நிலாவரை .கொம்

siruppiddy

வியாழன், 25 ஆகஸ்ட், 2016

ஈழத்தமிழர்கள் 5 பேர் பிரித்தானியாக்கடலில் சடலமாக மீட்பு!

பிரித்தானியாவின் ஹம்பர்சான்ட் கடலில் நேற்றையதினம்   குளிக்கும் போது நீரில் மூழ்கிப் பலியான ஐந்து இளைஞர்களும், ஈழத்தமிழர்கள் என தெரிய வந்துள்ளது.
ஒன்றாகக் கடலில் மூழ்கிப் பலியான மேற்படி ஐந்து இளைஞர்களும் யார் என்பதையோ அல்லது அவர்களின் அடையாளங்களை எவை என்பதையோ உறுதிப்படுத்த முடியாமல் பிரித்தானிய காவற்துறையினர் நேற்று முதல் திணறி வந்தனர்.
இந்த நிலையில் தற்போது மேற்படி ஐந்து இளைஞர்களும்,  தென்கிழக்கு லண்டனின் கிறின்விச் பகுதியிலிருந்து ஹம்பர்சான்ட் கடற்கரைக்கு குளிக்கச் சென்ற தமிழர்கள் என தெரியவருகிறது.
 கிடைத்த தரவுகளின்படி பலியானர்வர்கள் நிதர்சன் ரவி, கோபிநாதன், கென் நாதன் மற்றும் குரு ஆகியோர் எனத் தெரிகிறது. பலியான ஐந்தாவது நபரின் பெயர் தெரியவில்லை.
நேற்றைய தினம் பிரித்தானியாவில் அதியுச்ச வெப்பநிலை நிலவிய நிலையில் இவர்கள் அனைவரும் ஒன்றாக ஹம்பர்சான்ட் கடற்கரைக்கு குளிக்கச் சென்றிருந்தனர்.
ஆயினும் இவர்கள் அனைவரும் கடலில் குளிப்பதற்கு ஏற்ற  வகையில் உடைகளணியாமல் காற்சட்டைகள் மற்றும் ரீ-சேர்ட்டுகளை அணிந்து குளித்துள்ளனர். இவர்கள் ஒன்றாகக் குளித்த பிற்பகல் வேளையில் இந்தத் துன்பியல் இடம்பெற்றுள்ளது.
கடலில் குளித்த சிலர் தத்தளிப்பதைக் கண்டு கரையிலிருந்தவர்கள் கடல்காப்பு மீட்புப் பிரிவினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்
.இதனையடுத்து மூழ்கிய நிலையில் மீட்கப்பட்ட மூவருக்கு அவசர முதலுதவி பிரிவினர் சிகிச்சைகளை வழங்கினர். 
 பின்னர் உலங்கு வாஇதன் பின்னர் மேலும் இரண்டு உடலங்கள் கரையொதுங்கின. இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது. இன்னும் ஒருவர் காணாமல் போனதாக காவற்துறையினர் கருதுவதால் அவரைத்தேடும் பணிகள் இடம்பெற்று வருகின்றனனுர்தி  உதவியும் பெறப்பட்டது,  ஆயினும் அவர்களின் உயிரைக் காக்க முடியவில்லை.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

வியாழன், 18 ஆகஸ்ட், 2016

வங்கிகளை சட்டவிரோத நடத்தி வந்த 450 பேர் கைத!

சீனாவில் சட்டவிரோத வங்கிகளை நடத்தி வந்த 450 பேரை அந்த நாட்டுப் போலீஸார் கைது செய்துள்ளனர்.
சட்டவிரோதச் செயல்கள் மூலம் ஈட்டிய தொகை, அரசு அதிகாரிகள் பொதுநல நிதியிலிருந்து மோசடி செய்த தொகை போன்றவற்றுக்கு வங்கிச் சேவை அளித்து வந்த அந்த வங்கிகள், 3,000 கோடி டாலர் (சுமார் ரூ.2 லட்சம் கோடி) பணப் பரிவர்த்தனைகளை மேற்கொண்டதாக பொதுமக்கள் பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்தது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


திங்கள், 15 ஆகஸ்ட், 2016

பயணிஒருவர் ஓடும் விமானத்தில் ஏற முயன்றர்!

பொலிவியா நாட்டை சேர்ந்த வாலிபர் ஒருவர் ஸ்பெயினுக்கு வந்திருந்தார். அவர் மாட்ரிட் நகரில் இருந்து கிரான் கெனேரியா நகருக்கு செல்வதற்காக ரெயான் நிறுவன விமானத்தில் டிக்கெட் வாங்கி 
இருந்தார்.
இதற்காக விமான நிலையத்துக்கு வந்த அவர், உரிய நேரத்தில் விமானத்தில் ஏறவில்லை. விமானம் புறப்படும் நேரத்தில் ஏறுவதற்காக ஓடி வந்தார். அதற்குள் விமான பாதை இணைப்பை துண்டித்து விட்டு விமானம் புறப்படுவதற்காக ஓடு தளத்தை நோக்கி
 சென்றது.
விமானம் அந்த இடத்தை விட்டு சென்றதை பார்த்த அந்த பயணி குகை பாதை வழியாக கீழே குதித்து விமானத்தை நோக்கி ஓடினார். அவர் 2 பைகளும் வைத்திருந்தார்.
திடீரென ஒருவர் விமானத்தை நோக்கி வருவதால் தீவிரவாதிதான் தாக்க வருகிறார் என கருதி பரபரப்பு ஏற்பட்டது.
விமான நிலைய உள் பகுதியில் இருந்த ஊழியர்கள் அவரை மடக்கி பிடித்தனர். அதற்குள் விமானம் அங்கிருந்து புறப்பட்டு
 சென்று விட்டது.
அவரிடம் விசாரித்த போது, விமானத்தை பிடிப்பதற்காகத்தான் ஓடி வந்தேன் என்று கூறினார். அவரை அங்கிருந்து பாதுகாப்பு அதிகாரிகள் அழைத்து சென்றனர்.
பாதுகாப்பு விதிகளை மீறி விமான ஓடுதளத்தில் செல்வது தவறானது. இதற்காக அவர் ரூ.25 லட்சம் வரை அபராதம் செலுத்த வேண்டியது வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த பயணி பற்றிய மற்ற தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

செவ்வாய், 9 ஆகஸ்ட், 2016

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிந்த பின்னர் எப்படியான நிலைப்பாடு?

பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிந்த பின்னர்  தெரசா மே அம்மையாரால் இலங்கைக்கு ஆபத்து எப்படியான நிலைப்பாடு தற்போது நிலவுகின்றது, இலங்கை அரசியலில் பிரித்தானியாவின் நிலைப்பாடு என்ன? என்பது பற்றி இந்த வார லங்காசிறியின் அரசியற்களம் வட்ட மேசையில் 
ஆராயப்பட்டுள்ளது.
மேலும், பிரித்தானியா சென்ற பின்னர் ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையில் ஏற்படப்போகும் அல்லது எதிர்பார்த்திருக்கும் தமிழர் தரப்புக்கு பாரிய பின்னடைவாக இருக்காதா என்பது பற்றியும் மேலும் பல விடயங்கள் பற்றியும் வட்ட மேசையில் பிரித்தானியாவில் உள்ள சிரேஸ்ர சட்டத்தரணி அருணாசலம் கணநாதன் விடையளித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

புதன், 3 ஆகஸ்ட், 2016

வீதிகளில் திடீர் பாதுகாப்பு ஆயுதம் தாங்கிய பொலிசார் குவிப்பு !

பொதுமக்களை பாதுகாக்க அதிரடியாக களமிறங்கிய லண்டன் பொலிஸ்
பொதுமக்களின் பாதுகாப்பு கருதி லண்டன் வீதிகளில் ஆயுதம் தாங்கிய பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
லண்டன் மேயர் Sadiq Khan - யின் அறிவுறுத்தலின்படி, உயர் காவல் ஆணையர் Bernard Hogan இதனை அமல்படுத்தியுள்ளார்.
பொது உத்தரவாதம் மற்றும் தீவிரவாத தாக்குதலை தடுத்து நிறுத்துவதே இதன் நோக்கம் ஆகும் என காவல் ஆணையர் கூறியுள்ளார்.
ஆயுதம் தாங்கிய அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என இதற்கு முன்னரே அறிவிக்கப்பட்டது, இதன்படி மொத்தம் 2,8000 பொலிஸ் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நைஸ் நகரில் நடைபெற்ற தாக்குதலில் 84 பேர் கொலை செய்யப்பட்டனர், இந்த தாக்குதலின் எதிரொலியாக இந்த நடைமுறை விரைந்து செயல்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து காவல் ஆணையர் Bernard கூறியதாவது, ஜேர்மன், பிரான்ஸ், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்று வரும் தாக்குதல்களை நாங்கள் கவனத்தில் எடுத்துள்ளோம்.
அதுபோன்று தாக்குதல்கள் பிரித்தானியாவில் நடைபெறுவதற்கு ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம், அதனை புறக்கணிக்க வேண்மெனில், ஆயுதம் தாங்கிய பொலிசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
கனரக ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகளை சமாளிப்பதற்காக, லண்டனில் ஆயுதம் ஏந்திய பொலிசாரின் எண்ணிக்கையை
 அதிகரிக்க வேண்டும்.
அதுமட்டுமின்றி பிரித்தானியாவில் தாக்குதுல் நடத்தப்போகிறோம் என்ற எச்சரிக்கை தொடர்பான செய்திகளில் ஊடகங்களில் வெளியான வண்ணம் இருப்பதால், மக்கள் மத்தியிலும் ஒருவித பயஉணர்வு 
ஏற்பட்டுள்ளது.
எனவே, தீவிரவாத தாக்குதலில் இருந்து மக்களை பாதுகாப்பதற்காக இந்த நடைமுறையை கையில் எடுத்துள்ளோம் என கூறியுள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் 600 பொலிசாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, தற்போது அதன் மொத்த எண்ணிக்கை 2,800 ஆக
 உயர்த்தப்பட்டுள்ளது.
வேல்ஸ் மற்றும் இங்கிலாந்து பகுதியில் மட்டும் 1,500 துப்பாக்கி ஏந்திய அதிகாரிகளுக்கு புதிதாக பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது.
ஸ்கொட்லாந்தில், ஆயுதம் தாங்கிய வானங்கள் பிரிவில் புதிதாக ஆட்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அதுமட்டுமன்றி 90 பொலிஸ் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது, இந்த பிரிவில்
 மொத்தம் 365 பேர் உள்ளனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>