நிலாவரை .கொம்

siruppiddy

திங்கள், 17 ஜூன், 2013

எட்வார்ட் ஸ்னோவ்டெனுக்கு இங்கிலாந்து செல்வதற்கு ??


 அமெரிக்க தேசிய பாதுகாப்பு முகவர் நிலையத்தின் மீது பகிரங்கமாக குற்றஞ் சாட்டிய "எட்வார்ட் ஸ்னோவ்டென்" அமெரிக்காவை விட்டு தற்போது பேங்காக்கில் தங்கியிருக்கலாம் என ஒரு சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் இங்கிலாந்து ஸ்னோவ்டெனுக்கு தஞ்சமளிக்க வெளிப்படையாகவே மறுப்பு தெரிவித்துள்ளது. அத்துடன் உலகின் முக்கிய ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் அனைத்துக்கும் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
தாய்லாந்து விமான நிலையத்தில் ஸ்னோவ்டென்னின் புகைப்படம் ஒண்றைக் கண்ட அசோசியெட் பிரஸ் ஊடகவியலாளர் இது தொடர்பில் பிரித்தானியாவிடம் விசாரித்த போதே பிரிட்டன் விடுத்திருந்த இக்கட்டளைப் பற்றி தெரியவந்துள்ளது.
அக்கட்டளையில் "ஸ்னோவ்டென் இரகசியமாக இங்கிலாந்து வருவதற்கு முயற்சிக்க கூடும். எனவே அவருக்கு எந்தவொரு ஏர்லைன்ஸ் விமானமும் தமது சேவையை பயன்படுத்த அனுமதி தரக்கூடாது" என கூறியுள்ளது.
இதேவேளை ஸ்னோவ்டெனுக்கு இந்தியா புகலிடமளிக்க வேண்டுமென விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் தெரிவித்துள்ளார்.
மேலும், ஸ்னோவ்டென் தொலைத் தொடர்பு, இணையச் சேவைகள், சமூக வலைத்தளங்கள் உதவியுடன் பெருமளவிலான இந்தியர்களின் தனிப்பட்ட விபரங்களையும் அமெரிக்க பாதுகாப்புத்துறை சேகரிக்க முனைவதாக குற்றம் சாட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்னோவ்டென் இந்த இரகசிய நடவடிக்கை பற்றி வெளியுலகுக்கு தெரியப்படுத்தியதற்காக இந்தியா அவருக்கு நன்றி கூறவேண்டும்.
இதற்காகவாது இந்தியா அவருக்கு புகலிடம் அளிகக் வேண்டும் என ஜூலியன் அசாஞ்ச் கூறியுள்ளார்.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக