நிலாவரை .கொம்

siruppiddy

செவ்வாய், 31 மே, 2016

ரயில் ஏறிச்சென்றும் உயிர் பிழைத்த மூதாட்டி: ஒரு அதிசய சம்பவம்!

வடக்கு ஜேர்மனியில் உள்ள லோயர் சாக்ஸோனி நகருக்கு அருகில் உள்ள Langwedel என்ற பகுதியில் தான் இந்த அதிசய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதே பகுதியில் உள்ள ரயில் பாதையை 91 வயதான மூதாட்டி ஒருவர் தினமும் கடந்து சென்று வீடு திரும்புவார்.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று மூதாட்டி நடந்து செல்வதற்கு பயன்படுத்தப்படும் ’வாக்கிங் ஸ்டிக்’ ஒன்றை ஊன்றிக்கொண்டு தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார்.
அப்போது, எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று மணிக்கு 160 கி.மீ வேகத்தில் பாய்ந்து வந்துள்ளது.
தண்டவாளத்தின் மத்தியில் நின்றுக்கொண்டுருந்த மூதாட்டி ‘இனி தப்பிக்க முடியாது’ என தீர்மானித்து தனது கையில் இருந்த வாக்கிங் ஸ்டிக்கை அருகில் வீசிவிட்டு தண்டவாளத்தில் படுத்துள்ளார்.
வேகமாக வந்த ரயில் அவர் உடல் மீது ஏறிச்சென்றுள்ளது. அப்போது, மூதாட்டி வீசிய வாக்கிங் ஸ்டிக் ரயில் சிக்கி இழுத்துக்கொண்டு
 சென்றுள்ளது.
’காட்டு விலங்கு மீது மோதி விட்டோம்’ என கருதிய ரயில் ஓட்டுனர் அடுத்ததாக வந்த Verden என்ற ரயில் நிலையத்தில் நிறுத்திவிட்டு இறங்கி வந்து பார்த்துள்ளார்.
அங்கு, மூதாட்டி பயன்படுத்திய வாக்கிங் ஸ்டிக் சிதைந்து இருந்ததை அண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
‘முதியவர் மீது ரயிலை ஏற்றிவிட்டோம்’ என அச்சம் அடைந்த ஓட்டுனரால் ரயிலை தொடர்ந்து ஓட்ட முடியவில்லை.
இந்நிலையில், எதிர்புறமாக சென்ற ரயில் ஓட்டுனர் ஒருவர் தண்டவாளத்தின் மத்தியில் ஒரு மூதாட்டி படுத்திருப்பதை பார்த்து உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளார்.
அதிகாரிகள் அங்கு விரைந்து சென்றபோது, மூதாட்டி கூலாக எழுந்து நின்றுள்ளார். இதனை பார்த்த அதிகாரிகள் மிகவும் மகிழ்ச்சி
 அடைந்துள்ளனர்.
இது குறித்து அதிகாரிகள் பேசியபோது, ‘உண்மையில் மூதாட்டி மிகவும் அதிர்ஷ்டசாலி. ஏனெனில், தண்டவாளத்தில் படுத்துள்ளபோது ரயில் ஏறிச்சென்றால், உடலில் உள்ள உடுப்புகள் ரயில் சிக்கி நபரை இழுத்துச்சென்று சிதைத்திருக்கும்.
ஆனால், மூதாட்டி தண்டவாளத்தின் மீது நேர்த்தியதாக படுத்திருந்ததால், அவரது உடல் உறுப்புகள் மற்றும் உடுப்புகள் எதுவும் ரயிலில் 
சிக்கவில்லை.
எனினும், மூதாட்டிக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுருந்ததால் அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது ஆரோக்கியமாக வீடு திரும்பியுள்ளதாக பொலிசார் 
தெரிவித்துள்ளனர்
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>

திங்கள், 30 மே, 2016

ஜேர்மனியில் பெண்கள் வாழ்வதற்கு சிறந்த நகரம் எது???

ஜேர்மனியில் பெண்கள் வாழ்வதற்கு சிறந்த நகரமாக Dresden தெரிவு செய்யப்பட்டுள்ளது.
Focus என்ற நாளிதழ் ஜேர்மனியில் உள்ள 77 நகரங்களில், பெண்களுக்கான வேலைவாய்ப்பு, வருவாய், கல்வித்திறமை, பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள், சம உரிமை, பொழுதுபோக்கு நடவடிக்கைகள் போன்றவற்றை அடிப்படையாக கொண்டு, இதில் எந்த நகரம் அவர்கள் நட்புறவுடன் வாழ்வதற்கு சிறப்பாக உள்ளது என்பது குறித்து 
கணக்கெடுப்பு நடத்தியது.
இதில் Dresden நகரம் முதலிடத்தில் உள்ளது, இந்நகரில் 92 சதவீத பெண்கள் சம்பாதிக்கின்றனர். மேலும் இங்கு வசிக்கும் பெண்கள் மிகவும் பாதுகாப்பாகவும், இவர்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள் மிக குறைந்த அளவிலேயே உள்ளன.
மேலும் ஆண்களுக்கு நிகரான உரிமைகள் இவர்களுக்கும் கிடைக்கின்றன. இரண்டாவது இடத்தில் Heidelberg நகரம் உள்ளது, முனிச் 6வது இடத்திலும், பெர்லின் 10வது இடத்திலும், Hamburg 16வது இடத்திலும், Dusseldorf 23வது இடத்திலும் உள்ளது.
Ludwigshafen நகரில் பணிக்கும் செல்லும் பெண்களின் பணி விகிதம் குறைவு ஆகும், மேலும் பெண்கள் வசிப்பதற்கு மிகவும் மோசமான இடமாக இந்நகரம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது, இங்கு பெண்களுக்கு எதிரான நடக்கும் வன்முறைகள் அதிகம் ஆகும்.
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>


திங்கள், 9 மே, 2016

இலங்கையர்களுக்கு அமெரிக்காவில் வேலை வாய்ப்பு!

இலங்கை தாதியர்களுக்கு அமெரிக்க வைத்தியசாலைகளில்  வேலைவாய்ப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அமெரிக்காவைச் சேர்ந்த வெளிநாட்டு ஊழியர்களை இணைத்துக் கொள்ளும், நிறுவனம் ஒன்றுடன் குறித்த ஒப்பந்தம் நேற்று கைச்சாத்திடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இதன்படி குறித்த ஒப்பந்தம் ஐந்து வருடங்களுக்கு செல்லுபடியாகும் எனவும், இதன்மூலம் 30,000க்கும் மேற்பட்ட இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு கிட்டும் எனவும், வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.
இதன்மூலம் இலங்கையர் அதிகம் பயனடையக்கூடியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

சனி, 7 மே, 2016

.பிரான்சில் வதிவிட உரிமை இல்லாத தமிழ‌ர்கள் திருப்பி அனுப்பப்படுகின்றனர்?

பிரான்சில் வதிவிட உரிமை இல்லை என்ற காரணத்தை வைத்து பல தமிழர்கள் பிரஞ்சுப் போலீசாரால் கைது செய்யப்பட்டு திருப்பியனுப்பப் பட்டுக் கொண்டிருக்கின்றனர். பிரான்சின் தலைநகரமான 
பாரிஸ் நகரிலேயே இந்த சம்பவம் சத்தமின்றி நடைபெற்று வருகின்றது. முன்னர் வதிவிட உரிமை இல்லாத நபர் ஒருவரை 
பொலிசார் 
கைது செய்யும் போது அவரை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவேண்டிய பொறுப்பு காவல் துறைக்கு வழங்கப்படும் , ஆனால் தற்போது வதிவிட உரிமை ( விசா) இல்லாமல் 
கைது செய்யப்படும் நபரை எந்தவொரு விசாரணையும்
 இன்றி பொலிசாரே நேரடியாக ரகசியமான முறையில் நாடு கடத்தி விடுகின்றனர், இது வரை பல நூற்றுக் கணக்கான 
தமிழர்கள் 
இலங்கைக்கு திருப்பியனுப்ப பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட தமிழர் ஒருவர் எமது செய்திச் சேவைக்கு அனுப்பிய தகவலே இங்கு செய்தியாக பிரசுரிக்கப்படுகின்றது….. வதிவிட உரிமை இன்றி வாழும் உங்கள் சொந்தங்களுக்கு இந்த செய்தியை
 தெரியப்படுத்துங்கள்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>செவ்வாய், 3 மே, 2016

கார் ஏறி ஏழு வயது சிறுவன் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது!.

கனடா நாட்டில் தந்தை கார் ஏறி 7 வயது மகன் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒட்டாவா நகரிலிருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் Cantley என்ற ஒரு சிறிய கிராமம் அமைந்துள்ளது.
இந்த கிராமத்தில் உள்ள பெற்றோர் தனது 7 வயது மகனுடன் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் காரில் வெளியே சென்றுருந்த தந்தை வீட்டுக்கு திரும்பியுள்ளார். அவரது வீடு தாழ்வான பகுதியில் அமைந்துள்ளதால், காரை உயரமான இடத்தில் நிறுத்திவிட்டு கீழே இறங்கியுள்ளார்.
சில மீற்றர்கள் தொலைவில் அவரது 7 வயது சிறுவன் நிகழப்போகும் விபரீதத்தை உணராமல் உற்சாகமாக விளையாடிக்கொண்டு இருந்துள்ளான்.
அப்போது, காரிலிருந்து தந்தை இறங்கிய அடுத்த வினாடி, தாழ்வான பகுதி என்பதால் நிறுத்தி வைக்கப்பட்ட அந்த கார் தானாக முன்னோக்கி நகர்ந்துள்ளது.
கார் நகர்ந்து செல்வதை கண்டு அதிர்ச்சி அடைந்த தந்தை காரை தடுத்து நிறுத்த போராடியுள்ளார். ஆனால், முடியவில்லை.
காரின் வேகம் அதிகரித்து தாறுமாறாக முன்னோக்கி பாய்ந்துள்ளது. அப்போது, எதிரே விளையாடிக்கொண்டு இருந்த அந்த அப்பாவி சிறுவன் மீது மோதி கீழே தள்ளி அவனது உடல் மீது ஏறி
 இறங்கியுள்ளது.
தன்னுடைய கண் முன்னே நிகழ்ந்த கொடூர காட்சியை காட்சியை கண்டு தந்தை அலறி துடித்துள்ளார். கணவனின் அலறல் சத்தத்தை கேட்டு மனைவி வெளியே ஓடி வந்துள்ளார்.
அப்போது கார் ஏறி உயிருக்கு போராடிக்கொண்டிருந்த தனது மகனை தூக்கி மடியில் கிடத்திக்கொண்டு இருவரும் கண்ணீர் மல்க துடித்துள்ளனர்.
அதேவேளையில், அருகில் உள்ள மருத்துவமனைக்கு உடனடியாக தகவல் கொடுத்துவிட்டு மகனுக்கு முதலுதவி சிகிச்சையை பெற்றோர் அளித்துள்ளனர்.
சில நிமிடங்களுக்கு பிறகு வந்த ஆம்புலன்ஸ் சிறுவனை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளது. ஆனால், மருத்துவர்கள் கடுமையாக போராடியும் சிகிச்சை பலனின்றி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.

சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு சென்றிருந்த Martin Fournel என்ற பொலிஸ் அதிகாரி பேசியபோது, ‘இதுபோன்ற ஒரு சோகம் எந்த பெற்றோருக்கும் ஏற்படக்கூடாது’ எனக் கண்கள் கலங்க வேதனை 
தெரிவித்துள்ளார்.
மேலும், இது எதிர்பாராத விபத்து தான் என்பதை உறுதி செய்த பொலிசார், இந்த சம்பவம் தொடர்பாக யார் மீதும் வழக்கு பதிவு செய்யப்படாது எனக் கூறியுள்ளார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

இறுதிச்சடங்குகள் திருமணங்கள் நடக்கக்கூடாது: அதிபரின் அதிரடி உத்தரவு?

வட கொரியா அதிபர் தன்நாட்டு மக்களுக்கு விதித்துள்ள உத்தரவால் அந்நாட்டு மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
வடகொரியா நாட்டின் உயர் தலைவராக இருக்கும் கிம் ஜாங்கின் பதவிப்பிரமாணம் நடைபெறவிருக்கிறது.
இந்த பதவிப்பிரமாண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள காங்கிரஸ்கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கிம்ஜாங் 33 வயதை எட்டியுள்ளதால் இந்த பதவிப்பிரமான நிகழ்ச்சி மே 6 ஆம் திகதிக்கு பின்னர் நடைபெறவிருக்கிறது.
ஆனால் சரியான திகதி வெளியிடப்படவில்லை, இந்நிலையில் கிம் ஜாங், தனதுநாட்டு மக்களுக்கு வெளியிட்டுள்ள உத்தரவில், பதவிப் பிரமாணம் பாதுகாப்புகருதி, நான் பதவியேற்கும் வரைநாட்டில் திருமணங்கள், விருந்து நிகழ்ச்சிகள் நடைபெறக்கூடாது.
அதுமட்டுமின்றி, வீட்டில் உள்ள உறுப்பினர்களில் யாரேனும் இறந்துவிட்டால் கூட இறுதிச்சடங்கினை நடத்தக்கூடாது என உத்தரவிட்டுள்ளார்.
அதிபரின் இந்த உத்தரவினை கேட்டு அந்நாட்டு மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கண்டம் விட்டு கண்டம் பாயும் அணு ஆயுத சோதனையை நடத்தி வருவதோடு மட்டுமல்லாமல், வடகொரியா ஒரு அணு ஆயுத தேசிய நாடு என அறிவித்துள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>