நிலாவரை .கொம்

siruppiddy

வியாழன், 13 ஜூன், 2013

இங்கிலாந்து வீரரைத் தாக்கிய டேவிட்


   இங்கிலாந்து வீரரொருவரை அவுஸ்திரேலிய அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் டேவிட் வோணர் தாக்கியதாக இங்கிலாந்துக் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. அத்தோடு, இந்தத் தாக்குதல் காரணமின்றி இடம்பெற்றதாக அச்சபை தெரிவித்துள்ளது.
  
 டேவிட் வோணரின் நடவடிக்கை காரணமாக நியூசிலாந்திற்கெதிராக இடம்பெற்றுவரும் போட்டியில் அவர் விளையாடுவதற்கு அவுஸ்திரேலியக் கிரிக்கெட் சபை அனுமதி மறுத்திருந்த நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான நேற்றைய போட்டியில் அவர் 12ஆவது வீரராகச் செயற்பட்டிருந்தார்.
 
 குறித்த சம்பவம் தொடர்பாக ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள இங்கிலாந்துக் கிரிக்கெட் சபை, கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தச் சம்பவம் இடம்பெற்றதாகத் தெரிவித்தார்.
 
 அவுஸ்திரேலிய, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டி நிறைவடைந்த பின்னர், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணிக்கு மதுபோதையில் டேவிட் வோணர் இந்தத் தாக்குதலை மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
 தாக்கப்பட்ட வீரர் தொடர்பான தகவல்களை இதுவரை இரண்டு நாட்டுக் கிரிக்கெட் சபைகளும் வெளிப்படுத்தியிருக்காத போதிலும், தாக்குதலுக்கு உள்ளாவனர் ஜோ றூட் எனத் தெரிவிக்கப்படுகிறது.
 
 குறித்த சம்பவம் இடம்பெறும்போது ஜோ றூட், ஸ்ருவேர்ட் ப்ரோட், கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் குறித்த மதுபானசாலையில் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக