தீவிரவாதிகளின் சதி காரணமா? கொலம்பியாவில் விமானம் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியாகி உள்ளனர்.
அமெரிக்க இராணுவ படைக்கு தேவையான மருந்து பொருட்களை ஏற்றிக் கொண்டு டிஹெச் 8 என்ற சிறிய ரக விமானம் ஒன்று கொலம்பியா வழியாக சென்றது.
இதில் விமானி உட்பட 6 பேர் பயணம் செய்தனர். பனாமா எல்லை பகுதி கொலம்பியா கபூர்கானா நகரம் அருகே அதிகாலை 1 மணியளவில் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது விமானம் திடீரென விழுந்து நொறுங்கியது.
இதில் அமெரிக்கர்கள் 4 பேர் பலியாகினர், 2 பேர் படுகாயமடைந்தனர். இவர்கள் ஆபத்தான நிலையில் பொகோடா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தகவல் அறிந்து சென்ற கொலப்பிய இராணுவ வீரர்கள் விரைந்து சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.
விமானம் எப்படி விபத்துக்குள்ளானது என்பது மர்மமாக உள்ளது, கொலம்பியா தீவிரவாதிகள் யாராவது விமானத்தை சுட்டு வீழ்த்தி இருக்கலாம் என்று பரபரப்பாக பேசப்படுகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக