நிலாவரை .கொம்

siruppiddy

புதன், 3 ஏப்ரல், 2019

உலகளவில் 200 கோடி அடிப்படை குடிநீர் வசதி இல்லா மக்கள்

தேவையான குடிநீர் கிடைக்காமல் உலகளவில் 200 கோடி பேர் பாதிக்கப்படுவதாக,  உலக சுகாதார அமைப்பும், ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியமான யூனிசெப்பும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் உள்ள 
யுனிசெப் அமைப்பில் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில், குடிநீர் பற்றாக்குறையால் சர்வதேச அளவில் 
மருத்துவமனைக்கு செல்லும் 15 சதவீதம் பேருக்கு  தொற்றுநோய் ஏற்படுவதாகவும், சுகாதாரமற்ற முறையில் பிறக்கும் 10 லட்சம் குழந்தைகள் உயிரிழப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் வளர்ந்த நாடுகளில் ஒவ்வொரு ஆண்டும் 17 மில்லியன் பெண்களுக்கு
 மேல்  தண்ணீர் மற்றும் சுகாதாரத்திற்கு போதுமான வசதிகள் இல்லாத மையங்களில் அல்லது மருத்துவமனைகளில் குழந்தை 
பிறக்கிறது என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் இதுபோன்ற நிலை அதிகம் இருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. உலகளவில் செயல்படும் சுகாதார
 வசதி மையங்களில் நான்கில் ஒரு பங்கு மையத்தில் அடிப்படை நீர் வசதி இல்லை என தெரிவித்துள்ளது. அதேபோல, 5ல் ஒரு பங்கு மையங்களில் சுகாதாரம் மிகவும் மோசமான நிலையில்
 உள்ளதாக உலக சுகாதார மையம் மற்றும் குழந்தைகள் நிதியமான யூனிசெப் தகவல் வெளியிட்டுள்ளது. இதன் காரணமாக உலகளவில் 200 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்
. அதேபோல
 சுகாதாரம் மற்றும் அடிப்படை குடிநீர் இல்லாததால் ஒரு வருடத்திற்கு 1 மில்லியனுக்கும் அதிகமாக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் நோய் தொற்று 
காரணமாக 26% குழந்தைகள் பிறந்தவுடனே இறந்து
 விடுவதாகவும், 11% குழந்தைகள் தாய்வழி தோற்று நோய் காரணமாக
 இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
. இந்த வருடம் 
மே மாதம் நடக்கவுள்ள உலக சுகாதார சபையில் மருத்துவமனையில் உள்ள 
அடிப்படை வசதிகள் மற்றும் அத்தியாவசிய குடிநீர், கழிப்பறை வசதிகள் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து ஆலோசிக்க 
திட்டமிடப்பட்டுள்ளதாக உலக சுகாதார மையத்தின் இயக்குனர் கூறியுள்ளார்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக