நிலாவரை .கொம்

siruppiddy

புதன், 31 ஜனவரி, 2018

இளவரசர் எட்வர்ட் இன்று மாலை இலங்கை வந்தார்

எதிர்வரும் 4ஆம் திகதி கொண்டாடப்படும் இலங்கையின் 70ஆவது சுதந்திர தினத்தில் சிறப்பு அதிதியாக கலந்து கொள்ளும் பிரித்தானிய அரச குடும்பத்தின் பிரதிநிதியான இளவரசர் எட்வர்ட்
 இன்று மாலை இலங்கை வந்தார்
இளவசர் எட்வர்ட் பிரித்தானியாவின் இரண்டாவது எலிசபெத் மகாராணி மற்றும் எடிம்பரே கோமகன் பிலிப்ஸ் ஆகியோரின் இளைய புதல்வர் என பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள 
அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இலங்கை வரும் இளவரசர் சமூக நலன்புரி நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளதுடன் சில இடங்களுக்கும் விஜயம் செய்ய உள்ளதாக உயர்ஸ்தானிகராலயம் கூறியுள்ளது.இதற்கு அமைய இளவரசர் எட்வர்ட் மற்றும் அவரது துணைவியார் இளவரசி சோபி ஆகியோர் நாளைய தினம் கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் செய்து வழிபாடுகளில்
 ஈடுபட உள்ளனர்.
அன்றைய தினம் அவர்கள் பேராதனை தாவரவியல் பூங்காவுக்கும் விஜயம் செய்ய உள்ளனர்.அத்துடன், இளவரசர் மற்றும் இளவரசி ஆகியோர் எதிர்வரும் 3 ஆம் திகதி இரத்மலானை பார்வையற்றோர் பாடசாலையில் நடைபெறும் மாணவர்களின் கண்காட்சி மற்றும் கலாசார நிகழ்ச்சிகளிலும் கலந்து 
கொள்ள உள்ளனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக