நிலாவரை .கொம்

siruppiddy

திங்கள், 9 செப்டம்பர், 2013

மூன்று நாள் தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டம்!


திட்டமிட்டதைவிட அதிக தீவிரமாக சிரியாவின் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக லாஸ் ஏஞ்சலீஸ் டைம்ஸ் நாளிதழ் தெரிவித்துள்ளது.

மூன்று நாள்களுக்கு தாக்குதல் நடத்த ராணுவத் தலைமை திட்டமிட்டுள்ளதாகவும் அந்த நாளிதழ் தெரிவித்துள்ளது.
இது குறித்து ஞாயிற்றுக்கிழமை அந்நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:
சிரியாவில் முன்கூட்டியே முடிவு செய்யப்பட்ட இலக்குகளில் ஏவுகணைகளைக் கொண்டு சரமாரியாகத் தாக்கவும், இத்தாக்குதலில் தப்பிய இலக்குகளின்மீது உடனடியாக மறுதாக்குதல் தொடுக்கவும் ராணுவத் தலைமையகம் முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆரம்பத்தில் தேர்வு செய்து வைத்திருந்த 50 இலக்குகளைத் தவிர, மேலும் பல புதிய இலக்குகளைத் தேர்வு செய்யுமாறு அதிபர் மாளிகை கேட்டுள்ளது.
தற்போது மத்திய தரைக்கடல் பகுதியில் முகாமிட்டுள்ள ஏவுகணை அழிப்புக் கப்பல்களின் உதவியுடன், தாக்குதல் விமானங்கள் மூலம், ஏவுகணைகளைக் கொண்டும் சிரியா விமானப்படையை அழிக்க பென்டகன் திட்டமிட்டு வருகிறது.

வேகமாகச் செல்லக்கூடிய ஒரு குரூஸர் வகைப் போர்க்கப்பல், மூன்று தாக்குதல் கப்பல்களுடன் யு.எஸ்.எஸ் நிமிட்ஸ் விமானம் தாங்கிக் கப்பல், சிரியா மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்த வசதியாக செங்கடலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சிரியா மீது பலமுறை சரமாரித் தாக்குதல் நடைபெறும் என்றும், மூன்று நாட்களுக்குள் இலக்குகள் அழிக்கப்பட்டுவிடும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையே, சிரியா மீது ராணுவ நடவடிக்கை மேற்கொள்வதற்கு உலக நாடுகளின் ஆதரவு பெருகி வருவதாக அமெரிக்காவும், பிரான்ஸýம் கூறியுள்ளன.

இதேவேளை, சிரியா மீது அமெரிக்கா ராணுவ நடவடிக்கை எடுப்பதற்கு எதிராக அமெரிக்காவில் நூற்றுக்கணக்கானவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஞாயிற்றுக்கிழமை வெள்ளை மாளிகை திரண்ட அவர்கள், போருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

வீடியோ ஆதாரங்கள் வெளியீடு: சிரியா அதிபர் அல்-அஸாதின் படைகள் நடத்தியதாகக் கூறப்படும் ரசாயனத் தாக்குதல் காட்சிகள் இடம்பெற்றுள்ள 13 வீடியோக்களை அமெரிக்க உளவுத்துறை வெளியிட்டுள்ளது. சிரியா மீது ராணுவத் தாக்குதல் நடத்துவதற்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலை அதிபர் ஒபாமா கோரவிருக்கும் நிலையில், அதற்கு ஆதரவு திரட்டும் வகையில் இந்த வீடியோ காட்சிகள் வெளியிடப்பட்டன.

தொடக்கத்தில் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குக் காட்டப்பட்ட இந்த வீடியோக்கள், பொதுமக்களின் ஆதரவுக்காக சி.என்.என் தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்பானது.

ஆகஸ்ட் 21 அன்று சிரியாவில் நடைபெற்ற ரசாயனத் தாக்குதலில், 1,429 பேர் இறந்ததாகக் கூறப்படுகிறது
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக