நிலாவரை .கொம்

siruppiddy

வியாழன், 25 பிப்ரவரி, 2021

தொற்றுக் கூடிய இடங்களில் பிரான்சில் உள்ளூர் மட்டத்தில் முடக்கம்

 பிரான்சில் வைரஸ் தொற்று வீதம் அதிகமாக உள்ள பகுதிகளில் உள்ளூர் மட்டத்தில் பொது முடக்கங்களை அமுல்ப்படுத்த அரசு தீர்மானித்துள்ளது. நாடளாவிய தேசிய பொது முடக்கம் ஒன்றைத் தவிர்க்கும் ஓர் உத்தியாகவே பகுதி அளவில் கட்டுப்பாடு களை (reconfinement partiel) நடைமுறைப் படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நீஸ் மற்றும் கேன் நகரங்களை உள்ள டக்கிய Alpes-Maritimes கடற்கரைப் பிராந்தியத்தில் ஏற்கனவே இறுக்கமான கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதே போன்று Hauts-de-France, Ile-de-France, Grand-Est, Provence-Alpes-Côte d’Azur பிராந்தியங்களில் பத்து மாவட்டங் களில் தொற்று நிலைவரம் மிகக் கவலை யளிக்கும் விதமாக அதிகரித்துவருகின் றது. அங்கெல்லாம் பகுதி அளவில் உள்ளூர் முடக்கங்களை(confinements locaux) அறிவிக்க உத்தேசிக்கப்பட்டிருப் பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
பிரதமர் Jean Castex,,25-02-2021,இன்று வியாழக் கிழமை மாலை நடத்தவுள்ள செய்தியாளர் மாநாட்டில் மாவட்ட ரீதியான கட்டுப்பாடுகள் குறித்த விவரங்களை வெளியிட உள்ளார் என்று அரசாங்கப் பேச்சாளர் கப்ரியேல் அட்டால் இன்று அறிவித்துள்ளார்.
கொரோனா தொற்று ஆரம்பித்த காலம் முதல் சில ஐரோப்பிய நாடுகள் உள் நாட்டுக்குள் பிராந்திய ரீதியான பொது முடக்கங்களைக் கடைப்பிடித்து வருகின்ற போதிலும் பிரான்ஸில் அத்தகைய பகுதி அளவிலான முடக்கக் கட்டுப்பாடுகளை அரசு தவிர்த்து வந்தது. 
தற்போது வைரஸின் புதிய திரிபுகள் நாடெங்கும் அச்சுறுத்தலை 
ஏற்படுத்தி வருகின்றன.
 இதனால் தேசிய அளவில் நாட்டை மூன்றாவது முறையாக முடக்கவேண்டிய கட்டம் நெருங்கி வருவதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர். நாடளாவிய ரீதியான முடக்கம் ஒன்றை இயன்றவரை தவிர்ப்பது என்ற தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்துவருகின்ற அரசுத் தலைமை அதற்காக மாற்று வழிகள் அனைத்தையும் கடைப்பிடிப்பதற்குத்
 தீர்மானித்திருக்கின்றது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>

 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக