்திருக்க காரணமாக இருப்பது வருத்தத்திற்குரிய இந்த வiயான நட்புகளே.
ஆரம்பத்தில், நண்பருடனான பிரிவு உங்களை வருத்தினாலும், பின்நாட்களில் திருமண உறபை பாதுகாத்ததற்காக நீங்கள் 
பெருமைப்படுவீர்கள்.
ஆரோக்கியமான உறவு என்பது துணைவருடன் நம்பிக்கை மற்றும் புரிந்துணர்வை பகிர்ந்து கொள்வது தான். நீங்கள் வெகு விரையில் திருமணம் புரிந்து கொள்வீர்கள் என்றால், உங்களுக்கான அறிவுரை அதீதமாக இரகசியம் காக்க தேவையில்லை என்பது தான்.
நீங்கள் அளவுக்கு அதிகமாக இரகசியம் காத்து நின்றால், உங்களுடைய துணைவரிடம் இருந்து எதையோ மறைக்க முயலுகிறீர்கள் என்பதை அவரும் உணர்ந்து கொள்வார். எனவே, உங்களுக்கு ‘ஓகே’ என்றால் ஃபேஸ்புக் பாஸ்வேர்டை கூட துணைவருடன் பகிர்ந்து 
கொள்ளுங்கள்.
அதே போல, சில படங்கள் மற்றும் போஸ்ட்-களையும் உங்களுடைய துணைவரிடம் இருந்து மறைப்பதால், தேவையில்லாத சந்தேகங்களை வரவழைத்து, உறவை கெடுத்துக் கொள்வீர்கள். எனவே
 கவனம் தேவை
உங்களுடைய உறவில் நிலையை அனைவருக்கும் தெரியும் வகையில் நீங்கள் காட்டினால், அதாவது உங்களுடைய துணைவருடன் நிச்சயிக்கப்பட்டு விட்டீர்கள் அல்லது திருமணம் செய்யப் போகிறீர்கள் என்பதை வெளிப்படையாக காட்டுவதால் நம்பிக்கை கூடுமே தவிர, வேறெந்த ஆபத்துகளும் வருவதில்லை.
எனவே, நாம் ஏன் இதனை மறைக்க வேண்டும்? நம்முடைய உறவை வெளிப்படுத்தி, பெருமை கொள்வோம்!
உங்களுக்கு நிச்சயிக்கப்பட்டிருப்பவருடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட படங்களை ஃபேஸ்புக் முழுமையும் பதிவேற்றம் செய்யலாம் என்று நான் அட்வைஸ் கொடுக்க விரும்புகிறேன்.
எனினும், சில படங்களை இவ்வாறு போடுவதால் எந்தவித பிரச்னைகளும் வரப்போவதில்லை.
இவ்வாறு பொதுவான தளங்களில் படங்களை போடுவதன் மூலம், அவருடன் நீங்கள் இருப்பதை விரும்புகிறீர்கள் என்றும், அதற்காக வெட்கப்படவில்லை என்றும் உலகுக்கும், துணைவருக்கும் உணர்த்திடவும்
 முடியும்.
எனினும், நெருக்கமான அல்லது தனிப்பட்ட படங்களை நீங்கள் பதிவிடும் போது கவனமாக இருக்கவும், பின் நாட்களில் உங்களுடைய துணைவரை தர்மசங்கடமான நிலைக்கு இந்த படங்கள் 
தள்ளி விடும்.
இவ்வாறு வித்தியாசமான படங்களை நீங்கள் பதிவிடும் முன்னர், துணைவருடன் ஒருமுறை கலந்து பேசி விடுவது நலம்
ஃபேஸ்புக்கில் உள்ள ‘டைம்லைன்’ பகுதியை வழங்கிய காரணத்திற்காக மார்க் ஸுக்கர்பெர்க்-ற்கு நீங்கள் நன்றி 
தெரிவிக்க வேண்டும்.
ஏனெனில், இந்த டைம்லைன் மூலம் உங்களுடைய துணைவர் உங்களுடைய கடந்த கால வாழ்க்கையை அவராகவே அறிந்து கொள்வார்.
இந்த டைம்லைனில், உங்களுடைய முன்னாள் காதலர்கள், குறும்புத்தனமான கமெண்ட்கள் அல்லது முன்னாள் காதலருடன் எடுத்துக் கொண்ட சில வெளிப்படையான படங்கள் என பல விஷயங்களையும்
 காண முடியும்.
நீங்கள் மணம் செய்து கொள்ளப் போகும் நபர், இந்த படங்களையும், கமெண்ட்களையும் பார்க்க முடியும், இவ்வாறு பார்க்கும் பொது உறவுக்கு அழிவு தரும் என்று நினைக்கும் போஸ்ட்கள், கமெண்ட்கள் மற்றும் படங்களை உடனடியாக அழித்து உங்களுடைய க்ளோசெட்டை சுத்தம் செய்வது நல்லது.
இவ்வாறு சுத்தம் செய்யப்பட்ட ஃபுரோபைல் நீங்கள் யாராக இருக்கப் போகிறீர்கள் என்று காட்ட வேண்டுமே தவிர, நீங்கள் யாராக இருந்தீர்கள் என்று காட்டத் தேவையில்லை..
அன்பு இணைய உறவுகளே இத்தகவல் யார் மனதைபுண்படுத்துவதற்கல்ல  நல்லதே நடக்கும் 
நன்றி!நன்றி!நன்றி!!!  
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

புதன், 21 செப்டம்பர், 2016

தமிழர்களால் பி.பி.சி செய்தியாளர் ரூ.97 லட்சம் இழப்பீடு பெற்றுக்கொண்டர்!

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக செய்தி வெளியிட்ட காரணத்திற்காக பணிநீக்கம் செய்யப்பட்ட செய்தியாளருக்கு ரூ.97 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என பிரித்தானிய நீதிமன்றம் அதிரடியாக
 உத்தரவிட்டது.
பிரித்தானிய நாட்டை சேர்ந்த பி.பி.சி என்ற தனியார் செய்தி நிறுவனத்தில் சந்தனகீர்த்தி பண்டாரா(57) என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 2013ம் ஆண்டு யூலை 22-ம் திகதி இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட் மிடில்டன் தம்பதிக்கு குட்டி இளவரசர் ஜோர்ஜ் பிறந்துள்ளார்.
இந்த செய்தியை மறுநாளான 23-ம் திகதி சிறப்பு செய்தியாக வெளியிட பி.பி.சி தீர்மானித்துள்ளது.
அப்போது, செய்தியை வெளியிடும் பொறுப்பை சந்தனகீர்த்தி பண்டாரா பார்த்து வந்துள்ளார். இளவரசி ஜோர்ஜ் பிறந்த செய்திக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என சந்தனகீர்த்திக்கு தகவல் 
அளிக்கப்பட்டது.
ஆனால், செய்தி வெளியிட வேண்டிய அதே யூலை 23-ம் திகதி இலங்கையில் ’கருப்பு யூலை’ அனுசரிக்கப்பட்டது. அதாவது, கடந்த 1983ம் ஆண்டு யூலை 23-ம் திகதி தமிழர்கள் மீது இலங்கை ராணுவம் தாக்குதல் நடத்தியதில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் 
கொல்லப்பட்டனர்.
எனவே, இலங்கை தமிழர்களின் செய்திக்கு தான் முன்னுரிமை கொடுப்பேன் என்றும்  அதே நாளில் குட்டி இளவரசர் ஜோர்ஜ் பிறந்த செய்தி ‘சிறப்பு செய்தியில்’ வராது எனவும் சந்தனகீர்த்தி திட்டவட்டமாக 
கூறியுள்ளார்.
செய்தியாளார் கூறியது போலவே மறுநாள் இலங்கை தமிழர்களின் செய்தியை அவர் வெளியிட்டுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த பி.பி.சி நிறுவனம் சந்தனகீர்த்தி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது. மேலும், இதுபோன்ற தவறு மீண்டும் நிகழாமல் இருக்க அவரிடம் உறுதி பத்திரமும் எழுதி 
வாங்கப்பட்டது.
ஆனால், இச்சம்பவம் நிகழ்ந்து ஒரு வருடத்திற்கு பின்னர் அதாதவது, கடந்த 2014ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் திகதி பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி சந்தனகீர்த்தியை பி.பி.சி நிறுவனம் பணியில்
 இருந்து நீக்கியது.
பி.பி.சி நிறுவனத்தின் இந்த நடவடிக்கை தனி மனித உரிமையை பறிப்பதாக இருப்பதாக கூறி சந்தனகீர்த்தி நீதிமன்றத்தில் வழக்கு 
தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு தொடர்பான இறுதி விசாரணை நேற்று நீதிமன்றத்திற்கு வந்துள்ளது. அப்போது, 18 ஆண்டுகளாக பி.பி.சி நிறுனத்தில் பணியாற்றிய செய்தியாளர் மீது தனிப்பட்ட விரோதம் காரணமாக பி.பி.சி நிறுனம் நடவடிக்கை எடுத்துள்ளது கண்டிக்கத்தக்கது.
எனவே, செய்தியாளரின் உரிமையை பறிக்கும் விதத்தில் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது தவறு எனக் கூறிய நீதிபதிகள், சந்தனகீர்த்திக்கு 51,428 பவுண்ட்(97,63,855 இலங்கை ரூபாய்) இழப்பீடு வழங்க வேண்டும் என பி.பி.சி நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>






புதன், 7 செப்டம்பர், 2016

கார் விபத்ல் கனடாவில் இலங்கை வம்சாவளி தாயும் மகளும் பலி

கனடா – ஒன்றாரியோவில் கடந்த வாரம் இடம்பெற்ற வீதிவிபத்து ஒன்றில் இலங்கை வம்சாவளி தாயும்  அவரின் 4 வயது மகளும் மரணமடைந்துள்ளனர்.
குறித்த இருவரும் பயணித்த காருடன், மாற்று திசையில் இருந்து வந்த கார் மோதிய போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தில் 40 வயதான இனோகா அத்துரலியே லியனகேவாதுகே மற்றும் அவரின் மகளான 4 வயது சாவனி ஆகியோர்
 பலியாகியுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,இவர்கள் 10 வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் இருந்து கனடாவுக்கு குடிபெயர்ந்தவர்கள் என 
குறிப்பிடப்படுகின்றது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

வியாழன், 25 ஆகஸ்ட், 2016

ஈழத்தமிழர்கள் 5 பேர் பிரித்தானியாக்கடலில் சடலமாக மீட்பு!

பிரித்தானியாவின் ஹம்பர்சான்ட் கடலில் நேற்றையதினம்   குளிக்கும் போது நீரில் மூழ்கிப் பலியான ஐந்து இளைஞர்களும், ஈழத்தமிழர்கள் என தெரிய வந்துள்ளது.
ஒன்றாகக் கடலில் மூழ்கிப் பலியான மேற்படி ஐந்து இளைஞர்களும் யார் என்பதையோ அல்லது அவர்களின் அடையாளங்களை எவை என்பதையோ உறுதிப்படுத்த முடியாமல் பிரித்தானிய காவற்துறையினர் நேற்று முதல் திணறி வந்தனர்.
இந்த நிலையில் தற்போது மேற்படி ஐந்து இளைஞர்களும்,  தென்கிழக்கு லண்டனின் கிறின்விச் பகுதியிலிருந்து ஹம்பர்சான்ட் கடற்கரைக்கு குளிக்கச் சென்ற தமிழர்கள் என தெரியவருகிறது.
 கிடைத்த தரவுகளின்படி பலியானர்வர்கள் நிதர்சன் ரவி, கோபிநாதன், கென் நாதன் மற்றும் குரு ஆகியோர் எனத் தெரிகிறது. பலியான ஐந்தாவது நபரின் பெயர் தெரியவில்லை.
நேற்றைய தினம் பிரித்தானியாவில் அதியுச்ச வெப்பநிலை நிலவிய நிலையில் இவர்கள் அனைவரும் ஒன்றாக ஹம்பர்சான்ட் கடற்கரைக்கு குளிக்கச் சென்றிருந்தனர்.
ஆயினும் இவர்கள் அனைவரும் கடலில் குளிப்பதற்கு ஏற்ற  வகையில் உடைகளணியாமல் காற்சட்டைகள் மற்றும் ரீ-சேர்ட்டுகளை அணிந்து குளித்துள்ளனர். இவர்கள் ஒன்றாகக் குளித்த பிற்பகல் வேளையில் இந்தத் துன்பியல் இடம்பெற்றுள்ளது.
கடலில் குளித்த சிலர் தத்தளிப்பதைக் கண்டு கரையிலிருந்தவர்கள் கடல்காப்பு மீட்புப் பிரிவினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்
.இதனையடுத்து மூழ்கிய நிலையில் மீட்கப்பட்ட மூவருக்கு அவசர முதலுதவி பிரிவினர் சிகிச்சைகளை வழங்கினர். 
 பின்னர் உலங்கு வாஇதன் பின்னர் மேலும் இரண்டு உடலங்கள் கரையொதுங்கின. இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது. இன்னும் ஒருவர் காணாமல் போனதாக காவற்துறையினர் கருதுவதால் அவரைத்தேடும் பணிகள் இடம்பெற்று வருகின்றனனுர்தி  உதவியும் பெறப்பட்டது,  ஆயினும் அவர்களின் உயிரைக் காக்க முடியவில்லை.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>