நிலாவரை .கொம்

siruppiddy

திங்கள், 15 ஆகஸ்ட், 2016

பயணிஒருவர் ஓடும் விமானத்தில் ஏற முயன்றர்!

பொலிவியா நாட்டை சேர்ந்த வாலிபர் ஒருவர் ஸ்பெயினுக்கு வந்திருந்தார். அவர் மாட்ரிட் நகரில் இருந்து கிரான் கெனேரியா நகருக்கு செல்வதற்காக ரெயான் நிறுவன விமானத்தில் டிக்கெட் வாங்கி 
இருந்தார்.
இதற்காக விமான நிலையத்துக்கு வந்த அவர், உரிய நேரத்தில் விமானத்தில் ஏறவில்லை. விமானம் புறப்படும் நேரத்தில் ஏறுவதற்காக ஓடி வந்தார். அதற்குள் விமான பாதை இணைப்பை துண்டித்து விட்டு விமானம் புறப்படுவதற்காக ஓடு தளத்தை நோக்கி
 சென்றது.
விமானம் அந்த இடத்தை விட்டு சென்றதை பார்த்த அந்த பயணி குகை பாதை வழியாக கீழே குதித்து விமானத்தை நோக்கி ஓடினார். அவர் 2 பைகளும் வைத்திருந்தார்.
திடீரென ஒருவர் விமானத்தை நோக்கி வருவதால் தீவிரவாதிதான் தாக்க வருகிறார் என கருதி பரபரப்பு ஏற்பட்டது.
விமான நிலைய உள் பகுதியில் இருந்த ஊழியர்கள் அவரை மடக்கி பிடித்தனர். அதற்குள் விமானம் அங்கிருந்து புறப்பட்டு
 சென்று விட்டது.
அவரிடம் விசாரித்த போது, விமானத்தை பிடிப்பதற்காகத்தான் ஓடி வந்தேன் என்று கூறினார். அவரை அங்கிருந்து பாதுகாப்பு அதிகாரிகள் அழைத்து சென்றனர்.
பாதுகாப்பு விதிகளை மீறி விமான ஓடுதளத்தில் செல்வது தவறானது. இதற்காக அவர் ரூ.25 லட்சம் வரை அபராதம் செலுத்த வேண்டியது வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த பயணி பற்றிய மற்ற தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக