நிலாவரை .கொம்

siruppiddy

திங்கள், 2 நவம்பர், 2015

ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக்கொள்ள கூடாது சீன மக்களுக்கு அரசு அறிவிப்பு !!!

சீனாவில் ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக்கொள்ள கூடாது என்ற உத்தரவு திரும்ப பெறப்படுவதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. இந்த உத்தரவு நடைமுறைக்கு வரும் வரையில் ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக்கொள்ள கூடாது என்ற தடை நீடிக்கும் என்று இப்போது 
அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் மக்கள் தொகை இப்போது 130 கோடியை தாண்டி உள்ளது.  மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதற்காக சீன அரசு ஒரு குழந்தை கொள்கையை கொண்டு வந்தது.  அதாவது ‘ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை’
 என்ற திட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. இதற்கு பல எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் சில கட்டுப்பாடுகளுடன் 2-வது 
குழந்தை 
பெற்றுக்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் அரசு வேலைகளில் உள்ளவர்கள் 2-வது குழந்தை பெற்றுக்கொண்டால், கடுமையான அபராதத்துடன் அரசு வேலையும் பறிக்கப்படும் என அரசு அறிவித்திருப்பது நினைவுகூரத்தக்கது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக