நிலாவரை .கொம்

siruppiddy

ஞாயிறு, 16 ஜூன், 2013

பிரான்ஸில் சீன மாணவர்கள் மீது தாக்குதல்


 பிரான்ஸ் நாட்டின் "போர்டே" பகுதி மது உற்பத்திக்கு பிரசித்தி பெற்றதோடு அங்கு மொத்தம் 120000 ஹெக்டர் பரப்பளவில் திராட்சை உற்பத்தி நடைபெற்று வருகின்றது.
அங்கு ஆண்டுதோறும் சராசரியாக 700 மில்லியன் பாட்டில்கள் மது தயாரிக்கப்படுகின்றது.
சீன மாணவர்கள் 6 பேர் மது தயாரிப்பைப் பற்றி ஒரு வருடம் படிப்பதற்கும், பயிற்சி பெறவும் இங்கு வந்து போர்டே அருகில் உள்ள லேண்டஸ் என்ற பகுதியில் உள்ள ஹோஸ்டன்ஸ் என்ற கிராமத்தில் ஒரு வீட்டில் தங்கியிருந்தனர்.
கடந்த வெள்ளிக்கிழமையன்று அந்தப் பகுதிக்கு வந்த மூன்று பேர் நன்கு குடித்துவிட்டு மாணவர்கள் இருக்கும் வீட்டின் முன் வந்து வீட்டினுள் நுழைய முற்பட்டவேளை மாணவர்கள் அவர்களைத் தடுத்தனர்.
அப்போது ஏற்பட்ட கலவரத்தில், அங்கிருந்த ஒரு மாணவியின் முகத்தில் கண்ணாடி பாட்டில் குத்தியதால் காயமேற்பட்டது.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பிரான்சின் உள்துறை அமைச்சரான மானுவல் வல்ஸ், இது இனவெறியைக் குறிக்கும் என்று கண்டனம் தெரிவித்தார். இத் தாக்குதல் சீன மக்களிடையே பெரும் அதிருப்தியைத் தோற்றுவித்துள்ளது.
ஒரு பிரபலமான இணையதளத்தில் சீன மக்கள் தங்கள் கோபத்தை வெளிக்காட்டியுள்ளனர். "பிரான்சின் நற்பெயர் கெட்டுவிட்டது என்றும் சீன மக்கள் பிரான்ஸ் நாட்டிற்கு செல்லக்கூடாது" என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
பிரான்சிலுள்ள திராட்சைத் தோட்டங்களில் சீனர்கள் முதலீடு செய்வது உள்ளூர் மக்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளதால், அதன் வெளிப்பாடாக இந்தத் தாக்குதல் இருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக