நிலாவரை .கொம்

siruppiddy

புதன், 9 டிசம்பர், 2015

விபத்துகுள்ளன பெண் பாதசாரி பலி!!

பிரம்ரனில் இடம்பெற்ற விபத்தொன்றில் காயமடைந்த பெண் பாதசாரி ஒருவர் 08,12,2015,செவ்வாய்கிழமை அதிகாலை உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
48 வயதான அந்த பெண்மணி கடந்த திங்கட்கிழமை பின்னிரவு வேளையில் பிரம்ரனில் உள்ள கார்கள் கழுவும் இடத்தின் வாகனத் தரிப்பிடத்தில் வாகனம் ஒன்றினால் மோதப்பட்டு காயமடைந்திருந்தார் என பீல் பிராந்தியக் காவல்த்தறையினர் தெரிவித்துள்ளனர்.
விபத்து நேர்ந்ததை அடுத்து Williams Parkwayக்கு அருகில் 9499 விமான நிலைய வீதியில் உள்ள கார் கழுவும் இடத்திற்கு அவசர மீட்புப் பிரிவினர் திங்கட்கிழமை இரவு 8.30 மணியளவில் வரவழைக்கப்பட்டனர்.
பின்னர் காயமடைந்த அந்த பெண் முதலில் உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் என்றும், பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மத்திய மருத்துவ நிலையித்திற்கு மாற்றப்பட்டிருந்தார் என்றும் காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.
எனினும் இன்று செவ்வாய்கிழமை காலையில் சிகிச்சை பயனளிக்காத நிலையில் மருத்துவமனையில் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை அவரை மோதிய black Cadillac Escalade வாகனம் கனரக வாகனத்தின் உதவியுடன் சம்பவ இடத்தில் இருந்து அகற்றப்பட்டுள்ளது.
அத்துடன் சம்பவம் தொடர்பில் இன்னமும் யார் மீதும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படவில்லை.காவல்த்துறையினர் தொடர்ந்தும் விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக