நிலாவரை .கொம்

siruppiddy

செவ்வாய், 11 மே, 2021

இங்கிலாந்தை சேர்ந்த பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த தினம் மே 12-ந்திகதி

இங்கிலாந்தை சேர்ந்த பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த தினமான மே 12-ந்திகதியை உலக செவிலியர் தினமாக கொண்டாட உலக செவிலியர் அமைப்பு முடிவு செய்து, கொண்டாடி வருகிறது.
மருத்துவ பணிகளில் இன்றியமையாத ஊழியர்கள் செவிலியர்கள். செவிலியர்கள் செய்யும் பணி எவ்வளவு கடினமானதாக இருந்தாலும், அது அவர்களுக்கு ஒருபோதும் ஒரு சுமையாக எப்போதும் இருந்ததில்லை. உலக செவிலியர் அமைப்பு, 1965-ம் ஆண்டில் இருந்து
 பொதுமக்களுக்கு செவிலியர்கள் ஆற்றி வரும் உன்னத தொண்டை உலகரிய உணர்த்தும் விதமாக சர்வதேச 
செவிலியர் தினத்தை 
கொண்டாடி வருகிறது. 1974-ம் ஆண்டு ஜனவரி மாதம் நவீன செவிலியர் முறையை உருவாக்கிய இங்கிலாந்தை சேர்ந்த பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த தினமான மே 12-ந்தேதியை உலக செவிலியர் தினமாக கொண்டாட உலக செவிலியர் அமைப்பு முடிவு செய்து, 
கொண்டாடிவருகிறது.
உலகத்தையே தனது கோர பிடிக்குள் வைத்துள்ள கொரோனா பெருந்தொற்று காலமான இந்த காலக்கட்டத்தில், நம் சமூகத்திற்கு செவிலியர்களின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. கொரோனா தொற்றுக்கு ஆளான ஒருவரின் ரத்த சொந்தங்களே
 அவர்களது அருகே சென்று நின்று பார்க்க அஞ்சுகிற இந்த காலக்கட்டத்தில் தனது உயிரை துச்சம் என நினைத்து முன்களத்தில் நின்று போராடி வருபவர்களில் செவிலியர்களின் பங்கு அளப்பரியதாகும். இதை நாம் யாரும் மறுக்கவும் முடியாது, மறந்து 
விடவும் கூடாது. 
முன்களத்தில் நின்று போராடும் செவிலியர்கள் பலரும் தொற்றுக்கு ஆளாகி தங்களது இன்னுயிரை இழந்து இருக்கிறார்கள். அவ்வாறு இருந்தும், செவிலியர்கள் தங்களது பணியை செவ்வனே செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். அதனால் தான் அவர்களை நமது 
மருத்துவத்தின் உயிர் நாடி என்கிறோம். கொரோனா சிறப்பு பணிகளை சுழற்சி முறைகளில் செவிலியர் முடித்து கொண்டு வீட்டுக்கு போனாலும், தனிமைப்படுத்துதல் போன்ற காரணங்களால் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினரிடம் சரியாக நேரம் ஒதுக்க
 முடியாமல் இருக்கக் கூடிய கடினமான சூழ்நிலையை தான் இன்றைய காலக்கட்டதில் அவர்கள் எதிர்கொண்டு வருகிறார்கள். கொரோனா சிறப்பு பணியால் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக செவிலியர்கள் பலர் தங்களது குழந்தையை கூட கொஞ்ச முடியாத நிலைக்கு ஆளாக்கப்பட்டு
 இருக்கிறார்கள்.
மருத்துவத்தின் இதய துடிப்பாக இருக்கும், இவர்களது தூய சேவையில், நம்பிக்கையில் இயங்குகிறது உலகம். ஆகையால் இந்த உலக செவிலியர் தின நன்னாளில் நாம் அனைவரும் அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி சொல்வோம்.

நிலாவரை.கொம் செய்திகள் >>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக