இலங்கை தாதியர்களுக்கு அமெரிக்க வைத்தியசாலைகளில் வேலைவாய்ப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அமெரிக்காவைச் சேர்ந்த வெளிநாட்டு ஊழியர்களை இணைத்துக் கொள்ளும், நிறுவனம் ஒன்றுடன் குறித்த ஒப்பந்தம் நேற்று கைச்சாத்திடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இதன்படி குறித்த ஒப்பந்தம் ஐந்து வருடங்களுக்கு செல்லுபடியாகும் எனவும், இதன்மூலம் 30,000க்கும் மேற்பட்ட இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு கிட்டும் எனவும், வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.
இதன்மூலம் இலங்கையர் அதிகம் பயனடையக்கூடியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக