நிலாவரை .கொம்

siruppiddy

சனி, 21 நவம்பர், 2015

நிலக்கரி சுரங்கத்தில் பாரிய தீ விபத்து: 21 பேர் பலி

சீனாவில் வடகிழக்கு பகுதியில் உள்ள  ஜிக்ஸி நகரத்தில் மாகாண அரசுக்கு சொந்தமான நிலக்கரி சுரங்கம் ஒன்று உள்ளது. இந்த நிலக்கரி சுரங்கத்தில் 38 சுரங்க ஊழியர்கள் பணியாற்றிக்கொண்டு 
இருந்தனர். 
இந்த நிலையில், நேற்று மாலை சுரங்கத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 21 பேர் சிக்கி உயிரிழந்தனர். 16 பேர் அதிருஷ்டவசமாக உயிர் தப்பினர். ஒருவரை காணவில்லை. மாயமானவரை மீட்பு படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். 
சுரங்கத்தில் தற்போது தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ விபத்தை தொடர்ந்து எந்த பிரச்சினையும் அங்கு ஏற்பட்டுள்ளதாக எந்த தகவலும் இல்லை. சீனாவில் உள்ள நிலக்கரி சுரங்களில் விபத்துக்கள் ஏற்படுவது பொதுவான
 நிகழ்வாகியுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக