நிலாவரை .கொம்

siruppiddy

ஞாயிறு, 29 மார்ச், 2020

ஒரே நாளில் கொரோனாவினால் இத்தாலியில் மடிந்த 919 பேர் பெரும் சோகம்

கோவிட்-19 (கொரோனா வைரஸ்) தாக்கத்தினால் 28.03.20.ஒரே நாளில் இத்தாலியில் 919 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவினால் ஒரே நாளில் ஏற்பட்ட அதிகபட்ச உயிரிழப்பாக இது 
பதிவாகியுள்ளது. கொரோனா தாக்கம் தலைவிரித்தாடும் இன்னொரு நாடான ஸ்பெயினில் நேற்றும் 700 இற்கும் அதிக உயிரிழப்புக்கள் பதிவாகின.
உலகளவில் இதுவரை கொரொனா 
பாதிப்பினால் 27,250 பேர் உயிரிழந்துள்ளனர்.கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 594,377 ஆக உயர்ந்துள்ளது.நேற்று மட்டும் உளவளவில் 3,177 பேர் உயிரிழந்தனர்.இத்தாலியின் மொத்த உயிரிழப்பு 9,134 ஆக உயர்ந்துள்ளதுள்ளது. 86,000 க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஸ்பெயினில் 28.03.20. 769 புதிய உயிரிழப்புகள் பதிவாகின. நாட்டின் மொத்த உயிரிழப்பு 5,138 ஆக 
உயர்ந்துள்ளது.
ஜோர்டான்:கொரோனாவினால் முதல் உயிரிழப்பை ஜோர்டான் அறிவித்துள்ளது. நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 235ஆக உள்ளது.மார்ச் 21ஆம் திகதி தனது வான், கடல் எல்லைகளை ஜோர்டான் மூடியது. இதன் பின்னர், மறுஅறிவித்தல் வரை நாட்டை முடக்கியுள்ளது. இதன்பின்னர் முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. 80 வயதான பெண் மணியொருவர் உயிரிழந்துள்ளார். இவர் மருத்துவ தேவைகளை கொண்ட ஒருவர் என்றும் ஜோர்டான் 
தெரிவித்துள்ளது.
அமெரிக்கா:அடுத்த 100 நாட்களில் 100,000 வென்டிலேட்டர்களை உருவாக்கப்படவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். தமது நாட்டு தேவைக்கும் அதிகமாக இது இருப்பதாகவும், பாதிக்கப்பட்ட நாடுகளிற்கு இவற்றை 
வழங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். முன்னதாக, அமெரிக்காவில் கொரோனா தொற்றாளர்களிற்கு சிகிச்சையளிக்க போதிய வெண்டிலெட்டர்கள் இல்லையென மருத்துவத்துறையை சேர்ந்தவர்கள் குற்றம் சுமத்தியதையடுத்து, ட்ரம்பின் இந்த 
அறிவிப்பு வெளியாகியுள்ளது.
உலகில் கொரோனாவினால் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா அமைந்துள்ளது. அங்கு, 102,464 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று அங்கு 312 பேர் உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்பு 1,607 ஆக உயர்ந்துள்ளது.கொரோனா வைரஸை 
எதிர்த்துப் போராடுவதற்கு அமெரிக்காவிற்கு இவ்வளவு வென்டிலேட்டர்கள் தேவையில்லை, பின்னர் பிற நாடுகளுக்கு உதவ ஒரு பெரிய வாய்ப்பு இருப்பதாக டிரம்ப் கூறினார்.
பிரான்சில் நேற்று 299 பேர் உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்பு 1995 ஆக உயர்ந்தது. ஈரானில் நேற்று 144 பேர் உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்பு 2,378 ஆக உயர்ந்தது. இங்கிலாந்தில் நேற்று 181 பேர் உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்பு 759 ஆக உயர்ந்தது. நெதர்லாந்தில் நேற்று 112 பேர் உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்பு 546 ஆக உயர்ந்தது.

இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக