நிலாவரை .கொம்

siruppiddy

சனி, 2 ஜூன், 2018

அகதிகளுக்கு ஜேர்மனியில் இனி இடமில்லை!

ஆயிரக்கணக்கான அகதிகளை கரம் நீட்டி வரவேற்ற ஜேர்மன் நகரம் ஒன்று தற்போது தங்கள் நகரம் நிரம்பி வழிவதாகவும் இனி அங்கு அகதிகளுக்கு இடமில்லை என்றும் தெரிவித்துள்ளது.
ஜேர்மனியின் Salzgitter நகரத்தின் இந்த முடிவால் ஏற்கனவே யுத்தத்தால் பிரிக்கப்பட்ட குடும்பங்கள் இன்னும் தங்கள் அன்பிற்குரியவர்களுடன் சேர முடியாத சூழ ஏற்பட்டுள்ளது.
ஆனால் இன்னும் பலரை நகருக்குள் அனுமதிப்பதால் அதன் உள்கட்டமைப்பும் ஒருங்கிணைப்பும் பாதிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.



ஜேர்மனியின் வடக்கிலிருக்கும் நகரமான Salzgitter, நாட்டில் புதிய வாழ்க்கையை தேடி வரும் அகதிகளுக்கு புகலிடம் அளிக்கும் நகரம் என்னும் வரலாற்றுப் பெருமை கொண்ட நகரமாகும்.



2015 ஆம் ஆண்டு அகதிகள் பிரச்சனையின்போது ஏஞ்சலா மெர்க்கல் அகதிகளை தங்கள் நாட்டிற்கு வரவேற்றது முதற்கொண்டு ஜேர்மனி ஐரோப்பாவிலேயே எந்த நாட்டிலும் இல்லாத அளவில் ஒன்றரை மில்லியன் அகதிகளுக்கு தஞ்சம் அளித்தது குறிப்பிடத்தக்கது.



அந்த நேரத்தில் Salzgitter 6000 அகதிகளுக்கு தஞ்சம் அளித்தது. ஆனால் இனி அங்கு அகதிகளுக்கு இடமில்லை.



இந்த செய்தி, தானும் தங்கள் இரட்டைப் பிள்ளைகளும் ஜேர்மனியிலும் தங்கள் கணவரான சமே வாடா நாட்டிற்கு வெளியிலும் வாழும் ஒரு சூழலை ஏற்படுத்தியுள்ளதாக கவலை தெரிவிக்கும் காட்யா அப்துல்லா போன்ற பெண்களின் துயரத்தை அதிகரித்துள்ளது..
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>




0 கருத்துகள்:

கருத்துரையிடுக