நிலாவரை .கொம்

siruppiddy

வெள்ளி, 27 செப்டம்பர், 2013

மீண்டும் தாக்குதல் கென்யாவில் பயங்கரவாதிகள்


 
கென்யாவின் எல்லைப்பகுதிகளில் சோமாலியா பயங்கரவாதிகள் நடத்திய இருவேறு தாக்குதல் சம்பவங்களில் 2 காவலர்கள் உட்பட 3 பேர் கொல்லப்பட்டதாகவும், 3 காவலர்கள் உட்பட 7 பேர் காயமடைந்ததாகவும் கென்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கென்யாவின் எல்லைப்பகுதியிலுள்ள மந்தெரா நகரத்தில் தீவிரவாதிகள் நேற்று வியாழக்கிழமை நடத்திய தாக்குதலில் காவலர்கள் 2 பேர் கொல்லப்பட்டனர். 3 பேர் காயமடைந்தனர்.

முன்னதாக புதன்கிழமை இரவு, அங்குள்ள மற்றொரு நகரமான வாஜிரில் தீவிரவாதிகள் தாக்கியதில் ஒருவர் கொல்லப்பட்டார். 4 பேர் காயமடைந்தனர்.
கென்ய தலைநகர் நைரோபியிலுள்ள வெஸ்ட்கேட் வணிகவளாக தாக்குதலில் ஈடுபட்ட அல்-ஷஹாப் தீவிரவாத குழுவைச் சேர்ந்த தீவிரவாதிகள் இந்தத் தாக்குதலை நடத்தியதாக கென்ய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

சோமாலியாவிலுள்ள கென்ய படையினருக்கு, பயங்கரத் தாக்குதலை சந்திக்க தயாராக இருக்குமாறு அல்-ஷஹாப் தீவிரவாத பிரிவினர் ஏற்கெனவே மிரட்டல் விடுத்திருந்தனர்.

இதனிடையே 67 பேரை பலி கொண்ட வெஸ்ட்கேட் வணிகவளாகத்தில் வியாழக்கிழமை முதல் பிரிட்டன், அமெரிக்கா, இஸ்ரேல், ஜெர்மனி, கனடா உள்ளிட்ட பன்னாட்டு தடயவியல் நிபுணர்கள் சோதனைகளில்

ஈடுபட்டுள்ளதாகவும் ஒருவாரத்திற்குள் தடயங்கள் சேகரிக்கப்படும் என்றும் கென்ய உள்துறை அமைச்சர் ஜோஸப் ஒலெ லெங்கு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் வெஸ்ட்கேட் வணிகவளாக தாக்குதலில் 137 பேர் கொல்லப்பட்டதாக அல்-ஷஹாப் தீவிரவாத அமைப்பினர் டுவிட்டர் வலைதளத்தில் தெரிவித்துள்ளனர்.

மேலும் அல்-காய்தா சார்பு தீவிரவாத இயக்கம் ஒன்று, கென்ய படையினர் ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டியுள்ளது
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக