நிலாவரை .கொம்

siruppiddy

ஞாயிறு, 4 டிசம்பர், 2016

கிராம மக்களுக்கு ராணுவ வீரர் அளித்த பரிசு என்ன தெரியுமா?

ஜேர்மன் நாட்டை சேர்ந்த ராணுவ வீரர் ஒருவரின் உயிரை காப்பாற்றிய கிராம மக்களுக்கு அவரது இறுதி நாளில் செய்துள்ள நன்றிக்கடன் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
இரண்டாம் உலகப்போர் நடைபெற்று வந்த நேரத்தில் ஜேர்மனியை சேர்ந்த Heinrich Steinmeyer(அப்போதைய வயது 19) என்ற ராணுவ வீரர் பிரான்ஸ் நாட்டில் கைது செய்யப்பட்டார்.
பின்னர் ஸ்கோட்லாந்து நாட்டில் உள்ள Comrie என்ற சிறிய கிராமத்தில் கைதியாக அடைக்கப்பட்டார். இக்கிராமத்தில் உள்ள Cultybraggan முகாமில் அடைக்கப்பட்ட வீரர் பல்வேறு இன்னல்களுக்கு
 உள்ளாகியுள்ளார்.
இந்நிலையில், வீரரின் நிலையைக் கண்ட அக்கிராமத்து மக்கள் அவருக்கு பல்வேறு வகையில் உதவி செய்ததுடன் அவருடன் அன்பாக பழகி வந்துள்ளனர்.
கிராமத்து மக்களின் அன்பைக் கண்டு புத்துணர்ச்சி பெற்ற வீரர் தனது துன்பத்திலிருந்து படிப்படியாக முன்னேறியுள்ளார்.
சில ஆண்டுகளுக்கு பின்னர் முகாமில் இருந்து விடுதலை செய்யப்பட்ட வீரர் கிராம மக்களுக்கு நன்றி தெரிவித்துவிட்டு ஜேர்மனிக்கு
 திரும்பியுள்ளார்.
இந்நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தன்னுடைய 90வது வயதில் அவர் உயிரிழந்துள்ளார்.
ஆனால், உயிரிழப்பதற்கு முன்னதாக ஒரு பத்திரம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு உயிரிழந்துள்ளார்.
அதாவது, தனது சொத்துக்களில் பாதியை (சுமார் 8 கோடி இலங்கை ரூபாய்) தன்னுடைய உயிரை காப்பாற்றிய Comrie கிராம மக்களுக்கு வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தன்னுடைய உடலை எரித்த பின்னர் அதன் ஒரு பாதியை அக்கிராமத்தில் புதைக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ராணுவ வீரரின் விருப்பப்படி அத்தொகை கிராமத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. தற்போது இத்தொகை ஒவ்வொரு குடும்பத்தினரின் வளர்ச்சிக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
60 ஆண்டுகளுக்கு முன்னர் செய்த உதவியை தனது வாழ்நாள் முழுவதும் மறக்காமல் நன்றிக்கடனாக முன்னாள் ராணுவ வீரர் செய்துள்ள இச்செயல் கிராம மக்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக