பாரிஸ் புறநகர்ப் பகுதியில் உள்ள , தொடர்மாடி குடியிருப்பு ஒன்றில் பதுங்கி இருந்த 10க்கும் மேற்பட்ட ஐ.எஸ் தீவிரவாதிகளை பிரெஞ்சுப் பொலிசார் சுற்றிவளைத்தார்கள். அங்கே கடும் துப்பாக்கிச்
சண்டை மூண்டது.
பல தீவிரவாதிகள் ஏகே 47 ரக துப்பாக்கிகளை கொண்டு பொலிசாரை தாக்கினார்கள். இதேவேளை குறித்த வீட்டுக்குள் செல்ல முன்னர் , அங்கே பொறிவெடி ஏதாவது இருக்கிறதா என்று பார்க்க டீசல் என்னும் மோப்ப நாய் குட்டியை பொலிசார் அனுப்பியுள்ளார்கள். அதுவும் வெடி குண்டு மணக்கும் திசை நோக்கிச் சென்றுள்ளது.
ஆனால் தன்னை நோக்கி பொலிசாரும் நெருங்கி வந்ததாக நினைத்த தீவிரவாதி(பெண்) உடனே வெளியே வந்து ஏகே 47 ரக துப்பாக்கியால் சுட்டு, பின்னர் வெடிகுண்டு ஜாக்கெட்டை வெடிக்கவைத்துள்ளார். இதனால் டிசல் என்னும் இந்த மோப்ப நாயும் துண்டு துண்டாக சிதறி
இறந்து போனது.
இதனால் பொலிசார் பெரும் கவலையில் உள்ளார்கள். குறித்த இந்த மோப்ப நாய் இல்லாவிட்டால் , அப்பென் பொலிசாரிடம் வந்து குண்டை வெடிக்கவைத்து இருப்பார். இதனால் பலர் இறக்க நேரிட்டு இருக்கும் என்று பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
பிரான்சில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் , டிசலுக்கு மரியாதை செய்து வருகிறார்கள். பேஸ் புக்கில் டிசலின் படம் தீ யாக
பரவி வருகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக