பிரான்ஸ் நாட்டில் பொலிஸ் அதிகாரி ஒருவரின் மீது கார் ஏற்றி கொன்றுவிட்டு குற்றவாளி ஒருவர் தப்பிக்க முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சனிக்கிழமை நள்ளிரவு நேரத்தில் தான் இந்த பயங்கர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மேற்கு பிரான்ஸில் உள்ள Tarascon-sur-Ariege நகரில் பொலிசார் வாகன பரிசோதனையில் ஈடுப்பட்டு வந்துள்ளனர்.
அப்போது, தூரத்தில் கார் ஒன்று வேகமாக வந்துள்ளது. காரை இடைமறித்து நிறுத்த பொலிசார் முயன்றுள்ளனர்.
ஆனால், வேகமாக வந்த கார் நிற்காமல் சென்றுள்ளது. எனினும், 55 வயதான பொலிஸ் அதிகாரி ஒருவர் காரை தடுக்க முயன்றபோது அவரை இடித்து தள்ளி விட்டு கார் பறந்துள்ளது.
இச்சம்பவத்தில் பொலிஸ் அதிகாரி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.
பணியில் இருந்த மற்றொரு பொலிஸ் அதிகாரி தனது காரை எடுத்துகொண்டு பின் தொடர்ந்து துப்பாக்கி முனையில் நபரை கைது செய்துள்ளார்.
மேலும், பொலிசார் விசாரணை நடத்தியதில் கைது செய்யப்பட்டவர் ஏற்கனவே பொலிசாரால் தண்டிக்கப்பட்ட குற்றவாளி என தெரியவந்துள்ளது.
இச்சம்பவத்தில் பலியான பொலிஸ் அதிகாரிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நள்ளிரவு நடந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள உள்துறை அமைச்சர் குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதி துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக