ஐக்கிய அமெரிக்காவில் நடைப்பெற்ற போர்ச்சூன்-அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள உலக பெண்களின் வழிகாட்டல் பங்கான்மையில் ஹேலிஸ் பில்சி நிறுவனத்தின் மூலோபாய வர்த்தக அபிவிருத்தியின் தலைவர் மனோஹரி அபயசேகர பங்கேற்றுள்ளார்.(sri Lankan female business leader participates fortune mentorship pogram)
குறிப்பாக 15 நாடுகளிலிருந்து கலந்துகோண்ட பெண் தலைவர்களில் மனோஹரி அபயசேகரவும் உள்ளடக்கப்பட்டுள்ளமை
விசேட அம்சமாகும்
மனோஹரி அபயசேகரவும் ஏனைய 18 பேரும் ஃபோர்ச்சூன் பலமான பெண்கள் சமூகத்தைச் சேர்ந்த நிறைவேற்று அதிகாரிகளுடன் இணைந்து வர்த்தக மற்றும் தலைமைத்துவத் திறன்களை அதிகரிப்பது தொடர்பில் பாணியாற்றவுள்ளதாகவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அமெரிக்கத் தூதுவர் அலெய்னா.பி.டெப்லிட்ஸ் கருத்து தெரிவிக்கையில், பெண்கள் வர்த்தக முயற்சியொன்றுக்கு தலைமைதாங்கும் சந்தர்ப்பம் கிடைத்தால் நிறுவனம், சமூகம் மற்றும் பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்திலும் நாம் அனைவரும் நன்மையடைவோம் என குறிப்பிட்டார்.
மேலும் மதிப்புக்குரிய இத்திட்டத்தில் பங்குபெற்றுவதற்கு அபயசேகர தெரிவுசெய்யப்பட்டிருப்பது தமக்கு மகிழ்ச்சியளிப்பதாகவும் சிறந்த பெறுபேறுகளை வழங்குவதன் மூலமாகஅவருடைய திறமையை வெளிக்காட்டுவதுடன், வளர்ந்துவரும் திறமையாளர்களுக்கு சேவையாற்றக்கூடிய வழிகாட்டியாகவும் அவரை வலுப்படுத்தும்’ என்றார்.
வர்த்தக மற்றும் முதலீட்டு உறவுகளை மறுசீரமைப்பதில் அபேசேகர ஈடுபட்டதன் ஊடாக ஹேலிஸில் 200 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான வருமானத்தை சம்பாதித்துக் கொடுத்துள்ளார்.
ஃபோர்ச்சூன்-அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள உலகப் பெண்கள் வழிகாட்டல் பங்கான்மையானது அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம், ஃபோர்ச்சூனின் மிகவும் பலமான பெண்கள்
மற்றும் முக்கியமான உலகக் குரல்களின் பங்கான்மை ஆகியவற்றை இணைத்த அரச தனியார் பங்கான்மைத் திட்டமாகும். அரச மற்றும் தனியார் துறைகளில் உள்ள அமெரிக்கத் தலைவர்கள் பெண்களின் பொருளாதார வலுப்படுத்தல்களுக்கு நிபுனத்துவம் வழங்கு
வதாக இந்தப் பங்கான்மை அமைகிறது. இந்தத் திட்டத்தின் பூர்த்தியில் வழிகாட்டலில் தமது நாடுகுளுக்குத் திரும்பும்போது வர்த்தகம் மற்றும் தலைமைத்துவ திறங்களை அதிகரித்தவராகவும் சமூகத்தில் சாதகமான மாற்றங்களை ஏற்படுத்துபவராகவும்
விளங்குவர்.
இந்த வருடம் பொஸ்னியா, ஹெர்சிகோவினா, கொலம்பியா, எகிப்து, பிஜி, கானா, இந்தியா, கென்யா, வடக்கு மக்கடோனியா, மலேசியா, நேபாளம், நைஜீரியா, போலந்து, ரஷ்யா, தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளிலிருந்து வளர்ந்துவரும் தலைமைத்துவ வழிகாட்டல்களில் பங்கேற்கின்றனர்.
இத்திட்டத்தில் பங்குபற்றிய 320ற்கும் அதிகமானவர்கள் அமெரிக்காவில் மதிப்புக்குரிய கம்பனிகளான கோல்ட்மான் சாக்ஸ், ஜொன்சன் அன்ட் ஜொன்சன், கார்டியன் லைப் மற்றும் அக்சென்சர் ஆகியவற்றின் வழிகாட்டிகளுடன் இணைந்து பணியாற்றுகின்றமை
குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக