எவரெஸ்ட் சிகரம் வெப்பமடைவதால் பனிமலைகள் உருகும் அபாய நிலை ஏற்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இது குறித்து ஹுனான் பல்கலைக்கழகத்தின் சீன அறிவியல் அகாடமியும், குயோ மோ லாக்மா பனிசிறுத்தை சரணாலய மையமும் இணைந்து ஆய்வை நடத்தியது.
இதற்கு முக்கிய காரணம் காலநிலை மாற்றமே எனவும் அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் எவரெஸ்ட் பனிமலை உருகி அதன் அளவு சுருங்கி வருவதாகவும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இதன் காரணமாக திபெத்தில் ஏரிகள் பல மடங்கு
பெருகியுள்ளது.
2010ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தற்போது 80 சதவீதம் ஏரிகள் அதிகரித்துள்ளது. அது மட்டுமன்றி திபெத்தில் வனப்பகுதி அதிக அளவில் பரவியுள்ளது.
ஐக்கிய நாடுகளின் செயலாளர் பான்கீ முன் பருவநிலை மாற்ற விளைவுகளைத் தடுக்க உலக நாடுகள் எரிசக்தி புரட்சியை மிக விரைவில் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தலை விடுத்துள்ளார் என்பதும்
குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக