நிலாவரை .கொம்

siruppiddy

செவ்வாய், 18 ஜூன், 2013

விளைவுகளை சந்திக்க நேரிடும்: ஐரோப்பிய நாடுகளுக்கு சிரியா

 
சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கும் போராளிகளுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இதில், இதுவரை 93,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த போரில் பொதுமக்கள் மீது அதிபர் படை இராசயன ஆயுதங்களால் தாக்குகிறது என்று அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
இதனால் போராளிகளுக்கு ஆயுதங்கள் வழங்கி அமெரிக்கா உதவும் என்று கூறியது. இதற்கு சவால் விடும் விதமாக சிரியாவின் முக்கிய ஆதரவு நாடான ரஷ்யாவும், சிரியாவிற்கு ராஜதந்திர உதவிகள் மற்றும் ஏவுகணைகள் அனுப்பிவைக்கப்படும் என்று கூறியது.
இந்நிலையில், ஜெர்மனியில் இருந்து வெளியாகும் நாளிதழுக்கு சமீபத்தில் பேட்டியளித்த சிரியா அதிபர் பஷர் அல் ஆசாத் ஐரோப்பிய நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அந்த பேட்டியில் பஷர் அல் ஆசாத் கூறியுள்ளதாவது:-
எனது ஆட்சிக்கு எதிராக போராடி வரும் கலகக்காரர்களுக்கு ஐரோப்பிய நாடுகள் ஆயுதங்களை அளித்தால், நாளடைவில் கொல்லைப்புறம் வழியாக அந்த நாடுகளில் தீவிரவாதம் தலைதூக்கும்.
தற்போதைய செயல்களுக்காக பின்நாளில் அந்த நாடுகள் எல்லாம் பெரும் விலையை தர வேண்டியதாகி விடும். கடும் விளைவுகளையும் சந்திக்க நேரிடும்.
இந்த தீவிரவாதிகள் பிரிவினை கொள்கையுடன் ஐரோப்பிய நாடுகளின் அரசுக்கு எதிராக கடுமையான உள்நாட்டுப் போரில் ஈடுபடுவார்கள்.
எனது மக்களுக்கு எதிராக நான் ரசாயன ஆயுதங்களை உபயோகிப்பதாக குற்றம் கூறும் பிரான்ஸ், இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகள், தங்களது கூற்றுக்கு ஆதாரம் இருந்தால் அதை உலக மக்களின் முன்பு நிரூபிக்க வேண்டும்.
ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி எங்கள் ராணுவம் 150 பேரை கொன்றுவிட்டதாக இந்த நாடுகள் அபத்தமான பொய்யை கூறி வருகின்றன.
ரசாயன ஆயுதம் என்பது, ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான மக்களை அழிப்பதற்காக உருவாக்கப்பட்டவைதான். இவற்றை பயன்படுத்தி 150 பேர் மட்டும் உயிரிழந்துள்ளனர் என்று இந்த நாடுகள் குற்றம் சாட்டுவதை வைத்தே இவர்கள் கூறுவது அபத்தமான பொய்தான் என்பது உலகிற்கு தெரியும் என அசாத் குறிப்பிட்டுள்ளார்
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக