நிலாவரை .கொம்

siruppiddy

செவ்வாய், 3 மே, 2016

கார் ஏறி ஏழு வயது சிறுவன் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது!.

கனடா நாட்டில் தந்தை கார் ஏறி 7 வயது மகன் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒட்டாவா நகரிலிருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் Cantley என்ற ஒரு சிறிய கிராமம் அமைந்துள்ளது.
இந்த கிராமத்தில் உள்ள பெற்றோர் தனது 7 வயது மகனுடன் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் காரில் வெளியே சென்றுருந்த தந்தை வீட்டுக்கு திரும்பியுள்ளார். அவரது வீடு தாழ்வான பகுதியில் அமைந்துள்ளதால், காரை உயரமான இடத்தில் நிறுத்திவிட்டு கீழே இறங்கியுள்ளார்.
சில மீற்றர்கள் தொலைவில் அவரது 7 வயது சிறுவன் நிகழப்போகும் விபரீதத்தை உணராமல் உற்சாகமாக விளையாடிக்கொண்டு இருந்துள்ளான்.
அப்போது, காரிலிருந்து தந்தை இறங்கிய அடுத்த வினாடி, தாழ்வான பகுதி என்பதால் நிறுத்தி வைக்கப்பட்ட அந்த கார் தானாக முன்னோக்கி நகர்ந்துள்ளது.
கார் நகர்ந்து செல்வதை கண்டு அதிர்ச்சி அடைந்த தந்தை காரை தடுத்து நிறுத்த போராடியுள்ளார். ஆனால், முடியவில்லை.
காரின் வேகம் அதிகரித்து தாறுமாறாக முன்னோக்கி பாய்ந்துள்ளது. அப்போது, எதிரே விளையாடிக்கொண்டு இருந்த அந்த அப்பாவி சிறுவன் மீது மோதி கீழே தள்ளி அவனது உடல் மீது ஏறி
 இறங்கியுள்ளது.
தன்னுடைய கண் முன்னே நிகழ்ந்த கொடூர காட்சியை காட்சியை கண்டு தந்தை அலறி துடித்துள்ளார். கணவனின் அலறல் சத்தத்தை கேட்டு மனைவி வெளியே ஓடி வந்துள்ளார்.
அப்போது கார் ஏறி உயிருக்கு போராடிக்கொண்டிருந்த தனது மகனை தூக்கி மடியில் கிடத்திக்கொண்டு இருவரும் கண்ணீர் மல்க துடித்துள்ளனர்.
அதேவேளையில், அருகில் உள்ள மருத்துவமனைக்கு உடனடியாக தகவல் கொடுத்துவிட்டு மகனுக்கு முதலுதவி சிகிச்சையை பெற்றோர் அளித்துள்ளனர்.
சில நிமிடங்களுக்கு பிறகு வந்த ஆம்புலன்ஸ் சிறுவனை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளது. ஆனால், மருத்துவர்கள் கடுமையாக போராடியும் சிகிச்சை பலனின்றி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.

சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு சென்றிருந்த Martin Fournel என்ற பொலிஸ் அதிகாரி பேசியபோது, ‘இதுபோன்ற ஒரு சோகம் எந்த பெற்றோருக்கும் ஏற்படக்கூடாது’ எனக் கண்கள் கலங்க வேதனை 
தெரிவித்துள்ளார்.
மேலும், இது எதிர்பாராத விபத்து தான் என்பதை உறுதி செய்த பொலிசார், இந்த சம்பவம் தொடர்பாக யார் மீதும் வழக்கு பதிவு செய்யப்படாது எனக் கூறியுள்ளார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக